தினமலர் முதல் பக்கம்
| Get Font |  RSS Feed
 
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
 
 
 

முதல் பக்கம் > வரவிருக்கும் பண்டிகை > நாக பஞ்சமி
நாக பஞ்சமி
நாக சதுர்த்தியும், கருட பஞ்சமியும் அடுத்தடுத்த நாள் வரும் நாக சதுர்த்தியன்று புற்றுக்குப் பூஜை செய்து, அந்த மண்ணை எடுத்து வந்து, மறுநாள் கருட பஞ்சமியில் வழிபடுவர். சகோதரர்களின் நலம் வேண்டி சகோதரி பூஜிக்கும் பண்டிகை. அன்றைய தினம் சகோதரிகள் சகோதரர்களுக்குத் தாம்பூலம் கொடுத்து மகிழ்வார்கள். கச்யப முனிவருக்கும் கத்ருவுக்கும் நாகங்கள் பிள்ளைகளாகப் பிறந்தனர். பரிட்சித்து மன்னனை சாபத்தால் தட்சன் என்ற நாகம் எலுமிச்சை வடிவில் சென்று தீண்டியது. மன்னன் மடிந்தான். இதனால் கோபம் கொண்ட பரிட்சித்துவின் மகன் ஜனமேஜயன் சர்ப்ப யாகம் செய்து நாகங்களை தானாகவே வரச் செய்து யாக குண்ட நெருப்பில் விழ வைத்து அழித்தான். ஆஸ்திக முனிவர் யாகத்தைத் தடுத்து மீதமிருந்த சர்ப்பங்களைக் காப்பாற்றினார். அந்த நாளே நாக சதுர்த்தி. ஆவணி மாதம் வளர்பிறையில் வரும் சதுர்த்தி நாக சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் புற்றுக்குப் பால் ஊற்றி விரதம் இருந்து நாக பூஜை செய்ய வேண்டும். புற்று மண்ணைப் பிரசாதமாக சிலர் தரித்துக் கொள்வர். சில குடும்பங்களில் வாயிற்படியின் இருபுறங்களிலும் நாகங்களின் உருவத்தை மஞ்சள் சந்தனக் கலவையால் வரைந்து பஞ்சால் மாலை செய்து போட்டு வணங்குவது வழக்கம். வாசற்படிக்கு அருகில் நாகத்தைப் போலக் கோலம் போட்டு பூஜை செய்வார்கள். ஒன்பது நாகர்களின் பெயரைச் சொல்லி புற்றிற்கும் பால் விட்டு ஆராதனை செய்தால் நாக தோஷங்கள் நீங்குவதாக ஐதீகம்.

ஆடி மாதம் வளர்பிறையில் வரும் பஞ்சமியில் நாக பஞ்சமி விரதத்தைத் தொடங்க வேண்டும், ஒவ்வொரு மாதமும் வளர் பிறை பஞ்சமியில் விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக புதிதாகத் திருமணம் புரிந்த பெண்கள் மேற்கொண்டால் மிகவும் விசேஷம். காலையில் நீராடி உடலைத் தூய்மைப் படுத்திக் கொண்டு வழக்கமான உடைகளை உடுத்திக் கொண்டு பூஜையறையில் அமர வேண்டும். ஐந்து வண்ணங்களில் கோலம் போட்டு அதன் மேல் ஒரு பலகையை வைத்து, அதன் மேல் வாழை இலை போட்டு அதில் பச்சரிசியைக் கொட்டிப் பரப்ப வேண்டும். அந்த அரிசி பரப்பில் நடு நாயகமாக ஆதிசேஷன் வடிவத்தை வைக்க வேண்டும். அவரவர் சக்திக்கு ஏற்றபடி தங்கள், வெள்ளி, தாமிரம் அல்லது மண் அவற்றில் ஏதாவது ஒன்றால் செய்யப்பட்ட பாம்பு வடிவத்தை வைக்கலாம். அதற்கு முன்னால் மஞ்சள் தூளில் சிறிது தண்ணீர் விட்டு விரல்களால் பிடித்து சிறியதாக கூம்பு வடிவம் ஒன்றைச் செய்து அதையும் வைக்க வேண்டும். இந்த மஞ்சள் வடிவை கவுரி தேவியாக நினைத்து மனமுருக வேண்டிக் கொள்ளுங்கள். அம்மன் பாடல்கள் தெரிந்தால் சொல்லலாம். பால் நைவேத்தியம் செய்து விட்டு தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்ற வேண்டும். மூன்று அல்லது ஒன்பது முறை வலம் வந்து வணங்க வேண்டும். பூஜை முடியும் வரை எதுவும் சாப்பிடாமல் இருந்தால் போதும்.

குழந்தைப் பேறு இல்லாதவர்கள் நாக உருவத்தை உலோகத்தால் விக்கிரக வடிவில் அமைத்து அதை தண்ணீரிலும் நெல்லிலும் வைத்துப் பூஜை செய்து பின்னர் அரச மரத்தின் அடியில் பிரதிஷ்டை செய்து வழிபடுவார்கள். இதனால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். நாக தோஷம் உள்ளவர்களும், ஜாதகத்தில் ராகு மற்றும் செவ்வாய் தோஷம் உள்ளவர்களும் நாகராஜா பூஜையைச் செய்வது நல்லது. சுவரிலோ, காகித அட்டையிலோ அல்லது வேறு பொருள் மீதோ நாக உருவத்தை வரைய வேண்டும். அமாவாசைக்குப் பிறகு வரும்  சஷ்டி திதியன்று அப்படத்துக்கு புஷ்பங்களால் அர்ச்சனை செய்து பூஜை செய்யலாம். கஞ்சி வடிக்காத அன்னத்தையும் வாழைப் பழத்தையும் நிவேதனமாக வைக்க வேண்டும். பூஜை முடிந்த பிறகு உப்பில்லாமல் சாப்பிடலாம். நாகராஜா பூஜை செய்வதால் சர்ப்ப தோஷங்கள் போன்றவை நீங்கி நன்மக்கட்பேறு, செல்வம், ஆரோக்கியம் போன்ற பலன்கள் கிட்டும்.
 
  தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
 
 
 
 
 
 
 
 
Copyright 2015 www.dinamalar.com. All rights reserved.