Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>காஞ்சிபுரம் மாவட்டம்>காஞ்சிபுரம் சிவன் கோயில்
 
காஞ்சிபுரம் சிவன் கோயில் (498)
 
அருள்மிகு மதங்கீசம் திருக்கோயில்
காஞ்சிபுரம்
பெரிய காஞ்சி மிஷன் மருத்துவமனைக்கு வடகிழக்கில் சாலைக்கு வடவண்டையில் உள்ளது, மேற்கு நோக்கிய மூலவர் மதங்கீஸ்வரர். மதங்க முனிவர் ஐம்ஈலனை அடக்க வேண்டிப் பூசித்த தலம், பல்லவர்களால் இக்கோயில் அமைக்கப்பட்டது. சிங்கம் தாங்கிய தூண்கள் உள்ளன.
அருள்மிகு திரிபுரேசம் திருக்கோயில்
காஞ்சிபுரம்
முட்புராரிக் கோட்டம், திரிபுராதிகள் தங்களுடைய முப்புரங்களைச் சிவபெருமான் எறிந்த பின்னர் சிவபெருமானிடம் எங்கள் மூவருள் இருவர் உனது வாயிற் காவலாளியாகவும், ஒருவன் மத்தன முழுக்கவுமாக அருள் செய்ய வேண்டுமென்று பிரார்த்திக்கத், திரிபுராகி காஞ்சியில் எம்மை வழிபட்டப்பின் அப்பணி கிடைக்குமென, அவ்வண்ணமே பூசித்து அருள் பெற்றத் தலம்.
அருள்மிகு தீர்த்தேசம் திருக்கோயில்
காஞ்சிபுரம்
பெரிய காஞ்சி சர்வ தீர்த்தக்கரையில் மேல்பால் உள்ளதுமான இக்கோயில் கிழக்கு நோக்கிய சன்னிதியில் மூலவர் தீர்த்தேஸ்வரர் காட்சியளிக்கிறார். திருவே கம்பர் காமாட்சியம்மையாரைத் தம்மைத் தழுவுதற் பொருட்டு அழைத்தபோது, அண்டத்தின் அகத்தும் புறத்தும் உள்ள எல்லாத் தீர்த்தங்களும் நதியுருவங் கொண்டு காஞ்சிப்பதியின் மேற்குத் திசையில் வந்தது. அம்மையார் இறைவனைத் தழுவிக் கொண்ட பின்னர் வேகந்தணிந்து அங்கேயே தங்கி, இறைவனைத் தீர்த்தநாதன் என்னும் பெயரால் வழிபாடு செய்ததால் இத்தலத்திற்கு இப்பெயர் வரலாயிற்று.
அருள்மிகு பச்சிமாலையம் திருக்கோயில்
காஞ்சிபுரம்
திருமால் காஞ்சி வீரட்டகாசத்திற்கு எதிரில் சக்கரதீர்த்தம் என்னும் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கித் தவம் செய்து கொண்டிருந்தார். அவ்விடம் பச்சை வண்ணர் ஆலயம் எனப்படுகிறது. திருமேற்றளியில் திருமால் சிவசாரூபம் பெற்றதாகச் காஞ்சி மகிமை என்னும் நூல் கூறுகிறது. அதில் பச்சிமேச்சரர் என்றும் காணப்படுகிறது.
அருள்மிகு பணாதரேசுரம் திருக்கோயில்
காஞ்சிபுரம்
பெரிய காஞ்சி ஆலடிப் பிள்ளையார் கோயில் தெருவில், வேகவதி நதியின் வடகரையில் ஆதிபதேசம் என்னும் தலத்திற்குத் தெற்கேயுள்ளது. கிழக்கு நோக்கிய சன்னிதியில் மூலவர் பணாதரேஸ்வரர். கருடனால் தம் குலம் அழிதலைக் கண்ட பாம்புகள் காஞ்சியில் பணாõரேசப் பெருமனைத் தாபித்துப் பூசித்துப் தமது துன்பத்தைப் கூறி முறையிட்டன. பெருமான் மகிழ்ந்து அப்பாம்புகளை ஆபரணமாக அணிந்து கொண்டார். பின் அப்பாம்புகள் கருடனைக் கண்டு ஏன் கருடா சுகமோ ? என்று கேட்டன.
அருள்மிகு பராசரம் திருக்கோயில்
காஞ்சிபுரம்
பெரிய காஞ்சி காந்திசாலை செட்டித் தெருக் கேõடியில் உள்ள வழக்கறுத்தீசர் ஆலயத்தினுள் தென்பக்கத்தில் கிழக்கு நோக்கிய சன்னிதியில் மூலவர் பராசரேஸ்வரர் என்னும் பாதாளீஸ்வரர். பராசர முனிவர் பூசித்துத் தம் தந்தையாரைக் கொன்ற அரக்கர் கூட்டத்தை அழித்தற்கு வரம் பெற்ற தலம். இக்கோயில் 2-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் உள்ளது.
அருள்மிகு பிறவாஸ்தானேஸ்வரர் திருக்கோயில்
பிறவாத்தானம் காஞ்சிபுரம்
பெரிய காஞ்சியில் வெள்ளைக்குளம் தென்கரையில் இக்கோயில் மேற்கு நோக்கி உள்ளது. வாமதேவர் என்னும் முனிவர் தாயினது கருப்பத்தில் இருக்கும் போதே பிறவிக்கு அஞ்சி இறைவனை வழிபட, இறைவன் கட்டளைப்படி பிறந்தபின் காஞ்சியில் இலிங்கம் தாபித்துப் பூசித்துப் பிறவி நீங்கப் பெற்ற தலம். பல்லவர் காலத்து கோயிலாகும்.
அருள்மிகு புண்ணியகோடீச்சரம் கோயில்
காஞ்சிபுரம்
சின்ன காஞ்சிபுரம் செட்டித் தெருவிற்கு தென் கிழக்கில் இக்கோயில் கிழக்கு நோக்கிய சன்னதியில் மூலவர் புண்ணியகோடீஸ்வரர். அம்மன் புவனேஸ்வரி, திருமால் காஞ்சியில் ஒரு தடாகத்தை உண்டாக்கி இலிங்கம் தாபித்து பிரமனையும், பதினான்கு உலகங்களையும் படைக்க விரும்பித் சிவபிரானை அருச்சித்து வரதா வரதா என இறைவனைப் பல முறை அழைத்தமையால், இறைவனும் காட்சியளித்தார் அவர் கேட்ட வரங்களையும் தந்தார், வரதா என்று எம்மை அழைத்தமையால் வரதராசன் என்று பெயர் பெற்று விளங்குக என்றும் வரம் அருளிய தலம். அதனால் இந்த சின்ன காஞ்சியில் வரதராஜன் என்ற பெயரில் பெரிய கோயிலாக விளங்குகிறது.
அருள்மிகு மஞ்சள் நீர்க்கூத்தர் கோயில்
காஞ்சிபுரம்
சித்தீசம் என வழங்கப்படும் இத்தலம் மூங்கில் மண்டபத்தை அடுத்து மஞ்சள் நீர்க்கால்வாயில் வடகரையில் கிழக்கு நோக்கிய சன்னிதியில் மூலவர் சுயம்புலிங்கமாக சித்தீஸ்வரர் என்னும் மஞ்சள் நீர்கூத்தர், காமாட்சி தேவி மஞ்சள் காப்பணிந்து முழுகிய நீர், மஞ்சள் நீர்நதியாகப் பெருகிச் செல்லுங்கால் இறைவனார் மகிழ்ந்து அந்நதிக்கரையில் இலிங்கமாகத் தோன்றினார். அதனால் இறைவனுக்கு மஞ்சள்நீர்கூத்தர் என்னும் திருப்பெயர் உண்டாயிற்று.
அருள்மிகு மணிகண்டீசுரம் திருக்கோயில்
காஞ்சிபுரம்
சின்ன காஞ்சியில் யதோத்காரிப் பெருமாள் கோயிலுக்குச் சிறிது கிழக்கே, சாலைக்கு தென்புறம் உள்ளது, மேற்கு நோக்கிய சன்னிதியில் மணிகண்டீச்சுரர், நந்தி சற்றுப் பெரிது, திருமால், தேவர்கள் காஞ்சியில் மணிகண்டநாதன் என்னும் பெயரால் ஒர் இலிங்கம் தாபித்துப் பூசித்து இறைவனிடம் முன்புச் செய்த பாவம் நீங்கப் பெற்று, பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்துண்டு, இறவாப் பெருநலம் பெற்ற தலம்.
<< Previous  40  41  42  43  44  45  46  47  48  49  50  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar