Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>தஞ்சாவூர் மாவட்டம்>தஞ்சாவூர் சிவன் கோயில்
 
தஞ்சாவூர் சிவன் கோயில் (636)
 
அருள்மிகு பஞ்சவர்ண ஈசுவரர் திருக்கோயில்
அருள்மிகு பஞ்சவர்ண ஈசுவரர் திருக்கோயில் திருவிடைமருதூர் தஞ்சாவூர்
திருவிடைமருதூருக்கு தென்கிழக்கில் 12 கி.மீ
மணிக்குடி என்று வழங்குகின்றது. பஞ்சவர்ண ஈசுவரர்-பெரியநாயகி கோயில்.
அருள்மிகு சுவேதாரண்ய ஈசுவரர் திருக்கோயில்
அருள்மிகு சுவேதாரண்ய ஈசுவரர் திருக்கோயில் ஏரவாஞ்சேரி கும்பகோணம்
கும்பகோணம்/ ஏரவாஞ்சேரி சாலையில் ஏரவாஞ்சேரிக்கு முன்பாக உள்ளது.
18 புதுக்குடி என்று வழங்குகிறது. சுவேதாரண்ய ஈசுவரர்-ஆனந்தவல்லி
அருள்மிகு காளஹஸ்தீசுவரர் திருக்கோயில்
அருள்மிகு காளஹஸ்தீசுவரர் திருக்கோயில் கத்திரி நத்தம், தஞ்சை.
தஞ்சை அம்மாபேட்டை வழியில் புன்னை நல்லூரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது கத்திரி நத்தம்.
கத்திரி நத்தம், காளஹஸ்தீசுவரரைத் தரிசிப்பது விசேஷம். திங்கட்கிழமை நாளில் இங்குள்ள திருக்குளத்தில் நீராடி வழிபட்டால் ராகு-கேது தோஷம் நீங்கும். திருமணத்தடை விலகும். இவ்வூர் தென் காளஹஸ்தி என்றும் போற்றப்படுகிறது.
அருள்மிகு உடையவேதீஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு உடையவேதீஸ்வரர் திருக்கோயில், கீழ மருத்துவக்குடி, தஞ்சாவூர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது ஆடுதுறை. இங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு பயணித்தால், கீழ மருத்துவக்குடி கிராமத்தை அடையலாம். காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள இந்த அழகிய ஊரில், உடைய வேதீஸ்வரர் எனும் அற்புதமான கோயில் உள்ளது.
சோழர்களின் ஆட்சியில், இங்கே மிகப் பெரிய மருத்துவச் சாலை அதாவது மருத்துவமனை இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கிராமத்தில் உடைய வேதீஸ்வரர் எனும் திருநாமத்துடன் சிவனார் அருளாட்சி செய்யும் கோயில் உள்ளது. இங்கு அம்பாளின் திருநாமம் மாதுமை அம்பாள்.
அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில்
அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில், நாகரசன் பேட்டை, கும்பகோணம்.
கும்பகோணத்தில் இருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் உள்ளது நாகரசன் பேட்டை. கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சேறைக்குப் பேருந்து மூலம் சென்று, அங்கிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள நாகரசன் பேட்டைக்கு ஆட்டோ மூலம் செல்லலாம்.
இங்குள்ள இறைவன் மிகுந்த வரப்ரசாதி, இத்தலத்துக்கு வந்து நாகநாத ஸ்வாமியை வழிபட்டால், விஷப் பாம்புகளால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அது மட்டுமல்லாமல் நாகதோஷத்தால் புத்திரபாக்கியம் இல்லாமல் கஷ்டப்படுபவர்கள், இந்தத் தலத்துக்கு வந்து ராகநாத ஸ்வாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபட்டால், நாகதோஷம் நிவர்த்தியாகி, புத்திர பாக்கியம் கிடைக்கப் பெறுவார்கள். இந்தக் கோயிலுக்கு முன்பாக வெளவால் நந்தி மண்டபத்தின் அமைப்பைக் கொண்டுதான், இந்த கோயில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டதாகத் தெரிய வந்தது. இந்தக் கோயிலில் ராகநாதஸ்வாமியுடன், ஜ்வரஹரேஸ்வரர் என்ற திருப்பெயர் கொண்டு அருள்புரியும் இறைவனையும் நாம் தரிசிக்கலாம். கடுமையான காய்ச்சலால் அவதிப்படுபவர்கள், மிளகு ரசம் வைத்து, ஜ்வரஹரேஸ்வரருக்கு நைவேத்தியம் செய்து பிரசாதமாகப் பருகினால், எப்பேர்ப்பட்ட கடுமையான காய்ச்சலும் விரைவில் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.
அருள்மிகு பாணபுரீஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு பாணபுரீஸ்வரர் திருக்கோயில், குடந்தை, தஞ்சாவூர்.
குடந்தைக்கு வடகிழக்கே காவிரியாற்றின் தென்கரையில் கிழக்கு நோக்கி உள்ளது பாணபுரீஸ்வரர் கோயில்.
பிரளய காலத்தில் கலசத்தில் பீஜத்தினை வைத்து மிதக்க விட்ட ஈசன், பிரளயகாலம், முடிந்த பின்னர் இந்த இடத்திலிருந்துதான் அம்பு எய்து, கும்பமாகிய கலசத்தினை உடைத்தார். இங்கிருந்து பாணம் எய்ததால் இந்த இடம் பாணபுரியானது. பாணம் எய்த இறைவன் பாணபுரீசர் ஆனார் அம்பாளுக்கு சோமலாம்பிகை என்று பெயர். யோகம் செய்யும்போது வடகிழக்கே சந்திரகலையில் அமுதம் ஒழுகுவதாக திருமந்திரத்தில் காணலாம். அதைச் செய்யும் அன்னை சோமலாம்பிகை எனப்படுகிறார். சிறிய கோயில் எனினும் திருமேனிகள் மிகவும் அழகானவை.
<< Previous  62  63  64 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar