Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருவள்ளூர் மாவட்டம்>திருவள்ளூர் சிவன் கோயில்
 
திருவள்ளூர் சிவன் கோயில் (89)
 
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
இலுப்பாக்கம், பொன்னேரி வட்டம் திருவள்ளூர் மாவட்டம்
பொன்னேரிக்கு வடக்கே 8 கி.மீ.
இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் சிவகாமியம்மன். ஒரு கால பூஜை.
அருள்மிகு லாவணேஸ்வரர் திருக்கோயில்
கோளூர், பொன்னேரி வட்டம் திருவள்ளூர் மாவட்டம்
பொன்னேரிக்க வடக்கே 9 கி.மீ.
இக்கோயில் 106/92 அடி நீள, அகலம் கொண்டது. அம்மன் அமிர்தவல்லி. இக்கோயில் 1000 வருட முற்பட்டது. சோழர், சேரர், பாண்டிய கல்வெட்டுக்கள் உள்ளன.
அருள்மிகு திருவாலீஸ்வரர் திருக்கோயில்
அரசூர், பொன்னேரி வட்டம் திருவள்ளூர் மாவட்டம்
பொன்னேரிக்கு வடக்கே 5 கி.மீ.
இக்கோயில் 132 அடி நீளம், அகலம் கொண்டது. அம்மன் சௌந்தரவல்லி மற்றும் சுயம்பு ஹேரம்ப விநாயகர்.
அருள்மிகு நாகநாதேஸ்வரர் திருக்கோயில்
பெத்தநாகபுடி, பள்ளிப்பட்டு வட்டம் திருவள்ளூர் மாவட்டம்
சோளிங்கர்க்கு மேற்கே 12 கி.மீ.
ஒரு ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக மூர்த்தியாக உள்ளார். அம்மன் நாகவல்லி. இக்கோயிலின் வெளிசுவற்றில் உள்ள சுவரில் கிரந்தத்தில் கல்வெட்டுகள் அமைந்துள்ளன.
அருள்மிகு திருப்பலிஸ்வரர் திருக்கோயில்
திருப்பாலைவனம், பொன்னேரி வட்டம் திருவள்ளூர் மாவட்டம்
பொன்னேரிக்கு வடகிழக்கே 10 கி.மீ.
இக்கோயில் 600 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. கிழக்கு மேற்காக 506 அடியும், வடக்கு தெற்காக 550 அடியும், 5 நிலை ராஜகோபுரமும், இரண்டு பிரகாரங்களுடன் மூலவர் சுயம்புலிங்கமாக திருப்பலிஸ்வரர் கிழக்கு நோக்கியுள்ளார். அம்மன் லோகாம்பிகை தனிச்சன்னதியில் உள்ளார். விமானம் தூங்கானை மாட அமைப்புடையது. தலமரம் பாலை மரம், தீர்த்தம் அமிர்த புஷ்கரணி. பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமுதத்தினைத் தனித்து வந்து அசுரர்களை மறைந்து உண்ணக் கருதிய தேவர்கள் உண்ணுதற்கு முன் இறைவனை வழிபட்டு உண்ணுதல் தான் முறையெனக் கருதி அமுதத்தின் ஒரு பகுதியை லிங்க வடிவில் அமைத்து வழிபட்ட இடமே திருப்பாலைவனம். <உள்பிரகாரத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, சுப்ரமணியர், பிட்சாண்டவர், மார்க்கண்டேயர், வாசுகி, வீரபத்திரர், நால்வர், அனுமன், துர்க்கை, நடராஜர் உள்ளனர். இத்தல இறைவன் அமுதத்தினால் ஆனவர் என்பதால் வெப்பத்தன்மையுடைய பொருட்களால் அபிசேகம் செய்வதில்லை. பால், தயிர், இளநீர், பன்னீர், தவிர வேறெதையும் பயன்படுத்துவதில்லை. இக்கோயில் இராஜேந்திர சோழ மன்னனால் கட்டப்பட்டது. கல்வெட்டுக்கள் 71 உள்ளன. மூன்று கால பூஜை. பங்குனி மாதத்தில் பிரமோற்சவம் நடைபெறுகிறது
அருள்மிகு சாமஈஸ்வரர் திருக்கோயில்
புலிகட், பொன்னேரி வட்டம் திருவள்ளூர் மாவட்டம்
சென்னைக்கு வடக்கே 42 கி.மீ.
இக்கோயில் 60 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 18 அடி உயர ராஜகோபுரம், இரண்டு பிராகரங்களுடன் இறைவன் சுயம்புலிங்கமாக உள்ளார். அம்மன் ஆனந்தவல்லி. 1100 வருட முற்பட்ட கோயில். உள்பிரகாரத்தில் பரிவார மூர்த்திகள் உள்ளன. இரண்டு கால பூஜை.
அருள்மிகு திருமாலீஸ்வரர் திருக்கோயில்
கட்டாவூர், பொன்னேரி வட்டம் திருவள்ளூர் மாவட்டம்
பொன்னேரிக்கு வடக்கே 3 கி.மீ.
இக்கோயில் 7 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் சுந்தரவல்லி.
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
வஞ்சிவாக்கம், பொன்னேரி வட்டம் திருவள்ளூர் மாவட்டம்
பொன்னேரிக்கு வடகிழக்கே 8 கி.மீ.
இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில்
ஆசனபுதூர், பொன்னேரி வட்டம் திருவள்ளூர் மாவட்டம்
பொன்னேரிக்கு வடகிழக்கே 6 கி.மீ.
இக்கோயில் 7 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோயில்
பிரளயம்பாக்கம், பொன்னேரி வட்டம் திருவள்ளூர் மாவட்டம்
பொன்னேரிக்கு வடகிழக்கே 11 கி.மீ.
ஆரணியாற்றின் வடகரைப் பகுதியில் இக்கோயில் 150 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது., கிழக்கு நோக்கிய மூலவர் காளத்தீஸ்வரர்.
<< Previous  1  2  3  4  5  6  7  8  9  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar