Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருவள்ளூர் மாவட்டம்>திருவள்ளூர் சிவன் கோயில்
 
திருவள்ளூர் சிவன் கோயில் (89)
 
அருள்மிகு ராமநாதஈஸ்வரர் திருக்கோயில்
அத்திப்பட்டு, பொன்னேரி வட்டம் திருவள்ளூர் மாவட்டம்
மீஞ்சூருக்கு தென்கிழக்கே 4 கி.மீ.
இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் சதயம்மன். 250 வருட முற்பட்ட கோயில். கல்வெட்டுக்கள் உள்ளன. ஒரு கால பூஜை.
அருள்மிகு திருமணங்கீஸ்வரர் திருக்கோயில்
மேலூர், பொன்னேரி வட்டம் திருவள்ளூர் மாவட்டம்
சென்னையிலிருந்து 35 கி.மீ.
வள்ளூர் இக்கோயில் ஒரு பிரகாரத்துடன் மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் திரிபுரசுந்தரி தலவிருட்சம் சுரக்கொன்னை. கல்வெட்டுக்கள் பல உள்ளன.
அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்
சோழவரம், பொன்னேரி வட்டம் திருவள்ளூர் மாவட்டம்
பொன்னேரிக்கு தெற்கே 14 கி.மீ.
இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 30 அடி <உயர கோபுரத்துடன், மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் அகிலாண்டேஸ்வரி.
அருள்மிகு இந்திரேஸ்வரர் திருக்கோயில்
ஆங்காடு, பொன்னேரி வட்டம் திருவள்ளூர் மாவட்டம்
பாடியநல்லூர்க்கு வடக்கே 4 கி.மீ.
இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் கிழக்கு நோக்கியும் அம்மன் பார்வதியம்மனும் காட்சியளிக்கின்றனர். சோழர் கால கட்டிடம் தேவேந்திரன் வழிபட்டதால் இத்தல இறைவனுக்கு இந்திரேஸ்வரர் என்று பெயர்.
அருள்மிகு சம்பங்கிபிட்சாண்டேஸ்வரர் திருக்கோயில்
ஆரணி, பொன்னேரி வட்டம் திருவள்ளூர் மாவட்டம்
பொன்னேரிக்கு மேற்கே 12 கி.மீ.
ஆரணியாற்றின் கரையில் இக்கோயில் 300 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். 600 வருட முற்பட்ட கோயில். மேலும் இவ்வூரில் 600 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 30 அடி உயர கோபுரத்துடன் விளங்கும் சாமுண்டேஸ்வரி திருக்கோயில் மற்றும் ஆதிகேசவ பெருமாள் கோயிலும் உள்ளது.
அருள்மிகு நந்தீஸ்வரர் திருக்கோயில்
மணவூர், பொன்னேரி வட்டம் திருவள்ளூர் மாவட்டம்
திருவாலங்காட்டிற்கு தென்கிழக்கே 4 கி.மீ.
இக்கோயில் 3.00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் ஆனந்தவல்லி, ஆடினது ஆலங்காடு, அமர்ந்தது தக்கோலம், மணம் பூண்டது மணவூர். ஆயிரம் வருட முற்பட்ட சோழர் கால கோயில் இரண்டு கால பூஜை. வைகாசி மாதம் பிரமோற்சவம் நடைபெறுகிறது. மேலும், இவ்வூரில் ஸ்ரீ விஜயராகவ பெருமாள் திருமகள், பூமாதேவியுடன் காட்சியளிக்கிறார்.
அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்
அருங்குளம், பொன்னேரி வட்டம் திருவள்ளூர் மாவட்டம்
திருத்தணியிலிருந்து வடகிழக்காக 10 கி.மீ
நகரியாற்றின் மேற்கு கரையில் இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் ஒரு பிரகாரத்துடன் மூலவர் 3 அடி உயரலிங்கமாக அகஸ்தீஸ்வரர் காட்சியளிக்கிறார். இங்குள்ள உற்சவர் சந்திரசேகரர் மிகவும் அழகானவர். ஆயிரம் வருடத்திற்கு முற்பட்ட கோயில். இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. மே<லும் இவ்வூரில் ஸ்ரீ கல்யாண வரதராஜப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
நபலூர், பொன்னேரி வட்டம் திருவள்ளூர் மாவட்டம்
திருத்தணிக்கு கிழக்கே 8 கி.மீ
நகரியாற்றின் மேற்கு கரையில் இக்கோயில் -174 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூன்று பிரகாரத்துடன் மூலவர் பிரகாரத்துடன் மூலவர் சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கிறார். இத்தலத்திற்கு மாணிக்கவாசகர் தரிசனம் செய்த தலம், இரண்டு கால பூஜை, மார்கழி திருவாதிரை உற்சவம் நடைபெறுகிறது.
அருள்மிகு அம்பலீஸ்வரர் திருக்கோயில்
நெமிலி, பொன்னேரி வட்டம் திருவள்ளூர் மாவட்டம்
திருத்தணிக்கு வடகிழக்கே 12 கி.மீ
நகரியாற்றின் மேற்கு கரையில் இக்கோயில் 15 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 700 வருட முற்பட்ட கோயில் சோழர் கால கட்டடப்பணி, ஒரு கால பூஜை, மேலும், இவ்வூரில் ஸ்ரீ வைகுந்த பெருமாள் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.
அருள்மிகு சோலீஸ்வரர் திருக்கோயில்
ஆற்காட்குப்பம், பொன்னேரி வட்டம் திருவள்ளூர் மாவட்டம்
திருத்தணிக்கு கிழக்கே 10 கி.மீ.
நகரியாற்றின் கிழக்கே இக்கோயில் 38 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக வட்டவடிவில் காட்சியளிக்கிறார். சோழர்கால கட்டடப்பணி, ஒரு கால பூஜை மார்கழி திருவாதிரை உற்சவம் நடைபெறுகிறது.
<< Previous  3  4  5  6  7  8  9  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar