Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு திருநிலை பெரியாண்டவர் ஆலயம் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு திருநிலை பெரியாண்டவர் ஆலயம் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சுயம்புலிங்கம்
  உற்சவர்: பெரியாண்டவர்
  அம்மன்/தாயார்: ANGALAPARAMESWARI
  தல விருட்சம்: VILVA MARAM
  தீர்த்தம்: SITHAMIRDHA THEERTHAM
  ஆகமம்/பூஜை : சிவாகமம்
  புராண பெயர்: THIRUNILAI
  ஊர்: THIRUNILAI
  மாவட்டம்: காஞ்சிபுரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஒவ்வொரு பெளர்ணமி தினத்தில் மாலைப் பொழுதில் சிறப்பு அபிஷேகமும், அர்ச்சனை, ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன. பூஜை முடிந்தவுடன் அன்னதானமும் இங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை வேளையில் சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், மஹாசிவராத்திரி விழக்களும் இங்கு மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன  
     
 தல சிறப்பு:
     
  சக்தியின் சூலாயுதம் திருநிலையில் வீழ்ந்த போது 21 மண் உருண்டைகள் சிதறி வீழ்ந்து அவை சிவகணங்களாக மாறிய தலம்  
     
திறக்கும் நேரம்:
    
 6.00 AM TO 08.00 AM 4.00 PM TO 8.30 PM -NORMAL DAYS 
   
முகவரி:
   
  திருநிலை கிராமம், ஒரகடம் போஸ்ட் செங்கல்பட்டு வட்டம் காஞ்சீபுரம் மாவட்டம், PIN - 603109,PIN-603109  
   
போன்:
   
  ?????????????? ?? ????????: 9842740957. 
    
 பொது தகவல்:
     
  காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு வட்டத்தில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலமான திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ஆலயத்திலிருந்து சுமார் 8 கி.மி. தொலைவில் திருநிலை கிராமம் உள்ளது. செங்கல்பட்டிலிருந்து கிழக்கே 14 கி.மி தொலைவிலும், திருப்போரூரிலிருந்து மேற்கே 12 கி.மி. தொலைவிலும் இத்தலம் உள்ளது. திருக்கழுக்குன்றத்தில் இருந்து திருநிலைக்கு பேருந்து தடம் எண் T11, T75 மற்றும் சரஸ்வதி மினி பஸ் வசதி உள்ளது  
     
 
பிரார்த்தனை
    
  சிவன், சக்தி ஆகிய இருவரின் அருளும் ஒருங்கே அமையப் பெற்ற திருத்தலம். பெரியாண்டவர் ஆலய புராண வரலாற்றின்படி சக்தியின் சாபத்தால் சித்தம் கலங்கி பித்தம் பிடித்த நிலையில் ஈசன் உலகை வலம் வந்து திருநிலையில் ஓருநிலையாய் நின்ற இடம். தாயின் கருவின்றி பெரிய மனிதராக பிறவியெடுத்து ஈசனே உலகை வலம் வந்தபோது பார்வதியால் பெரியாண்டவர் என்று வணங்கப்பட்ட திருத்தலம். சிவபெருமானின் பாதம் பட்ட தலம். குழந்தைப் பேறு அருளும் பரிகாரத் தலம். கலியுகத்தில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஈசன் ஜோதி ரூபமாக காட்சி அளித்து நின்ற தலம். ஜோதியாக காட்சி தந்த வெட்ட வெளி இடத்தில் சுயம்புலிங்கம் பிரதிஷ்டை செய்து வணங்கி வழிபடும் தலம். லிங்கத்தின் வலதுபுறம் சிவசக்தி இருவரும் ஒருங்கே அமர்ந்து தெய்வீகக் காட்சி தருகின்ற தலம். பார்வதி தேவி திருநிலைநாயகி என அழைக்கப்படும் தலம். சக்தியின் சூலாயுதம் திருநிலையில் வீழ்ந்த போது 21 மண் உருண்டைகள் சிதறி வீழ்ந்து அவை சிவகணங்களாக மாறிய தலம். சுயம்பு லிங்கத்தைச் சுற்றி சிவகணங்கள் மண் உருக்கொண்டு இறைவனை பூஜிக்கும் தலம். குளம் மற்றும் ஏரி ஆகிய இரு கரைகளுக்கு மத்தியில் இயற்கை சூழலில் அமைந்துள்ள ஆலயம்.  
    
நேர்த்திக்கடன்:
    
  சக்தியின் சூலாயுதம் திருநிலையில் வீழ்ந்த போது 21 மண் உருண்டைகள் சிதறி வீழ்ந்து அவை சிவகணங்களாக மாறிய தலம். திருநிலையில் சிவகணங்கள் மண்ணில் இருந்து தோன்றி ஈசனை மண் உருகொண்டு வணங்கி அருள் பெற்றது போல் நாமும் சிவகணங்கள் மற்றும் ஈசனின் அருள் பெற 21 மண் உருண்டைகள் பிடித்து சிலையின் முன்புறம் செவ்வக வடிவில் அடுக்கி வைத்து ஒவ்வொன்றுக்கும் அபிஷேகம் செய்து கற்பூர ஆராதனை காட்டி அருள் பெருவதால் எல்லா வளமும் பெற்று நல்வாழ்வு பெறலாம். பெரியாண்டவர் சிவகண பூசை செய்ய விரும்பும் குடும்ப அங்கத்தினர் முதலில் பெரியாண்டவர் ஆலயத்திற்கு வருகை தந்து ஆண்டவனை முதலில் வணங்கி இறையன்பர்களின் குடும்பத்தினருடன் பெரியாண்டவர் ஆலயத்திற்கு அருகில் உள்ள சித்தாமிர்த குளத்தில் தங்கள் உறவினர்களுடன் சென்று தங்களை நீரினால் சுத்தம் செய்துகொண்டு சித்தாமிர்த குள படித்துறையில் அமர்ந்து மஞ்சள் பிள்ளையார் பிடித்து அருகம்புல் கொண்டு புஷ்பம் வைத்து உலகின் முதல் கடவுளாம் விநாயகப் பெருமானை நினைத்து தேங்காய் உடைத்து கற்பூர ஆராதனை காட்டவேண்டும். பெரியாண்டவர் மற்றும் அங்காளபரமேஸ்வரி கலசம் உருவாக்க வேண்டும். அதற்கு இரண்டு கலசங்கள் வைத்து கங்கை நீர் அதில் ஊற்றி ஏலக்காய், லவங்கம், பச்சை கற்பூரம், எலும்பிச்சைபழம் மற்றும் ஒருரூபாய் நாணயம் குடத்தில் விட்டு மாவிலை வைத்து அதன்மேல் மட்டை தேங்காய் வைக்கவேண்டும். முதல் கலசம் மட்டை தேங்காய் வைக்கப்பட்ட கலசத்தில் மஞ்சள் குங்குமம் இட்டு வெள்ளை துண்டு அணிவித்து பெரியாண்டவராக ஆவாகனம் செய்யவேண்டும். இரண்டாவது கலசம் வேப்பிலையால் கரகம் செய்து உச்சியில் எலும்பிச்சைபழம் செருகி மஞ்சள் குங்குமம் இட்டு கதம்ப மலரால் கரகத்தை அலங்கரித்து சிகப்பு கலர் ஆடை கொண்டு அணிவித்து மலர்மாலை சூடி அங்காளபரமேஸ்வரியாக ஆவாகனம் செய்யவேண்டும். இரண்டு கலசங்களுக்கும் ஊதுபத்தி ஏற்றி தேங்காய் உடைத்து கற்பூர ஆரதனை காட்டி பெரியாண்டவருக்கு அரோகரா பெரியாண்டவருக்கு அரோகரா என பலமுறை கூறி தம் உறவினருடன் மனம் உருகி வேண்டி வணங்குதல் வேண்டும். பெரியாண்டவர் சிவகண பூசைசெய்யும் தம்பதியினர் ஆளுக்கொரு கலசமாக தம் கைகளில் ஏந்தி பெரியாண்டவருக்கு அரோகரா கோஷத்தை எழுப்பியவாறு சித்தாமிர்த குளக்கரையில் இருந்து ஆலயத்திற்கு வரவேண்டும். வந்தபின் சுயம்புலிங்கத்தின் வலதுபுறம் வாழையிலையில் பச்சைஅரிசி பரப்பி அதன்மேல் பெரியாண்டவர் கலசமும் இடதுபுறம் வாழையிலையில் பச்சைஅரிசி பரப்பி அதன்மேல் அங்காளபரமேஸ்வரி கலசமும் வைக்கப்படவேண்டும். கலசங்கள் வருவதற்கு முன்பாக ஆலயத்தின் உள் மற்றும் வெளிப் பிரகாரத்தில் மஞ்சள் நீரால் தெளித்து துர்க்கா தேவியை மனதில் நினைத்து கற்பூர ஆராதனை செய்து துஷ்டதேவதைகள் உள்ளே வராமல் துணை நிற்குமாறு வேண்டிக் கொள்ள வேண்டும். பின் வெண் பூசணியை நான்காக வெட்டி மஞ்சள் குங்குமம் தடவி ஆலயத்தின் வெளி பிரகாரம் நான்கு மூலைகளிலும் வைத்து தீபாரதனை செய்ய வேண்டும். பின் தம் உறவினருடன் சேர்ந்து இருபத்தி ஓர் சிவகணங்கள் [மண்பிள்ளையார்] தம் கைகளால் செய்வித்து அவற்றினை ஆலயத்தின் உள்ளே கொண்டுவந்து சுயம்புலிங்கத்தை சுற்றி செவ்வக வடிவில் இரண்டு இரண்டாக வைக்கப்படவேண்டும். எதிரடியாக ஓர் சிவகணமுமாக மொத்தம் இருபத்திஓர் சிவகணம் வைக்கப்படவேண்டும். மூன்று குத்துவிளக்குகளை எடுத்துக் கொண்டு அலங்காரம் செய்து ஒருமுகமாக திரி போட வேண்டும். முதல் குத்துவிளக்கில் மஞ்சள் துண்டு அணிவித்து மாலை அணிவித்து ஸ்ரீ துர்க்காதேவியாக ஆவாகனம் செய்வித்து எதிரடியாக உள்ள ஒரு சிவகணம் உள்ள பகுதியில் வைக்கப்படவேண்டும். இரண்டாவது குத்துவிளக்கில் சிவப்பு துண்டு அணிவித்து மாலை அணிவித்து ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி ஆவாகனம் செய்வித்து ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி கலசம் உள்ள பகுதியில் வைக்கப்படவேண்டும். மூன்றாவது குத்துவிளக்கில் வெள்ளை துண்டு அணிவித்து மாலை அணிவித்து பெரியாண்டவராக ஆவாகனம் செய்வித்து பெரியாண்டவர் கலசம் உள்ள பகுதியில் வைக்கப்படவேண்டும். இருபத்திஓர் சிவகணங்களுக்கு அருகில் மண் அகல் விளக்கு கொண்டு திரி ஏற்றி வைக்கப்படவேண்டும். காரணம் இறைவன் ஜோதிவடிவம் காட்டி சுயம்புவாய் அமர்ந்து அருள்வடிவம் கொண்டு அன்பர்களை காப்பதினால். பூசை பொருற்களான எண்ணெய், சியக்காய்த்தூள், பால், தயிர், கதம்பத்தூள், தேன், எலும்பிச்சைபழம், இளநீர், பன்னீர், சந்தனம் போன்ற பொருட்களை கொண்டு தங்கள் உறவினர்கள் சுற்றம் சூழ சிவகணங்களுக்கு [மண்பிள்ளையார்] அபிஷேகம் செய்யப்படவேண்டும். அபிஷேகம் நிறைவு பெற்றவுடன் விபூதி மற்றும் குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரிக்கப்படவேண்டும். சுயம்புலிங்கத்திற்கு அபிஷேகம் நடைபெறவேண்டும். பின் அலங்காரம் முடிந்தவுடன் வாழையிலை கொண்டு படையல் போடவேண்டும். அதேபோல் இருபத்திஓர் சிவகணங்களுக்கும் இருபத்தி ஓர் வாழையிலை வைத்து அவற்றின் மேல் பொங்கல், வடை, பால் பாயசம், சுண்டல், வாழைப்பழம், வெற்றிலைபாக்கு மற்றும் இருபத்தி ஓர் தேங்காய் உடைத்து வைத்து ஊதுபத்தி ஏற்றி வைக்கப்படவேண்டும். பின் ஒவ்வோரு சிவகணங்களுக்கு முன்பும் 10 கிராம் எடையுள்ள கற்பூர கட்டி வைக்கப்படவேண்டும் விநாயகருக்கு கற்பூர ஆராதனை காட்டி பின் சுயம்புலிங்கத்திற்கு ஆராதனை காட்டி சிவசக்தி பாதத்திற்கு ஆராதனை காட்டி, பெரியாண்டவர் கலசம் மற்றும் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி கலசம் ஆராதனை காட்டி பின் தம் உறவினருடன் பெரியாண்டவருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் இருபத்தி ஓர் சிவகணங்களுக்கு முன்னாள் உள்ள கற்பூரத்தை ஏற்றப்படவேண்டும். பின்பு அனைவரும் திங்களில் ஜோதிநீ, தினகரன் ஜோதிநீ ,அங்கியில் ஜோதிநீ, அணைத்திலும் ஜோதிநீ, எங்களுள் ஜோதிநீ ,ஈஸ்வர ஜோதிநீ ,கங்கிலா ஜோதிநீ, கற்பூர ஜோதி நீயே என ஆண்டவனை நினைத்து மனம் உருகி பாடி வணங்கவேண்டும். இவ்வாறு பூஜை செய்வோருக்கு பெரியாண்டவர் சகல செளபாக்கியங்களும் வழங்குவார் என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. திருநிலை பெரியாண்டவர் திருநிலை பெரியாண்டவர் ஆலயத்தில் பெரியாண்டவர் சிவகண பூசை செய்ய தேவையான பொருட்கள் மஞ்சள் 100 கிராம் குங்குமம் 100 கிராம் சந்தனம் 100 கிராம் கற்பூரம் 250 கிராம் சாம்பிராணி 100 கிராம் கதம்பத்தூள் 100 கிராம் நல் லென்ணெய் 1 கிலோ நெய் 100 கிராம் அரிசி மாவு 100 கிராம் அவல் பொறிகடலை 150 கிராம் விபூதி [500 கிராம் ] சியக்காய் தூள்[1 பாக்கட்] தேன் 50 கிராம் பன்னீர் பாட்டில் ஒன்று ஊதுபத்தி பாக்கட் ஒன்று வெட்டிவேர் 5 ரூபாய் திரிநூல் இரண்டு கட்டு தீப்பெட்டி ஒன்று கலசநூல் உருண்டை இரண்டு பிள்ளையார் துண்டு இரண்டு கலசதுண்டு கலர் ஒன்று பச்சை, சிவப்பு, மஞ்சள், ஜாக்கெட் பிட்டு மூன்று குத்து விளக்கு மூன்று பித்தளை குடம் இரண்டு புதுமண்பானை சிறியது ஒன்று தேங்காய் 25 மட்டை தேங்காய் 2 இளநீர் 2 கல்யாண பூசணிக்காய் 2 எலும்பிச்சை பழம் 15 பூமாலை 6 கதம்ப பூ 30 முழம் வாழைப்பழம் 50 வாழை இலை [நுனி] 25 பச்சரிசி 3கிலோ வெல்லம் 1 கிலோ பஞ்சாமிர்தம் 5 பழவகைகள் வெற்றிலை பாக்கு 10 ரூபாய் தயிர் 1/2 லிட்டர் பால் 1 லிட்டர் கொண்டை கடலை, அன்னதான பிரசாதம், வடை, பாயாசம் வீட்டிலிருந்து தயார் செய்துகொண்டு வரவும்.  
    
 தலபெருமை:
     
  தலத்தின் மகிமை சிவன், சக்தி ஆகிய இருவரின் அருளும் ஒருங்கே அமையப் பெற்ற திருத்தலம். பெரியாண்டவர் ஆலய புராண வரலாற்றின்படி சக்தியின் சாபத்தால் சித்தம் கலங்கி பித்தம் பிடித்த நிலையில் ஈசன் உலகை வலம் வந்து திருநிலையில் ஓருநிலையாய் நின்ற இடம். தாயின் கருவின்றி பெரிய மனிதராக பிறவியெடுத்து ஈசனே உலகை வலம் வந்தபோது பார்வதியால் பெரியாண்டவர் என்று வணங்கப்பட்ட திருத்தலம். சிவபெருமானின் பாதம் பட்ட தலம். குழந்தைப் பேறு அருளும் பரிகாரத் தலம். கலியுகத்தில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஈசன் ஜோதி ரூபமாக காட்சி அளித்து நின்ற தலம். ஜோதியாக காட்சி தந்த வெட்ட வெளி இடத்தில் சுயம்புலிங்கம் பிரதிஷ்டை செய்து வணங்கி வழிபடும் தலம். லிங்கத்தின் வலதுபுறம் சிவசக்தி இருவரும் ஒருங்கே அமர்ந்து தெய்வீகக் காட்சி தருகின்ற தலம். பார்வதி தேவி திருநிலைநாயகி என அழைக்கப்படும் தலம். சக்தியின் சூலாயுதம் திருநிலையில் வீழ்ந்த போது 21 மண் உருண்டைகள் சிதறி வீழ்ந்து அவை சிவகணங்களாக மாறிய தலம். சுயம்பு லிங்கத்தைச் சுற்றி சிவகணங்கள் மண் உருக்கொண்டு இறைவனை பூஜிக்கும் தலம். குளம் மற்றும் ஏரி ஆகிய இரு கரைகளுக்கு மத்தியில் இயற்கை சூழலில் அமைந்துள்ள ஆலயம்.  
     
  தல வரலாறு:
     
  மனிதனாக வந்து மக்களை காக்கும் மகேசன் பல்லவர்களால் புகழ்பெற்ற பல ஆலயங்கள் கொண்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் சைவகுரவர்களால் பாடல் பெற்ற புகழ்மிக்க சிவதலமான திருக்கழுக்குன்றம். இதன் வடகிழக்கே 8 கிமீ தூரத்திலும், முருகன் அசுரர்களை எதிர்த்துப் போர் புரிந்த தலமான திருபோருரில் இருந்து மேற்கு திசையில் 12 கிமீ தூரத்திலும், செங்கல்பட்டில் இருந்து கிழக்கே 14 கிமீ தூரத்திலும், இயற்கை எழில் நிறைந்த, பசும்சோலைகள் சூழ்ந்த, வானாந்திர மரங்களாலும், மலைகலாலும் சூழப்பட்ட, திருநிலை கிராமத்தில் புள்ளினங்கள் இசைபாடும் குளம் மற்றும் ஏரி இருக்கரையின் மத்தியில் சுயம்பு லிங்கமாக தோன்றி சிவபெருமான் பெரியாண்டவர் என்ற நாமத்துடன் வீற்றிருந்து அருள்பாளிக்கின்றார். சிவபெருமானே மனிதவடிவம் தாங்கி உலகலாம் வலம் வந்து திருநிலையில் ஒருநிலையாய் தன்பாதத்தை பதித்து நின்று பெரியாண்டவர் என்ற நாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகின்றார். இவ்வாலயத்தில் எம்பெருமானை சுற்றி 21 சிவகணங்கள் கைகூப்பி வணங்கி நிற்கும் காட்சி இவ்வாலயத்தை தவிர வேறு எங்கும் காணமுடியாத அரிய காட்சியாகும். முன் ஒரு காலத்தில் சுந்திரபத்திரன் என்ற அசுரன் சிவபெருமானை வணங்கி பல அரிய வரங்கள் பெற்றான் அவற்றுள் முக்கியமானது அவனது மரணம் சிவசக்தி சொரூபமானவரால் மட்டுமே நிகழ வேண்டும். மேலும் அதற்கு முன்னால் எம்பெருமான் மனித அவதாரம் எடுத்து முடித்திருந்தால் மட்டுமே அவனை கொல்ல முடியும் என்ற சிக்கலான வரம் பெற்று இருந்தான். இதனால் இந்திரன் முதலான தேவர்களை விரட்டியடித்து அவர்களின் ஆட்சியை கைப்பற்றி பலவகையில் தொல்லை கொடுத்து வந்தான். அசுரனின் தொல்லை பொருக்க முடியாமல் சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டு காக்குமாறு வேண்டினர். தேவர்களை காக்கும் பொருட்டும் அசுரர்களை அழிக்கும் எண்னத்துடன் சக்தியைக் காண எம்பெருமான் சென்றார். அசுரர்களின் அராஜகம் அதிகமாகி விட்டதால் அவர்களை உடனே அழித்து தேவர்களை காக்க வேண்டும், உடனே புறப்படு என்று கூறி நின்றார். ஜயன் கூறியதைக் கேளாமல் உமையவள் கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து அமைதி பூண்டு இருந்தார். தாயிடம் இருந்து பதில் வரததால் கோபம் கொண்ட எம்பெருமான் என்னுடைய சொல் கேட்டு பதில் கூறாமல் இருக்கும் நீ மீண்டும் மானிட பெண்ணாக பிறப்பாய் என கண்கள் கனல் கக்க எச்சரித்தார். இவ்வார்த்தை கேட்டு தியாணத்தில் இருந்து விழித்தெழுந்த பார்வதிதேவி ஜயனை நோக்கி எம்மை மானிடராக பிறக்க சொல்லும் நீவிர், எம்மில் பாதியாக விளங்குபவர் தானே ஆகவே நீரும் ஓரு நாழிகை மனிதனாக பிறக்க வேண்டும் என சாபமிட்டார். உமை அவதாரத்தின் ஆழமும், அர்த்தமும் புரிந்து பேசினாள். இவ்வார்த்தையைக் கேட்ட ஜயனின் சித்தம் மெல்ல கலங்கியது. ஈசன் தன்நிலை மறந்து மனித அவதாரம் கொண்டார். உலகமெல்லாம் திக்கு திசையின்றி அலைந்து திரிந்து வந்தார். பரமனின் இந்நிலை கண்டு உமையவள் அச்சமுற்றாள். உலக ஜீவராசிகள் பயத்தில் நடுங்கின. தேவர்கள் முதலனோர் தாயிடம் வணங்கி பரமனை காத்து அருளுமாறு வேண்டினர். உடனே தாய் தன் சூலாயுதத்தை வீசி எறிந்தாள் அது பிரகாசமாய் பூமியில் ஓர் இடத்தில் நிலையாய் நின்றது. சூலாயுதம் வீழ்ந்த இடத்தில் இருந்து இருபத்தி ஓர் மண் உருண்டைகள் சிதறி சுற்றி விழ்ந்தன. பின் அவை ஒவ்வொன்றும் சிவகணங்களாக மாறி சுற்றி ஜயனின் வருகைக்காக காத்து நின்றன. சூலாயுத ஒளியைக் கண்டு எம்பெருமான் திருநிலையாய் ஓர் இடத்தில் பாதம் பதித்து ஒருநிலையாய் நின்றார். பார்வதிதேவி அவ்விடத்திலேயே வணங்கி நின்றாள். ஒரு நாழிகை நேரமும் முடிய மனிதனாய் வந்தவர் சிவமாய் உறுமாறி தோன்றினார். மேலும் பெரிய மனிதனாக இவ்வுலகை வலம் வந்த ஆண்டவராகிய நீவிரே இன்று முதல் பெரியாண்டவர் என்று அழைக்கப்படுவீர் என உமையவள் கூறினாள். இவ்வார்தையை கேட்ட தேவர் முதலானோர் பெரியாண்டவா பெரியாண்டவா எனக் கூறி அழைத்து அவர் பாதத்தில் மலர் தூவி வாழ்த்தினர். சுற்றி நின்ற சிவகணங்களும் எம்பெருமான் நாமம் கூறி வணங்கி நின்றன. ஒருநிலையில் திருநிலையாய் நிறுத்திய இவ்விடம் திருநிலை என அழைக்கப்படும் எனக் கூறிய ஜயன், மேலூம் உலகை காக்கும் நாயகி உமையவள் என்னை திருநிலையாய் நிலை கொண்டு ஆட்கொண்டதால் இன்று முதல் திருநிலைநாயகி எனஅழைக்கப்படுவாள் என்று வாழ்த்தினார். இவ்வார்த்தையைக் கேட்ட தேவர் முதலானோர் திருநிலை நாயகி என அழைத்து மகிழ்ந்து அவர் பொற்பாதத்தில் மலர் தூவி வாழ்த்தினர். சிவபெருமான் திருநிலையாய் ஒருநிலையில் தன்பாதம் பதித்து அருள்புரிந்த திருத்தலமே திருநிலையாகும். மேலும் பார்வதிதேவி தாயின் கருவின்றி பெரியமனிதனாக தோன்றி நிவீரே உலகை வலம் வந்தமையால் இவ்வுலகில் கருவின்றி வாடும் தம்பதியர்க்கு யார் இவ்விடத்தில் உன்நாமம் நினைக்கின்றார்களோ அவர்களுக்கு மழலைகளை வழங்கி அருள் புரியவேண்டும் என வேண்டினார். இறைவனும் அவ்வாறே நடைபெறும் என அருளினார்.இன்றும் இவ்வாலயத்தின் அருகில் உள்ள சித்தாமிர்த குளத்தில் நீறாடி இறைவனை நினைத்து மனம் உருகி நெய் திபம் ஏற்றினால் எந்த ஒரு தம்பதியும் குழந்தைபேறு பெருவார்கள் என்பது இறையன்பர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக விளங்குகிறது. மேலும் ஆண்டவனின் பாதம் பதித்த இடத்தில் ஜோதி வெளிப்பட்டு சுயம்பு லிங்கம் அமைந்துள்ளது. சூலாயுதம் வீழ்ந்த இடத்தில் இருந்து 21 ஓர் மண் உருண்டைகள் சிதறி சுற்றி விழ்ந்து, பின் அவை ஒவ்வொன்றும் மண்ணில் இருந்து சிவகணங்களாக உருமாறி நின்றதை நினைவு கொள்ளும் விதமாக இவ்வாலயத்தில் 21 ஓர் மண் உருண்டைகள் சிவகணங்களாக செய்து வைத்து சுயம்பு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது போல் அவைகளுக்கும் செய்து ஆராதனை காட்டி அருள் பெருவது எங்கும் காணாத அதிசயம் ஆகும். நந்தி பகவானூம் மனிதவடிவில் தோன்றி சிவனைபோல் அருள்வது இங்கு காணலாம். நெடுங்காலத்திற்கு முன்பு ஒரு தம்பதியினர் குழந்தைபேறு இல்லாமல் மனவேதனையுடன் வாழ்ந்து வந்தனர். அவர்கள் சிவபெருமானை மனதில் நினைத்து மனமுருக வேண்டி துதித்து வந்தனர். ஒருநாள் சிவபெருமான் அவர்கள் கனவில் தோன்றி நான் பெரியாண்டவர் அவதாரக் கோலதில் உலகை வலம் வந்தபோது என்னை நிலைகொள்ள செய்த இடமான திருநிலைக்கு சென்று வேண்டினால் உங்களுக்கு மழலை செல்வம் கிட்டும் என்றும் மேலும் உங்களுக்கு வழிகாட்டியாக ஒரு பன்றி அழைத்து செல்லும் என்று கூறி மறைந்தார். அவர்களும் அங்கு எப்படி செல்வது என்று தெரியாமல் விழித்தபொது திடீர் என்று அங்கு ஒரு பன்றி தோன்றி அவர்களுக்கு வழி காட்ட அவர்களும் இறைவன் கூறியவாறே அதன் பின்னே சென்றனர். அது ஒரு இடத்தில் ஆடாமல் அசையாமல் திருநிலையாய் நின்று பின் திடிர் என காணமல் மறைந்து. இறைவனே தங்களுக்கு பன்றி உருவில் வந்து வழிகாட்டியதாக நினைத்து வழிபட்டபோது அந்த இடம் வெட்டவெளியில் ஒளிமயமாய் திகழ்ந்து ஜோதி தரிசனம் தந்தது. அதைக் கண்ட அவர்கள் பெரியாண்டவர் நாமத்தை மனமுருக சொல்லி வழிபட்டனர். ஒர் ஆண்டுகழித்து ஆண்குழந்தை பெற்றதாக கோயில் தல வரலாறு கூறுகின்றது. திருநிலையில் ஒருநிலையாய் நின்று அற்புதங்கள் நிகழ்த்தி அன்பர்களை காத்திடும் இறைவனாக, நெஞ்சாரத் தம்மை பணிந்து வணங்குவோர்க்கு வேண்டும் வரம் வழங்கி, இந்த புவணத்தை காத்து ரட்சிக்கும் எம்பெருமானாக பெரியாண்டவர் விளங்குகிறார். இம்மை மறுமை எனும் பிறவிப் பெருந்துன்பம் போக்கி அடியாரை ஆட்கொள்ளும் நாயகனாக எம்பெருமான் காட்சிதருகின்றார். அவரின் அற்புதங்கள் கணக்கில் அடங்கா. மழலை இல்லா மங்கையரின் மனக்குறை களைந்து மழலைகளை உடன்வழங்கி, மனநலம் கண்டோர் வாழ்வில் நலவலம் வழங்கி, மணமாகதப் பெண்களுக்கு எளிதில் மணங்கூட்டி, ஏழை எளியோரின் வாழ்வை காத்து ரட்ச்சித்து, உழைத்து ஊர்காக்கும் உழவர்க்ளின் பயிர் வாழ மழைவளம் அளித்து, கொஞ்சித்தவழும் குழந்தைகளை அஞ்சாது காத்து, நாடிவரும் அடியார்கள் வாழ்வில் அஞ்ஞானம் நீக்கி மெய்ஞானம் வழங்கி மேன்மையான வாழ்வு தரும் இத்திருத்தலத்திற்கு வருகை தந்து பெரியாண்டவரின் பொற்பாதம் வணங்கி அவரின் திருவருளைப் பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டுகின்றோம். ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சிறப்பு வழிபாடுகளும் அர்ச்சனை, ஆராதனை நடைபெற்று வருகின்றன. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகின்றது. செங்கல்பட்டில் இருந்து தினமும் திருநிலை பெரியாண்டவர் கோவிலுக்கு திருகழுக்குன்றம் வழியாக T11 என்ற பேருந்து காலை 9 மணி மற்றும் மாலை 2 மணி இரவு 9.0 மணிக்கு சென்றுவருகிறது. ஆலயதொடர்புக்கு கை தொலைபேசி: 9842740957.  
     
சிறப்பம்சம்:
     
   
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar