Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கருப்பைய ஐயனார் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு கருப்பைய ஐயனார் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கருப்பைய ஐயனார்
  தல விருட்சம்: இரிவாட்சி( பூ வைக்காமல் கனி காய்காமல் உள்ள மரம்).
  தீர்த்தம்: காவிரி
  ஊர்: தென்மருதூர்
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வைகாசி விசாகம், சிவராத்திரி, அமாவாசை, பவுர்ணமி  
     
 தல சிறப்பு:
     
  ஐயனார் பூரணை புஷ்கலை சமேதராக அருள்பாலிப்பது சிறப்பு  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கருப்பைய ஐயனார் திருக்கோயில் தென்மருதூர், திருக்குவளை வழி, திருவாரூர்-610207.  
   
போன்:
   
  +91 9443303020 
    
 பொது தகவல்:
     
  கோயில் எதிரில் முன்னடியான் குதிரையை பிடித்த வண்ணம் நிற்கிறார். எதிரில் பலி பீடம் உள்ளது. வடக்குபக்கம்  வீரனார் அருள்பாலிக்கிறார், கோயிலின் பின்பக்கம் தலவிருட்சம் அமைந்துள்ளது. கிழக்குப்பக்கம் கோயில் கற்பகிரகத்தில் ஒரு கலசம் அமைக்கப்பட்டுள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், திருஷ்டி நீங்கவும், புதிய வீடு கட்டவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்தரம் சார்த்தியும், புதிய தானியத்தை படைத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
  வயல் சூழ்ந்தப் பகுதியின் நடுவில் கோயில் அமைந்துள்ளது. இவ்வூரின் காவல் தெய்வமாகவும், பலருக்கு குலதெய்வமாகவும் இக்கோயில் அமைந்துள்ளது. பல்வேறு பகுதியில் இருந்து குல தெய்வ வழிபாட்டிற்கு வந்து செல்கின்றனர். 300 ஆண்டுள் பழமையானது. கடந்த 2006 ம் ஆண்டு புதிய கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. வடலூர் வள்ளலார் கோட்பாட்டை பின் பற்றியதால் தென்மருதூர் என அழைக்கப்பட்டுள்ளது.
 
     
  தல வரலாறு:
     
  சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. பெருவணிகர் கிருஷ்ண செட்டியார் தாத்தா காலத்தில் குலதெய்வமாக பிரதிஷ்ட்டை செய்யப் பட்டுள்ளது. பின்னாளில் கீற்று கொட்டகை அமைத்துள்ளனர். தற்போது அவரது வம்சத்தினர் கோயில் கட்டி பராமரித்து வருகிறார்கள்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: ஐயனார் பூரணை புஷ்கலை சமேதராக அருள்பாலிப்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar