Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஐயப்பன்
  ஊர்: சங்கனூர்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  இத்தலத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும், மலையாள மாதத்தின் முதல் நாளும் சிறப்புக்குரிய நாளாகும். அன்று ஆராதனைகள் வெகு விமர்சையாக நடைபெறும். ஐயப்பனின் பிறந்த தினமான பங்குனி உத்திரமும், பிரதிஷ்டா தினமான ஆனிமாத உத்திரமும் இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மண்டல பூஜையிலும் விளக்கு பூஜையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கு பெற்று ஐயப்பனின் அருளுக்கு பாத்திரமாவது சிறப்பாகும். மகரஜோதியன்று சபரிமலையில் நடப்பதைப் போன்றே திருவாபரணம் ஊர்வலம், அருகிலுள்ள அம்மன் கோயிலில் இருந்து பவனிவருவது கண்களை விட்டகலாத அருட்காட்சி.  
     
 தல சிறப்பு:
     
  கும்பாபிஷேகத்தின் போது மூன்று விளக்கு மூன்று நாட்கள் எரிந்துகொண்டிருந்தது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், சங்கனூர், கோவை.  
   
போன்:
   
  +91 422 2333906 
    
 பொது தகவல்:
     
  கோயிலில் ஐயப்பன் கிழக்கு நோக்கி யோக நிஷ்டையில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். அவருக்கு எதிரே சிவன் சன்னதியும், குருவாயூரப்பன் சன்னதியும் உள்ளன. ஐயப்பன் ஹரிஹர மைந்தன் அல்லவா! அவர் பார்வையில் இருவரும் அருள்பாலிப்பது சிறப்பாகும். கன்னிமூலையில் கணபதி, வடமேற்கு மூலையில் முருகன் மற்றும் பகவதி சன்னதிகள் உள்ளன. கணபதி சன்னதி அருகே நாகர் மற்றும் நாகதேவி சன்னதிகள் உள்ளன. வடகிழக்கு பகுதியில் நவகிரகங்கள் அமைந்துள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  குருவாயூரப்பன் சன்னதியில் வித்யா கோபாலம் என்ற சிறப்பு பூஜை அடிக்கடி நடத்தப்படுகிறது. அதில் கலந்துகொள்ளும் மாணவ மாணவியர் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுகிறார்களாம். சிவன் சன்னதியில் நடைபெறும் மிருத்யுஞ்சய புஷ்பாஞ்சலி மிகவும் சக்தி வாய்ந்த ஆராதனையாகும். ஆரோக்கியத்தில் குறைபாடு உள்ளவர்கள் பலர் இந்த பூஜையில் கலந்துகொண்டு நற்பலன் பெறுகிறார்களாம். பகவதி சன்னதியில் நடைபெறும் மாங்கல்ய சுக்தம் என்ற ஆராதனையில் பங்கு பெறுவதன் மூலம் மாங்கல்ய பலமும் குடும்ப ஒற்றுமையும் ஓங்குவதாக நம்பிக்கை. தொழில் அபிவிருத்தி அடைய, கண்திருஷ்டி நீங்க நீராஞ்சனம் பூஜையை பக்தர்கள் செய்கின்றனர். புஷ்பாஞ்சலியும் நிறமாலாவும் இத்தலத்தில் நடைபெறும் முக்கிய ஆராதனைகள். 
    
நேர்த்திக்கடன்:
    
  வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  ஐயப்பன் கோயிலின் அமைப்பு சபரிமலையை போன்றே உள்ளது. அங்குள்ள பூஜை முறைகளே இங்கும் கடைப்பிடிக்கப்படுகின்றன. கும்பாபிஷேகத்தின் ஓர் அங்கமாக, கருவறையில் ஐயப்பன் முன்பு மூன்று உருளிகளில் நெய், நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் நிறைத்து அதில் பெரிய திரி இட்டு தீபம் ஏற்றுவர். முதல் தீபம் ஐயப்பனுக்கும், இரண்டாம் தீபம் பூஜை செய்த தந்திரிக்கும், மூன்றாவது தீபம் கோயிலைச் சார்ந்தவர்களுக்கும் உரியன. பின் பச்சை தென்னை ஓலை தடுப்பு மூலம் நடையை அடைத்து, அதன் மீது துணி திரையிட்டு மறைத்து விடுவர். மூன்று நாட்கள் பூஜை, தீபாராதனை எல்லாம் திரைக்கு முன்தான் நடைபெறும். மூன்று நாட்கள் கழித்து திரையை விலக்கும் போது மூன்று தீபங்களும் அணையாமல் எரிந்து கொண்டிருக்க வேண்டும். கும்பாபிஷேக வைபவத்தில் அனைவருடைய பணியும் செவ்வனே எந்தக் குற்றம் குறையுமின்றி செய்திருந்தால்தான் விளக்குகள் அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் என்பது ஐதிகம். மூன்றாம் நாள், பூஜைகள் முடிந்து நடை திறக்கப்போகும் தருணம். சன்னதி எதிரே ஒவ்வொருவர் மனத்திலும் முகத்திலும் ஒருவித அச்சத்துடனும் கலக்கத்துடனும் காத்திருக்கின்றனர். நடைதிறக்கப்பட்டது. என்ன அற்புதம்! மூன்று தீபங்களும் எந்தத் தூண்டுகோலும் இல்லாத நிலையில் மூன்று நாளும் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது. அனைத்து பணிகளும் சரியான பாதையில் நிறைவேறியதை ஊர்ஜிதம் செய்வதாக அமைந்தது. அத்தருணத்தில் எழுந்த விண்ணை முட்டும் ஐயப்ப கோஷம் அனைவரின் மனமகிழ்ச்சியையும் பிரதிபலித்தது.  
     
  தல வரலாறு:
     
  சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் வதித்த ஐயப்ப பக்தர்கள் சிலர் கார்த்திகை மாதம் விரதம் இருந்து சபரிமலை கோயிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதற்கு முன்பு பக்தர்களிடம் நிதி திரட்டி, ஒவ்வொரு வருடமும் விளக்கு பூஜையை விமர்சையாக கொண்டாடி வந்தனர். குறிப்பிட்ட காலத்தில் செலவு போக ஒரு கணிசமான தொகை மீதம் ஆனது. அதைக்கொண்டு தற்போதுள்ள இடத்தை வாங்கினர். அந்த இடத்தில் சிறிய மேடை அமைத்து, முதன் முதலில் விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். பின்னர் பக்தர்களின் பங்களிப்புடன் கோயில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. பஞ்சலோக ஐயப்ப விக்ரகம் கேரள சிற்ப சாஸ்திர முறைகளின்படி தயாரானது. 2001-ம் ஆண்டு ஜுன் 27-ம் தேதி ஐயப்பன் சிலை கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேக வைபவம் வெகு விமர்சையாக நடந்தேறியது.

தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: கும்பாபிஷேகத்தின் போது மூன்று விளக்கு மூன்று நாட்கள் எரிந்துகொண்டிருப்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar