Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பெட்டத்தம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு பெட்டத்தம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ரங்கநாயகி தாயார்
  அம்மன்/தாயார்: பெட்டத்தம்மன்
  தல விருட்சம்: ஆலமரம்
  தீர்த்தம்: கருடநதி
  ஆகமம்/பூஜை : பாஞ்சராத்ரம்
  புராண பெயர்: பிரகஸ்பதி மலை
  ஊர்: காரமடை
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  மாசி மாதம் பெட்டத்தம்மன் அழைப்பு, அமாவாசை, பவுர்ணமி, புரட்டாசி 5 சனிக்கிழமைகள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  பாறையிலிருந்து வளர்ந்துள்ள விருட்சம் சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பெட்டத்தம்மன் திருக்கோயில், காரமடை, கோயம்புத்தூர்-641104  
   
போன்:
   
  +91 4254 272318 
    
 பொது தகவல்:
     
  மேற்கு தொடர்ச்சி மலையின் தொடராக கட்டாஞ்சி மலையை ஒட்டி இயற்கை எழில் சூழ்ந்த வனாந்தரப்பகுதி வடக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயில் அடிவாரத்திலிருந்து 2 கி.மீ. மலைப்பாதையில் நடந்து தான் செல்ல முடியும். உபயகோயிலாக ஆஞ்சநேயர் பாதம், சுனை மற்றும் கல் மண்டபத்தில் பாறைகளிடையே வளர்ந்துள்ள விருட்சமாக ஆலமரம் அமைந்துள்ளது.
 
     
 
பிரார்த்தனை
    
  கல்யாணம், குழந்தைபேறு, வியாதி நிவாரணம் போன்றவற்றிற்காக இங்கு பிரார்த்திக்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனைகள் நிறைவேறியதும், தலவிருஷத்தில் (பாதையில் வளர்ந்துள்ள மரத்தடியில் வைக்கப்பட்டுள்ள சந்தா கிருஷ்ணன் பொம்மை) அருகே தொட்டி கட்டி நேர்த்திக்கடனை செலுத்துக்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  கோயிலின் மேலே உள்ள சுனையில் குளம் போல் இருக்கும் வற்றாத ஜீவநதியாக இருக்கிறது. இங்கு தாயார் மட்டுமே பிரதானம். மலைபகுதி தொடங்கும் இடத்தில் உள்ள வன கருடாழ்வார் சன்னிதியை ஒட்டி லட்சுமிநதி ஓடுவதால் (மலை காலத்தில் மட்டும் தண்ணீர்) கருடர்கள் அதிகமாக இங்கு நீராடி மகிழ்ந்து செல்வதாலும் இதற்கு கருடநதி என்ற பெயரும் உண்டு.  
     
  தல வரலாறு:
     
  தவகுரு பிரகஸ்பதியின் தவத்திற்கு இரங்கிய மஹாலட்சுமி வேண்டும் வரம் என்ன? என கேட்க தேவகுரு மஹாலட்சுமி தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்க அவ்வாறே கலியுகத்தில் உன்பெயர் சிறக்கும் பொருட்டு உன் மகளாக பிறக்கிறேன் என வரமருளினார். அவ்வாறே சைலலட்சுமி என்னும் பெயரில் சர்வலட்சண சொரூபியாக பூரண புஷ்கலையாக தோற்ற பொலிவுடன் தேவகுரு பிரகஸ்பதிக்கு மகளாக பிறந்து நாளொரு வண்ணம் வளர்ந்து வரும் வேளையில் ஒரு சமயம் நந்தவனத்தில் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் சமயம் வியாக்ராசுரனை கொன்று தேஜஸ் சொரூபமாக அவ்விடத்திற்கு வந்த அரங்கநாதனை கண்டு மெய்மறந்து மையல் கொண்டு நின்றாள். மகளின் நிலைகண்டு தேவகுரு பிரகஸ்பதி மகள் மனதில் ஓடிய எண்ணத்தை அறிந்து அரங்கனை எண்ணி கடுந்தவம் புரிந்தார். தவத்திற்கு மெச்சிய அரங்கன் காட்சி தந்த காரணம் வினவ தன் மகள் சைலலட்சுமியை மணம் புரிந்து கொள்ள வேண்டும் என வரம் கேட்டார்.

அவ்வாறே ஆகட்டும் என அரங்கன் சைலலட்சுமியை மணம் புரிய அரங்கனின் நாயகியாய் அரங்கநாயகி என்னும் திருக்கோயில் வீற்றிருந்து அருள்பாலித்துவரும் வேளையில் ஆண்டாளை அரங்கன் மணந்து கொண்டதை கேள்வியுற்று கோபம் கொண்டு தன் பிறந்த வீடான பெட்டத்தம்மன் மலை எனும் பிரகஸ்பதி மலைக்கு சென்று அங்குள்ள குகையில் தவக்கோலம் மேற்கொண்டார். தாயார் வந்து விடுவார் என நினைத்து காத்திருந்து தானே சென்று சமாதானப்படுத்தி அழைத்து வரலாமென வெள்ளை குதிரை மீதேறி பிரகஸ்பதி மலைக்கு சென்றார். வழியில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்த தம்பதிகளை வழியில் கண்ட அரங்கன் மலை மீது யாராவது சென்றார்களா எனக்கேட்க இருவரும் பதில் கூறாது நின்றனர். உண்மையை கூறாவிட்டால் கல்லாக போவீர்கள் என அரங்கன் சபித்ததும் பயந்து போன மனைவி ஆம் சுவாமி மலை மீது தாயார் செல்வதை கண்டோம் என கூறிவிட்டார். அடுத்த கணமே அவளது தலை வெடித்து சிதறியது. நான் மலை மீது செல்வதை யார் வந்து கேட்டாலும் சொல்லக்கூடாது மீறிச் சொன்னால் தலை வெடிக்கக் கடவது என தாயார் சபித்திருந்ததே இதற்கு காரணம்.

உண்மையை கூறாது நின்ற அவள் கணவனும் கல்லாகி விட்டான் அவர்களது சிலைகள் தற்போதும் மலைக்கு செல்லும் வழியில் உள்ளது. அதன்பின் மலைமீது ஏறிசென்ற குதிரை ஒரு குகையின் முன் மண்டியிட்டு நகர மறுத்தது. குதிரையின் குறிப்பை உணர்ந்த அரங்கநாதர் தாயார் இருக்கும் குகையினுள் சென்றார். அரங்கனின் சமாதானத்தை ஏற்கமறுத்த தாயார் தாங்கள் வற்புறுத்துவதால் மாசிமகத்திருவிழாவின்போது மட்டும் தங்களோடு இருப்பேன் மற்ற நாட்களில் இங்கேயே வாசம் புரிவேன் எனக்கு இங்குள்ள குளத்தில் நீராடி இத்தலத்தில் இருப்பதே மனதிற்கு திருப்தி அளிக்கிறது. மேலும் அனுமன் இங்கு எனக்கு காவலாக இருப்பதால் தங்களுடன் வர இயலாது என கூறிவிட்டார். அரங்கனும் திருவிழா நாட்களிலாவது இருக்க சம்மதித்தாரே என மனம் மகிழ்ந்து திரும்ப தன் தலத்திற்கு வந்து சேர்ந்தார் அதன்படி மாசிமக திருவிழாவின் ஙபாது அர்ச்சகர் ஒருவர்மீது பெருமாள் எழுந்தருளி பெட்டத்தம்மன் மலைக்கு சென்று தாயாரை அழைத்து வந்து திருக்கல்யாண உற்சவம் கண்டருள்வதாக புராண வரலாறு கூறுகிறது.

ஆண்டு தோறும் அம்மன் அழைப்பு என்ற பெயரில் தாரை தப்பட்டை வாத்தியங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் தாயாரை அழைத்து வரும் நிகழ்ச்சி வேறு எங்கும் காண இயலாத ஒன்றாகும். தற்போது பெட்டத்தம்மன் மலை எனப்படும் இம்மலை குகையில் தாயார் விக்ரஹரூபமாக வீற்றிருக்கிறார். தடாகம் அருகில் அனுமன் காவலாக நின்ற நிலையில் உள்ளார். இங்குள்ள தீர்த்தத்தில் குளித்தால் பிணிகள் தீரும் என்பது ஐதீகம். இங்குள்ள மரத்தில் தொட்டில் கட்டும் பக்தர்களுக்கு குழந்தை பாக்யம் கிடைப்பது தாயாரின் அருளுக்கு ஓர் உதாரணம். மேலும் வனகருடாழ்வார் கீழே லட்சுமிநதி ஓரத்தில் வீற்றிருக்கிறார். இந்நதிக்கு கருடநதி என்ற பெயரும் கொண்டு விளங்கி வருகிறது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பாறையிலிருந்து வளர்ந்துள்ள விருட்சம் சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar