Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சுந்தரேஸ்வரர்
  அம்மன்/தாயார்: மீனாட்சி
  தல விருட்சம்: வன்னி, வில்வமரம்
  ஊர்: சேரன் மாநகர்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வெள்ளி செவ்வாய்க்கிழமைகளில் அன்னைக்கு குங்கும அர்ச்சனை விசேஷமாக நடைபெறுகிறது. சனிப்பெயர்ச்சியின்போது இங்குள்ள சனீஸ்வரனுக்கு விசேஷ பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெறுகிறது. தைப்பூசத்தன்று இங்குள்ள முருகனுக்கு அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சித்திரைத் திருவிழா (மதுரையில் நடப்பது போன்றது) மற்றும் பிரதோஷம், கிருத்திகை, காலபைரவருக்கு மாத பூஜை போன்றவை இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  இக்கோயிலில் வந்து வழிபடுவதால் ஜென்ம சனி, பாத சனி, அஷ்டமச் சனி ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகள் விலகுகிறது என்கிறார்கள்  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், சேரன் மாநகர், விளாங்குறிச்சி அவிநாசி ரோடு கோயம்புத்தூர்.641035  
   
    
 பொது தகவல்:
     
  பிராகாரத்தை வலம் வரும்போது, வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியரை தனிச் சன்னிதியில் தரிசிக்கலாம். இக்கோயிலில் தல விருட்சமாக வன்னி மரமும் வில்வமரமும் உள்ளன. வன்னி மரத்தின் அடியில் வன்னி விநாயகர் அருள்கிறார். விநாயகர், பிரம்மா, லிங்கோத்பவர் சண்டிகேஸ்வரர், காலபைரவர், தட்சிணாமூர்த்தி, நவகிரகங்களையும் இந்த கோயிலில் தரிசிக்கலாம்.
 
     
 
பிரார்த்தனை
    
   இங்குள்ள விஷ்ணு துர்க்கை மிகவும் ஆற்றல் படைத்தவள். திருமணமாகாத பெண்கள் பதினொரு வெள்ளிக்கிழமைகள் இந்த அன்னையை வழிபட அவர்களது திருமணம் தடையின்றி நடைபெறும். சுப்ரமணியர் அவரை வேண்டி வணங்க கல்வி விருத்தி, வாக்கு சித்தி கிடைக்கப் பெறலாம்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  இவருக்கு புதன்கிழமைதோறும் அதன் அபிஷேகம் செய்து வணங்கினால் குரல்வளம் பெருகும் என்கிறார்கள். சங்கீத வித்வான்கள், புதிதாக இசைப்பயிற்சி பெற்று வருபவர்கள் அன்றைய தினத்தில் இங்கே வந்து தரிசிப்பதைக் காணலாம். செவ்வாய் தோஷமும் இவரை வழிபட்டால் விலகும். சுந்தரேஸ்வரருக்கு சந்தன அபிஷேகம் செய்து வணங்கினால் குடும்ப பிரச்னைகள் தீரும், மனபயம் மறையும், குழந்தை பாக்யம் கிட்டும், குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் நொடிகள் அகலும், குடும்பத்தில் அகால மரணம் ஏற்படாது. பில்லி, சூனியம், ஏவல் போன்ற தீங்குகள் விலகி ஓடும். விபத்துகளால் ஏற்பட்ட காயம் விரைவில் ஆறி, பூரணநலம் பெறுவது உறுதி என்கிறார்கள். மணமானதும் தங்கள் கணவருடன் வந்து துர்க்கைக்கு மஞ்சள் காப்பு அணிவித்து, தங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறார்கள். 
    
 தலபெருமை:
     
  இக்கோயிலில் வந்து வழிபடுவதால் ஜென்ம சனி, பாத சனி, அஷ்டமச் சனி ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகள் விலகுகிறது என்கிறார்கள். இங்குள்ள காலபைரவர் கல்வி, அழகு, செல்வாக்கு போன்றவற்றை தருபவர். இவரை தேய்பிறை அஷ்டமியில் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர்.
 
     
  தல வரலாறு:
     
  சனீஸ்வர பகவான் தமது, காகவாகனத்துடன் நின்ற கோலத்தில் தனிச் சன்னிதியில் சிவனை நோக்கி எழுந்தருளியுள்ள தலம், சேரன் மாநகர். கோயில் வெகு நேர்த்தியாக, சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. ஆதிகாலத்தில் சிறிய விநாயகர் கோயிலாக இருந்து பிற்காலத்தில் அனைத்து தெய்வங்களையும் உள்ளடக்கிய சிவன்கோயில் உருவாகி இருக்கிறது. மூலவர் சுந்தரேஸ்வரர் தினம் ஒரு அலங்காரத்தில் விசேஷ காட்சி தருகிறார். மூலவருக்கு இடதுபுறம் தெற்கு நோக்கி அன்னை மீனாட்சி தினம் ஒரு அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இக்கோயிலில் வந்து வழிபடுவதால் ஜென்ம சனி, பாத சனி, அஷ்டமச் சனி ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகள் விலகுகிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar