Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பாலதண்டாயுதபாணி
  அம்மன்/தாயார்: வள்ளி, தெய்வயானை
  தல விருட்சம்: கடம்பமரம்
  தீர்த்தம்: இடிதீர்த்தம்
  ஆகமம்/பூஜை : இரண்டு கால பூஜை காமிகாகம முறைப்படி
  ஊர்: கோட்டுப்புள்ளாம் பாளையம்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  செவ்வாய் கிழமைகளில் நடைபெறும் சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை இத்தலத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற பூஜையாகும். சஷ்டி, கிருத்திகை, அமாவாசை ஆகிய தினங்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெறும். கார்த்திகை தீபம், தைப்பூசம் பங்குனி உத்திரம் மற்றும் வைகாசி விசாகம் ஆகிய விழாக்கள் வருட திருவிழாக்களாகும். சுற்று வட்டாரத்தில் உள்ள ஊர் மக்கள் காவடி எடுத்து பாத யாத்திரையாக ஆடல் பாடலுடன் நேர்த்திக் கடனைச் செலுத்துவது கண்களை விட்டு அகலாத நிகழ்வாகும். முருகனின் பிறந்த தினமான வைகாசி விசாகத்தில் நடைபெறும் படிபூஜையும் முக்கிய விழாவாகும். அனைத்து படிகளையும் தண்ணீரால் கழுவி சுத்தம் செய்து, பசுஞ்சாணத்தால் மெழுகி, கோலமிட்டு தனித்தனியே ஒவ்வொரு படிக்கும் மாலை அணிவித்து தீபம் ஏற்றி தேங்காய் பழம் நெய்வேத்தியம் படைத்து பூஜைகளைச் செய்வர். நாதஸ்வர இசையுடன் கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி தேவாரம், திருவாசகம் ஆகிய பாடல்களை ஓதுவாமூர்த்திகள் பண் இசைக்க நடைபெறும் படிபூஜை விழா இத்தலத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றாகும்.  
     
 தல சிறப்பு:
     
  திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் முருகனைப்போல் வடக்கு நோக்கி அருள் பாலிக்கும் தலம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். (விசேஷ தினங்கள் நேரம் மாறுபடும்) 
   
முகவரி:
   
  அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில், கோட்டுப்புள்ளாம் பாளையம், கோயம்புத்தூர்.  
   
    
 பொது தகவல்:
     
  அடிவாரத்தில் மலைப்படி ஆரம்பிக்கும் இடத்தில் இருபுறமும் இரண்டு யானைகளின் சிலைகள் நம்மை வரவேற்பது போன்று அமைந்துள்ளது. அருகில் பாத விநாயகர் சன்னிதியும் மண்டபமும் உள்ளன. 98 படிகள் ஏறி கோயிலை அடையலாம். கோயில் வாசல் முன்பு அழகிய வேலைப் பாடுகளுடன் கூடிய தீப ஸ்தம்பமும் மண்டபமும் சிற்ப வேலைப்பாடுகளுடன் திகழ்கின்றது. ஸ்தம்பத்தின் அடிப்பகுதியில் மயில், விநாயகர், முருகன் என புடைப்பு சிற்பங்களால் வடிக்கப்பட்டுள்ளன. அடுத்துள்ள மகா மண்டபத்தில் உயர்ந்த நிலையில் அமைந்துள்ள கருவறையைக் காணலாம். சனீஸ்வரன், நவகிரஹங்கள், மஹாவிஷ்ணு, வள்ளி தெய்வயானை, மகுடேஸ்வரர், சவுந்தராம்பிகை ஆகிய பரிவார தெய்வங்கள் மகா மண்டபத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். கோயிலை நன்கு பராமரித்து பளிச்சென சுத்தமாக வைத்திருப்பது போற்றுதலுக்குரியது. இடிவிழுந்து உண்டான சுனை ஆனதால் இடிதீர்த்தம் எனப்பெயர் பெற்றது.  
     
 
பிரார்த்தனை
    
   செவ்வாய் தோஷம் உள்ளவார்கள், குழந்தைபாக்கியம் திருமண தடை போன்றுவற்றுக்காக செவ்வாய் கிழமைகளில் நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு வேண்டினால் நிச்சயம் பலன் கிடைக்கின்றன. 
    
நேர்த்திக்கடன்:
    
  காவடி எடுத்து பாத யாத்திரையாக பாடலுடன் நேர்த்திக் கடனைச் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  இக்கோயில் பிரார்த்தனைக்கும் பரிகாரத்திற்கும் ஏற்ற ஸ்தலமாக அமைந்திருப்பது சிறப்பு. எனைநாடிவந்த கோள் என் செய்யும் எனும் பாடல்வரிக்கேற்ப ரத்த சம்பந்தமான நோய் உள்ளவர்கள் இடிதீர்த்தில் நீராடி கந்தனை வேண்டித் தொழுது தீராத வியாதியும் அகன்று பூர்ண குணம் அடைந்தோர் ஏராளம். குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்று வாக்கிற்கு ஏற்ப கல்விக்கு கந்த குருவாய் வெற்றி பெறச் செய்கின்றார். தினசரி காலை 8 மணிக்கும் மாலை 6 மணிக்கும் இரண்டு கால பூஜைகள் காமிகாகம முறைப்படி நடந்து வருகின்றன. கிராமத்து கோயில்கள் என்றாலே ஒரு வித எதார்த்தமும் பிற கோயில்களிலிருந்து மாறுபட்டும் இருக்கும். ஏராளமான பக்தர்கள் வேண்டுதல்களுக்காக வருவதிலிருந்து இக்கோயிலின் ஆற்றலையும் சாந்நித்யத்தையும் உணர முடிகிறது.  
     
  தல வரலாறு:
     
  குன்றுகளுக்கெல்லாம் அதிபனாய் விளங்குபவன் அழகன் முருகன். கோபிக்கு அருகில் உள்ள கோட்டுப்புள்ளாம் பாளையம் எனும் ஊரில் உள்ள ஒரு சிறிய மலை மீது பால தண்டாயுதபாணி என்னும் திருநாமத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அற்புத ஸ்தலம் ஆண்டவர் மலை. இதனை குஹகிரி எனவும் அழைக்கின்றனர்.பெரும்பாலும் புகழ்பெற்ற முருகன் குடிகொண்டுள்ள ஸ்தலங்களில் சித்தர்களோ அல்லது முனிவர்களோ முக்தி அடைந்த இடமாக இருக்கும். அத்தகைய தலங்களில் ஆற்றல் மேலோங்கி இருக்கும். இக்கோயில் அமைந்துள்ள இடம் ஒரு சிறிய கிராமம். விவசாயம் ஒன்றையே பிரதானமாகக் கொண்ட மக்கள் வசிக்கும் பகுதி. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் அடர்ந்த தர்ப்பை வனம் மேவிய பகுதியாக இருந்தது இம்மலை. மலையைச் சுற்றிலும் வறண்ட பூமி குடிநீருக்கே சிரமப்பட்டிருந்த கிராமம். இம்மலையின் அடிவாரத்தில் தம்பிரான் சுவாமிகள் என்பவர் ஒரு கிணற்றைத் தோண்டினார். நல்ல நீர் கிடைத்தது.

சுற்றி உள்ள கிராமமக்களுக்கு ஏற்பட்ட மனநோய்களை குணப்படுத்தி வந்தார். அச்சமயத்தில் கருப்பண்ண சித்தர் என்ற முனிவர் இம்மலையில் தவம் மேற்கொண்டிருந்தார். மலையில் வியாபிக்கும் தெய்வீக அதிர்வுகளை உணர்ந்து மலைமேல் மண்கோயிலையும் சிறிய முருகன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடுகளை செய்து வந்தார். ஒரு சமயம் பூஜையின் போது ஆழ்ந்த நிஷ்டையில் தியானம் மேற்கொண்டு, கோயிலின் தெற்கு திசையில் கங்கை நதியாக வந்து சேரும். அதில் பல்லாயிரம் ஏக்கர் பூமி பாசனம் கண்டு விவசாயம் செழித்து ஓங்கும். அதன் பலனாக கிராம மக்கள் செல்வச் செழிப்புடன் வாழ்வர் என உரைத்தார். எத்தனையோ வருடங்களுக்கு முன் அருள்ஜோதி கண்ட சித்தர் சொல்லிய வாக்கு பலித்து பவானி வாய்க்கால் பாசனம் இப்பகுதிக்கு வந்து விசாயம் செழிப்புடன் திகழ்கிறது. தற்போது கோயிலைச் சுற்றி எங்கு நோக்கினும் பச்சை பசேல் என பயிர்களும் தென்னை மரங்களும் வளர்ந்து ரம்மியமாக காட்சி தருவதைக் காண முடிகிறது.

அவருக்குபின் குப்பண சுவாமிகள் என்ற சித்தர் இக் கோயிலுக்கு வந்து நீண்ட நாட்கள் கோயிலிலேயே தங்கி பூஜை செய்து வந்தார். நீர் நிலையருகே தியானத்தில் ஈடுபட்டு சித்தராய் ஞானம் பெற்றார். தான் சமாதி ஆகப்போகும் நேரம் நாள் காலம் மற்றும் நட்சத்திரம் குறித்து தியானத்தில் இருக்கும் போதே தெரிவித்தார். அவர் குறிப்பிட்ட அதே நாளில் சமா தியானது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இம்மகான்களின் சமாதி அடிவாரத்தில் இன்றும் உள்ளன. இம்மகான்களுக்குப் பின் கோயில் சிறிது சிறிதாகச் சிதிலம் அடைந்தது. ஊர் பொதுமக்கள் இம் முருகனுக்கு புதியதாக கோயில் எழுப்பி புதிய சிலையை பிரதிஷ்டை செய்ய திட்டமிட்டனர். கிராம மக்களின் பெருமுயற்சியால் மலை உச்சியில் ஓர் அழகிய கோயில் உருவானது. மலைப்படிகளும் கட்டப்பெற்று முழுமை அடைந்த பின் ஆன்மிக சான்றோர்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. வலது கரத்தில் தண்டத்தையும், இடக்கரத்தை இடுப்பில் வைத்தபடியும் கருவறையில், நின்ற கோலத்தில் எழிலாய் இளங்குமரன் பாலதண்டாயுதபாணி என்னும் திருநாமத்தில் எழுந்தருளி உள்ளார். மூலவரின் முன் வள்ளி தெய்வயானை சமேத முருகன் உற்சவ மூர்த்தியாக அருள்கின்றார்.

தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் முருகனைப்போல் வடக்கு நோக்கி அருள்பாலிக்கும் தலம்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar