Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கணீஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு கணீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கணீஸ்வரர், கணிச்சபுரீஸ்வரர், கணிச்சநாதர்
  அம்மன்/தாயார்: பெரியநாயகி
  தல விருட்சம்: வேங்கை மரம்
  தீர்த்தம்: சிவகங்கை
  ஊர்: கணிசப்பாக்கம்
  மாவட்டம்: கடலூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பங்குனி உத்திரத்தின்போது செடல் உற்சவம் , ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் . வைகாசி சதயம் ஆண்டு விழா  
     
 தல சிறப்பு:
     
  கணீஸ்வரர் திருமண கோலத்தில் லிங்கத்தின் பின்புறம் சுதையுருவ சிலையில் அருள்பாலிக்கிறார்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  பெரியநாயகி சமேத கணீஸ்வரர் திருக்கோவில், கணிசப்பாக்கம் ஊராட்சி, பண்ருட்டி வட்டம், கடலுார் மாவட்டம்-607106  
   
போன்:
   
  +91 9443666413, 99946 53232 
    
 பொது தகவல்:
     
  கோவிலின் முதலில் விநாயகர், பிரதோஷ நந்திபகவான், அதிகார நந்திபகவான், ரகசிய நந்திபகவான், பாலவிநாயகர், மூலவர் லிங்கம், பின்புறம் திருமண கோலத்தில் அம்பாள் பெரியநாயகி, கணிஸ்வரர் திருமணகோலத்தில் காட்சியளிக்கிறார்.  மேற்கு பார்த்த அம்பாள் பெரியநாயகி அம்பாள் முன்பு ரகசிய நந்திபகவான், சூரியன், சந்திரன், கோவில் பின்புறம் ஆதிவிநாயகர், சித்திவிநாயகர், பஞ்சமூர்த்தி சுவாமிகள், முருகன் வள்ளி தெய்வானை, அகத்தியர், மூலவர் பின்புறம் திருமால்.
 காசிவிஸ்வநாதர், காசிவிசாலாட்சி அம்மன், நாகராஜன், சேதுராஜன், அன்னபூரனி, குருபகவான், பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்கை, விஷ்ணுதுர்கை, நவக்கிரகர்கள், காலபைரவர், ஆஞ்சநேயர் ஆகிய சுவாமிகள் சிலைகளும் உள்ளன.
 
     
 
பிரார்த்தனை
    
  திருமணத்தடை, குழந்தையின்மை, தீராத நோய், தொழில் முடக்கம், வீடு,மனை, குடும்ப பிரச்னை உள்ளிட்ட எந்த பிரச்னை என்றாலும் கணீஸ்வர பெருமான் அவற்றை தீர்த்து வைப்பார் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

ஜாதக குறைபாடுகள், குறிப்பாக ஜாதகம் பார்க்கச் செல்பவர்கள், சென்று விட்டு வந்தவர்கள் இந்த கோயிலில் வந்து வழிபட்டால் ஜாதகத்தில் உள்ள தோஷங்களின் வீரியம் குறைந்து மன நிம்மதி அடைவார்கள் என்பது ஐதீகம்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  சிவனுக்கும், அம்மனுக்கும், அபிேஷகம் செய்து புது வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  தற்போது சுயம்புவாக தோன்றிய வேம்பு மரம் உள்ளது. கோயில் சிவலிங்க அமைப்பை வைத்துப் பார்க்கும்போது இது 8-9ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. 1200 ஆண்டுகளுக்கு முன்பு பிரசித்தி பெற்றிருந்தது.

பல கல்வெட்டுகள் காலப்போக்கில் பகைவர்களால் அழிக்கப்பட்டிருக்கலாம்.  மிகப்பெரிய அளவில் கோயில் இருந்ததற்கான அடித்தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ராஜராஜசோழனின் மகன் முதலாம் ராஜேந்திரசோழன் இவ்வூரின் கிழக்கே பெரிய ஏரியை அமைத்துக் கொடுத்துள்ளான்

திருவதிகை கோயிலின் முதல் பிராகாரத்தில் மடப்பள்ளி அருகில் தென்புற சுவரில் உள்ள கல்வெட்டில் இந்தத் தகவல் தெரியவருகிறது.
 
     
  தல வரலாறு:
     
 
சுமார் ஆண்டுகளுக்கு முன் பாக்கம் என்கிற ஊரில் கணிக்கணர் எனும் பெயருடைய சோதிடர் வாழ்ந்து வந்தார் . பாமரமக்கள் முதல் அரசர் வரை பல்வேறு தரப்பினர் வந்து சோதிடம் பார்த்து வந்தனர். சிறந்த சிவபக்தரான இவர் நாள்தோறும் சிவபூஜை முடித்த பிறகு தான் சோதிடம் பார்க்க அமர்வார்.  ஒருநாள் அருகிலுள்ள சித்தர்சாவடியிலிருந்து சித்தர்கள் ஐந்துபேர் சோதிடம் பார்க்க வேண்டும் என ஒலைச்சுவுடி கட்டுகளுடன் வந்திருந்தனர்.

சிவபூஜை முடித்துவிட்டு வந்தபிறகு தான் சோதிடம் பார்க்க அமர்வார் என சோதிடரின் உதவியாளர் பேச்சை கேட்காமல் நேரே சோதிடர் பூஜை செய்யும் அறைக்கே சென்று நாங்கள் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டுமென்றும் அங்கள் சாதகத்தை இப்போதே கணித்து கூற வேண்டுமென்றும் கறினார். அதற்கு பன்மடங்கு பொன்பொருள் தருவதாகவும் ஆசைவார்த்தை கூறினார்.  இவற்றை பொறுமையாக கேட்ட கணிக்கனார் மன்னிக்க வேண்டும் யாராக இருந்தாலும் எம்மடங்கு பொன்பொருளை கொட்டிக்கொடுத்தாலும் நான் அனுதினமும் வணங்கும் சிவபெருமானுக்கு பூசனை புரியாமல் காரியத்தையும் தொடங்குவதில்லை . உங்களுக்கு அவசரமாக இருந்தால் இவ்வூரில் ஏற்கனே நன்றாக கணிக்கும் சோதிடரிடம் சென்று கணித்துக்கொண்டு செல்லுங்கள் என கூறினார்.

சரி சரி தங்களின் சிவபூஜையை முடித்துவிட்டோ வாருங்கள் தங்களுக்காகே நாங்கள் வெளியே காத்திருக்கிறோம் என்ற சித்தர் ஒருவர் மற்ற நால்வரையும் அழைத்துக்கொண்டு வெளியே காத்திருந்தனர். பூஜை முடித்து எழுந்து வந்த கணிக்கனார் வந்திருப்போரை வணங்கி விட்டு அமர்ந்தார். ஐந்து சித்தர்களில் முதன்மையாக இருந்த சித்தர் ஒருவர் தன்பெயர் வீரசித்தன் என கூறி தான் வைத்திருந்த ஒலைசுவடி கட்டு ஒன்றினை கொடுத்து இதற்கு பலன் கூற வேண்டும் என்றார். மன்னிக்க வேண்டும் சுவாமிகளே அட்டமா சித்திகளையும் பெற்றுதேர்ந்த தங்களுக்கு நான் சோதிடம் கணித்து பலன் கூறுவதா ? முக்காலங்களையும் உணர்ந்த தாங்கள் தான் எதிர்காலத்தை கணித்து கூற வேண்டும் என்று சோதிடர் வணங்கி கூறினார். நான் சித்தனாக இருந்தாலும் என் சாதகத்தில் எனக்கே சந்தேகம் வந்துவிட்டபடியால் அதைபோக்கவே உம்மிடம் வந்தேன். கூறுவது உன்கடமை அதுதொழில் தர்மும் கூட என சித்தர் கூறினார்.

ஒலைசுவடிகளை வாங்கி பிரித்துபார்த்து மீண்டும் கூர்ந்து நோக்கிய கணிக்கனார். ஆகா மிக மிக அற்புதமான சாதிகமாயிற்றே இது. தெய்வீக மனங்கமழும் இந்த சாதகத்தில் எந்தகுறையும் இருப்பதாக தெரியவில்லையே என்ன சந்தேகம் வந்துவிட்டது தங்களுக்கு என ? சோதிடர் வினவினார். எனக்கு திருமணம் நடக்குமா ? பிள்ளைபேறு உண்டா ? இதுதான் என் சந்தேகம் என்றார் வீரசித்தர். மறுபடியும் சாதகத்தை உற்றுநோக்கிய சோதிடர் சுவாமி தங்களுக்கு திருமணம் நடந்தேறிவிட்டது. இரு பிள்ளைகள் வேறு இருக்கிறார்களே என்று கூற வந்திருந்த மற்ற நான்கு சித்தர்களும் சிரித்துவிட்டனர். அதை கண்டு சிறிது சங்கடபட்ட வீரசித்தர் நீர் என்னய்யா சோதிடர் அப்பட்டமா ஒரு பொய்யை கூறி என்னை அவமானபடுத்திவிட்டீரோ இப்படி வாரும் என்று தனியே ஒரு புறம் அழைத்து சோதிடரே நானே இன்னும் திருமணமாகாமல் பிரம்மச்சாரியாக வாழ்கின்ற ஒரு சித்தன்.

இனி திருமணம் நடக்குமா அப்படி நடந்தால் பிள்ளைபேறு உண்டா என சந்தேகத்தை போக்கிகொள்ளவே இங்கு வந்தேன். உண்மை இப்படியிருக்க நீர் எம்முடன் வந்த நால்வர் முன்னால் என்னை அவமானபடுத்திவிட்டீர். என் பிரம்மச்சர்ய விரதத்தை பற்றி என்னுடன் வந்தவர்கள் என்ன நினைப்பார்கள் அது என் குற்றம் தான் என வீரசித்தர் கோபமாக கூச்சலிட்டார்.  நான் தினமும் வணங்கும் சிவபெருமான் மீது சத்தியம் தங்கள் சாதகம் அப்படித்தான் உள்ளது என கணிக்கானார் கூறினார். சரி சரி இப்படியே இருந்துவிட்டு போகட்டும் நீர் இப்படி கூறியதால் என்னுடன் வந்த நான்கு சித்தர்களும் என்னை பற்றி கேவலமாக நினைப்பார்கள் பொய் கூறி வந்த இவனும் சித்தனா என புறக்கணிப்பார்கள் எனவே அவர்கள் முன்னால் என் ஜாதக கணக்கில் சிறிது பிழை ஏற்பட்டுவிட்டது. இந்த வீரசித்தர் பற்றற்ற துறவி என்பது உண்மைதான் ! இவருக்கு மனைவி மக்களுக்கு வாய்ப்பில்லை என நீர் கூறியே ஆகவேண்டும். அப்படி நீர் கூறுவீரேயானால் இதை அதற்கு ஈடாகவைத்துக்கொள் என பொற்காசுகள் கொண்ட கனத்த முடிச்சு பையை சோதிடர் முன்பு நீட்டினார்.
 அதைபுறந்தள்ளிய சோதிடர் ஒரு போதும் நான் பொய்புகலமாட்டேன் . நான் கூறியது கூறியது தான் எந்த மாற்றமும் இல்லை தாங்கள் கோபமிட்டு சாபமிட்டாலும் நான் உண்மையை தான் கூறுவேன் என ஆவேசமாக கூறும் போது மற்ற நான்கு சித்தர்களும் உள்ளே வந்து நான்கு சித்தர்களும் வீரசித்தரின் சாதக சுவடியை மறுபடியும் கணிக்கணாரிடம் கொடுத்து நீ தினந்தோறும் பூஜை செய்து வணங்கும் இடத்திற்கு சென்று சிவபெருமான் முன்பு இந்த சுவடிகட்டினை வைத்து நான் கணித்து கூறிய ஜாதகத்தில் தவறில்லை... பொய்யுமில்லை அனைத்தும் உண்மைதான் என்று சத்தியம் செய்துவிட்டு, இந்த ஒலைச்சுவடிகட்டினை பிரித்துபார் அப்போது தான் உனக்கு உண்மை விளக்கம் புரியும் என்றனர். கணிக்கனார் அவ்வாறே ஒலைச்சுவடி கட்டினை பெற்றுக்கொண்டு தான் பூஜை செய்யும் சிவலிங்கத்திற்கு முன்பு சென்று சுவடிகட்டினை வைத்து அதன்மீது தன் இருக்கைகளையும் வைத்து ிவபெருமானே அடியேன் கணித்து கூறிய சோதிடம் சரிதான் பொய்யில்லை உண்மையே இதற்கு நீதான் உண்மை விளக்கம் தர வேண்டும் என கூறி ஒலைசுவடியை பிரித்து பார்த்தார்.

சுவடிகளிலிருந்த சாதக குறிப்புகள் அனைத்தும் மறைந்து போயிருந்தன. அதற்கு பதிலாக திருவதிகை வீரட்டானேஸ்வரர் மகாதேவர் என ஒவ்வொரு சுவடியிலும் இருந்தன. ஒம் நமச்சிவாய  எம்பெருமானே ! வீரசித்தராக எம்மிடம் வந்தது. திருவதிகை வீரட்டானமுடைய மகாதேவரா ? சிவ.. சிவ.. என்று உருகியபடி லைசுவடிகளோடு வெளியே ஒடிவந்து பார்க்கிறார். ஐந்து சித்தர்களையும் காணவில்லை. திகைத்து நின்றார். ஒரே ஒர் ஒலைச்சுவடி மட்டும் கணிக்கணாரின் எதிரே வந்து விழுவது தெரிந்தது அதை எடுத்து பார்க்கிறார். திருவதிகை வீரட்டானமுடைய மகாதேவர் என்றே இருந்தது. தனக்கு முன் தோன்றிய ஒரு பேராளிப்பிழம்மை காண்கிறார். சிவபெருமான் ரிஷபவாகனத்தில் அம்மையாராக காட்சியளிக்கிறார். அருகில் விநாயகர், முருகன், சண்டிகேசுவரருடன் பஞ்சமூர்த்திகளாக காட்சியளித்தனர்.
 மெய்சிலிர்த்து வணங்கிய கணிக்கனார் எல்லாம் வல்ல பரம்பொருளே என்னே உன் மகிமை இந்த ஏழை சோதிடனிடம் சோதிடம் கணிக்க தங்களா திருவுளம் கொண்டீர்கள் இறைவனிடம் எப்படியேல்லாம் பேசிவிட்டேன்

மெய்சிலிர்த்து விழுந்து வணங்கிய கணிக்கனார், எல்லாம் வல்ல பரம்பொருளே, இது என்ன சோதனை! என்று கேட்டு நெகிழ்ந்தார். சிவபெருமான், சோதனை அல்ல கணிக்கரே, உம் சாதனைகளை மெச்சவே வந்தோம். ஜோதிடம் கணிக்கும்போது உண்மையை கூற வேண்டும், பொய்கூறி பிழைத்தல் தவறு என்பதை உணர்த்திய உமக்கு அருள்புரிந்தோம். உமக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார்.

அதற்கு கணிக்கர், உலகையே கணிக்கும் பரம்பொருளே, நீங்கள் ஜோதிடம் கணிக்க வந்த இந்தத் திருவிளையாடலால் கணி ஈசராக, கணிச்சபுரீஸ்வரராக இவ்வூரில் கோயில் கொண்டு நாடி வருவோருக்கு நலம்புரிய வேண்டும். அவரவர் ஜாதகத்தை கொண்டு வந்து தங்கள் திருவடியில் வைத்து வணங்கி செல்வோருக்கு இடையூறுகளை போக்கி நன்மைகளை தந்தருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உடனே சிவபெருமான் கணிக்கரிடம், இனி இவ்வூர் உன்பெயரால் கணிச்சப்பாக்கம் எனும் கணிச்சபுரி என்று விளங்கும். உன் ஜாதக கணிப்பில் நீ மென்மேலும் புகழ்பெற்று என் பதம் அடைவாய்என்று ஆசியருளினார்.

இந்த நிகழ்ச்சியை கேட்டறிந்த அரசன், கணிக்கனாரின் விருப்பப்படி கணீஸ்வரர் ஆலயத்தை நிர்மாணித்தார்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: தற்போது சுயம்புவாக தோன்றிய வேம்பு மரம் உள்ளது. கோயில் சிவலிங்க அமைப்பை வைத்துப் பார்க்கும்போது இது 89ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar