Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பாலசுப்பிரமணியர், சுவாமிநாதசுவாமி
  தல விருட்சம்: அரசு
  தீர்த்தம்: குமார தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : காரணாகமம்
  ஊர்: குமரன்குன்றம்
  மாவட்டம்: சென்னை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வைகாசி விசாகம், கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம்.  
     
 தல சிறப்பு:
     
  குமரனாகிய முருகன் குடியிருக்கும் குன்றம் என்பதால் தலம், "குமரன் குன்றம்' என்றழைக்கப்படுகிறது. சித்திரை பிறப்பின்போது, இங்குள்ள 120 படிகளுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அன்று சுவாமி ஊஞ்சலில் எழுந்தருளுவார்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும் 
   
முகவரி:
   
  அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், குமரன்குன்றம், குரோம்பேட்டை, சென்னை-600 044.  
   
போன்:
   
  +91 - 44 - 2223 5319, 93805 10587. 
    
 பொது தகவல்:
     
  ஐஸ்வர்ய முருகன்: மூலஸ்தானத்தில் சுவாமிநாதர், கையில் தண்டம் வைத்து பால வடிவில் காட்சி தருகிறார். இவரது பீடத்திலும், சன்னதி எதிரிலும் யானை வாகனம் இருக்கிறது. உற்சவர் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். மலையிலேயே வற்றாதகுமார தீர்த்தம் இருக்கிறது. ஆடி, தை கிருத்திகை, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் சுவாமிமலையை "கிரிவலம்' வருகிறார்.  
     
 
பிரார்த்தனை
    
  திருமண, புத்திர தோஷம் நீங்க இத்தல முருகனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இங்குள்ள முருகன் வடக்கு திசை நோக்கியிருப்பதால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக இவருக்கு மங்கலப்பொருட்கள் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். எனவே இவரை பக்தர்கள், "ஐஸ்வர்ய முருகன்' என்றும் அழைக்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  முருகன், சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள். 
    
 தலபெருமை:
     
  மலைக்கோயில்களான திருநீர்மலை, திரிசூலம் ஆகிய தலங்களுக்கு மத்தியில் இக்கோயில் அமைந்துள்ளது. மலை அடிவாரத்தில் சித்தி விநாயகர், இடும்பன் சன்னதி இருக்கிறது. இங்குள்ள காளி, ஜெயமங்களதன்மகாளி என்றழைக்கப்படுகிறாள்.

தன்னை வேண்டுபவர்களுக்கு வெற்றியும் (ஜெயம்), மங்களமும் சாந்தமாக தருபவள் என்பதால் இவளுக்கு இப்பெயர். பவுர்ணமியில் இவளுக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. கந்த சஷ்டியின்போது சூரசம்ஹாரம் முடிந்ததும், முருகன் யானை வாகனத்தில் புறப்பாடாகிறார்.

வலது கால் தூக்கிய நடராஜர்: மலைக்கோயிலுக்குச் செல்லும் வழியில் சுந்தரேஸ்வரர் கோயில் இருக்கிறது. இங்கு சிவன், வடக்கு நோக்கிய சன்னதியில், கஜபிருஷ்ட விமானத்தில் கீழ் அருளுகிறார். லிங்கத்தின் பாணத்தில் சிவனின் முழு உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. அம்பாள் மீனாட்சிக்கும் சன்னதி இருக்கிறது. இங்குள்ள நடராஜர், இடது காலை ஊன்றி, வலக்காலை தூக்கி நடனமாடியபடி காட்சி தருகிறார்.

மதுரையில் அருளும் மீனாட்சி, சுந்தரேஸ்வரருக்கு அமைக்கப்பட்ட சன்னதி என்பதால், இவ்வாறு நடராஜர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார். சிவசக்தி அம்சமான சிவனின் வலது பாதம், சிவனுக்குரியதாக கருதப்படுகிறது. எனவே இங்கு நடராஜரை "தன்பாதம் தூக்கிய நடராஜர்' என்றும் அழைக்கிறார்கள. நடராஜர் வழிபாட்டிற்குரிய ஆறு நாட்களில், இவருக்கு விசேஷ அபிஷேகம் நடக்கிறது. சரபேஸ்வரருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு வேளையில் இவருக்கு விசேஷ பூஜை செய்து வழிபடுகின்றனர்.
 
     
  தல வரலாறு:
     
  பல்லாண்டுகளுக்கு முன்பு இத்தலத்தில் குன்று மட்டும் இருந்தது. ஒருசமயம் இவ்வூருக்கு வந்த காஞ்சிப்பெரியவர், இம்மலையைப் பார்த்து பிற்காலத்தில் இங்கு முருகன் கோயில் உண்டாகும் எனச் சொல்லிவிட்டுச் சென்று விட்டார். சில காலம் கழித்து பக்தர்கள் சிலர், இம்மலையை சீர்படுத்தினர். அப்போதும் குன்றில் ஒரு வேல் கிடைத்தது. அதை இங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். பின்பு முருகனுக்கு தனிக்கோயில் கட்டப்பட்டது. சுவாமிநாதன் என்று பெயர் சூட்டப்பட்டது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: குமரனாகிய முருகன் குடியிருக்கும் குன்றம் என்பதால் தலம், "குமரன் குன்றம்' என்றழைக்கப்படுகிறது. சித்திரை பிறப்பின்போது, இங்குள்ள 120 படிகளுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அன்று சுவாமி ஊஞ்சலில் எழுந்தருளுவார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar