SS கீதா அஷ்டோத்ர சத நாமாவளி! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> கீதா அஷ்டோத்ர சத நாமாவளி!
கீதா அஷ்டோத்ர சத நாமாவளி!
கீதா அஷ்டோத்ர சத நாமாவளி!

1. ஓம் ஸ்ரீ கீதா தேவ்யை நம: - ஸ்ரீ கீதா தேவிக்கு நமஸ்காரம்.
2. ஓம் விமலாயை நம: - மாசற்றவளுக்கு நமஸ்காரம்
3. ஓம் ஸுகதாயை நம: - சுகமளிப்பவளுக்கு நமஸ்காரம்.
4. ஓம் முனிஸம்ஸ்துதாயை நம: முனிவர்களால் துதிக்கப்படுபவளுக்கு நமஸ்காரம்.
5. ஓம் தத்வார்த்தபோதின்யை நம: - தத்துவத்தின் உட்பொருளைப் போதிப்பவளுக்கு நமஸ்காரம்.
6. ஓர் ஸர்வலோக ஸம்பூஜ்யாயை நம: - அகில உலகமும் பூஜிக்கும் இறைவிக்கு நமஸ்காரம்.
7. ஓம் ஸ்ரீகிருஷ்ண முக நிஸ்ஸ்ருதாயை நம: - ஸ்ரீகிருஷ்ணன் முகமலர்ந்து அருளப்பட்டவளுக்கு நமஸ்காரம்.
8. ஓம் பாபக்ன்னை நம: - பாவத்தை அழிப்பவளுக்கு நமஸ்காரம்
9. ஓம் புண்யதாயை நம: - புண்ணியத்தை நல்குபவளுக்கு நமஸ்காரம்.
10. ஓம் மஹா தேவ்யை நம: - மகாதேவிக்கு நமஸ்காரம்.
11. ஓம் நிஷ்ப்ரத்யூஹ சிதாத்மிகாயை நம: - தடையற்ற சைதன்ய வடிவினளுக்கு நமஸ்காரம்.
12. ஓம் சோக மோஹாபஹந்த்ர்யை நம: - சோக மோகங்களைப் போக்குபவளுக்கு  நமஸ்காரம்.
13. ஓம் மோக்ஷதாயை நம: - மோட்சத்தை அளிப்பவளுக்கு நமஸ்காரம்.
14. ஓம் ப்ரஹ்மபோதின்யை நம: - பிரம்மத்தைப் போதிப்பவளுக்கு நமஸ்காரம்.
15. ஓம் ப்ரஹ்மவித்யாயை நம: - பிரம்ம வித்தையானவளுக்கு நமஸ்காரம்.
16. ஓம் சிதாநந்தாயை நம: சைதன்யத்தை உணர்வதால் ஏற்படும் ஆனந்த ரூபிணிக்கு நமஸ்காரம்.
17. ஓம் பவக்ன்யை நம: - பிறவிப் பிணியை அகற்றுபவளுக்கு நமஸ்காரம்.
18. ஓம் பயநாசின்யை நம: - பயத்தை அழிப்பவளுக்கு நமஸ்காரம்.
19. ஓம் வேதத்த்ரயாத்மிகாயை நம: - மூன்று வேத வடிவினளுக்கு நமஸ்காரம்.
20. ஓம் அனந்தாயை நம: எல்லையற்றவளுக்கு நமஸ்காரம்.
21. ஓம் தத்வார்த்த ஞான மஞ்ஜர்யை நம: - தத்துவஞானமாகிய பூங்கொத்தாக இருப்பவளுக்கு நமஸ்காரம்.
22. ஓம் வ்யாஸ ஸங்க்ரதிதாயை நம: - வியாசரால் தொகுக்கப்பட்டவளுக்கு நமஸ்காரம்.
23. ஓம் பூதாயை நம: பவித்ரமானவளுக்கு நமஸ்காரம்.
24. ஓம் ஸம்சார மலமோசன்யை நம: - சம்மாரமாசை நீக்குபவளுக்கு நமஸ்காரம்.
25. ஓம் ஸர்வ சாஸ்த்ரமய்யை நம: எல்லா சாஸ்திரங்களாகவும் உள்ளவளுக்கு நமஸ்காரம்.
26. ஓம் மாத்ரே நம:- தாய்க்கு நமஸ்காரம்.
27.ஓம் ஸர்வதீர்த்தமய்யை நம: - அனைத்துத் தீர்த்தங்களானவளுக்கு நமஸ்காரம்.
28. ஓம் தத்வஸ்யாதி வாச்யோதித ப்ரஹ்மதத்வாய காகின்யை நம: - தத்வமஸி போன்ற (மஹா) வாக்கியங்களிலிருந்து எழும் பிரம்ம தத்துவத்தில் மூழ்கி இருப்பவளுக்கு நமஸ்காரம்.
29. ஓம் சாந்தி ப்ரதாயை நம: - சாந்தியை நல்குபவளுக்கு நமஸ்காரம்.
30. ஓம் பரானந்தாயை நம: - மேன்மையான ஆனந்தமானவளுக்கு நமஸ்காரம்.
31. ஓம் போதாம்ருத தரங்கிண்யை நம: - ஞானாமிர்த நதியாக விளங்குபவளுக்கு நமஸ்காரம்.
32. ஓம் விஸ்வ ஸம்ஸ்க்ருதி ஸமுத்பூதாயை நம:- உலகைப் பண்படுத்த தோன்றியவளுக்கு நமஸ்காரம்.
33. ஓம் விஸ்வ தர்மப்ரசாரிண்யை நம: - உலக நன்மைக்காகத் தர்மத்தைப் போதிப்பவளுக்கு நமஸ்காரம்.
34. ஓம் விஸ்வைக ரஸனாயை நம: - உலகிற்கெல்லாம் மூலமான ஒரே வாக் சொரூபமானவளுக்கு நமஸ்காரம்.
35. ஓம் ரமணீயார்த்த பாஸிதாயை நம: - மனதை ஈர்க்கும் உயர் கருத்துகளால் ஒளிர்பவளுக்கு நமஸ்காரம்.
36. ஓம் ரம்யாயை நம: அழகே உருவானவளுக்கு நமஸ்காரம்.
37. ஓம் விஸ்வமானவ ஸம்பூஜ்யாயை நம: - உலக மாந்தரால் பூஜிக்கப்படுபவளுக்கு நமஸ்காரம்.
38. ஓம் விஸ்வ மங்களகாரிண்யை நம: - உலகிற்கு மங்களமானவற்றை அருள்பவளுக்கு நமஸ்காரம்.
39. ஓம் விஸ்வ ஸித்தாந்த ஸம்மான்யை நம: - உலகின் எல்லா சித்தாந்தங்களாலும் மதிக்கப்படுபவளுக்கு நமஸ்காரம்.
40. ஓம் விஸ்வ ஸம்மோஹ நாசின்யை நம:- அனைத்துவிதக்குழப்பங்களையும் நீக்குபவளுக்கு நமஸ்காரம்.
41. ஓம் விஸ்வ ஸ்வரூபிண்யை நம: - அகில உலகமானவளுக்கு நமஸ்காரம்.
42. ஓம் விஸ்வவந்த்யாயை நம: - அகிலம் போற்றுபவளுக்கு நமஸ்காரம்.
43. ஓம் விஸ்வ தத்வ ப்ரகாஸின்யை நம: - அகில உலகுக்கும் தத்துவப் பிரகாசமாய் விளங்குபவளுக்கு நமஸ்காரம்.
44. ஓம் த்ரிகுணாதீத தத்வார்த்த பாஸின்யை நம:- முக்குணங்களையும் கடந்த தத்துவத்தை விளக்குபவளுக்கு நமஸ்காரம்.
45. ஓம் கிரந்திபேதின்யை நம: - தீர்க்க முடியாத சிக்கல்களைத் தீர்ப்பவளுக்கு நமஸ்காரம்.
46. ஓம் லோகோத்தர குணபேதாயை நம: - மிக உயர்ந்த குணங்களைப் புகட்டி மக்களை உயர்த்துபவளுக்கு நமஸ்காரம்.
47. ஓம் லோகோசித மதான்விதாயை நம: - மக்களின் உயர்வுக்கு உகந்த கருத்துகளை வழங்குபவளுக்கு நமஸ்காரம்.
48. ஓம் லோகோத்தாரண ஸம்சீலாயை நம:- மக்களைப் பந்தத்திலிருந்து விடுவிக்கும் பெருமை மிக்கவளுக்கு நமஸ்காரம்.
49. ஓம் லோகாமோத ப்ரவர்த்தின்யை நம: - மகிழ்ச்சியைப் பெருக்குபவளுக்கு நமஸ்காரம்.
50. ஓம் நிகிலாகில சாஸ்த்ரார்த்தாயை நம: - சகல சாஸ்திரங்களுக்கும் உறைவிடமானவளுக்கு நமஸ்காரம்.
51. ஓம் சுபௌஜ பதாம்புஜாயை நம: - மங்களமான ஆற்றல் மிகுந்த சொற்களால் ஆனவளுக்கு நமஸ்காரம்.
52. ஓம் அநிர்வாச்யாயை நம: - வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பெருமை உடையவளுக்கு நமஸ்காரம்.
53. ஓம் கம்பீராயை நம: - ஆழ்ந்த பொருள் பொதிந்தவளுக்கு நமஸ்காரம்.
54. ஓம் நித்யாயை நம: - அழிவின்றி இருப்பவளுக்கு நமஸ்காரம்.
55. ஓம் நித்ய ஸுகப்ரதாயை நம: - நித்திய சுகம் அளிப்பவளுக்கு நமஸ்காரம்.
56. ஓம் நைக வ்யாக்யான சம்பன்னாயை நம: - பலவிதமான விளக்க உரைகளின் வடிவானவளுக்கு நமஸ்காரம்.
57. ஓம் நாநாசார்ய ஸமாத்ருதாயை நம: - பல ஆசார்யர்களால் போற்றப்பட்டவளுக்கு நமஸ்காரம்.
58. ஓம் ஸ்வஸ்வானுகூல பாவார்த்த சோபிதாயை நம: - படிப்பவர்களுக்கு உகந்தபடி பொருளை உணர்த்துபவளுக்கு நமஸ்காரம்.
59. ஓம் சாந்தி தாந்தி ரூபிண்யை நம: - அமைதி, புலனடக்கம் ஆகியவற்றின் வடிவானவளுக்கு நமஸ்காரம்.
60. ஓம் நித்ய நூதன பாவார்த்ததாயின்யை நம: - தினமும் புதிது புதிதான அர்த்தங்களைத் தருபவளுக்கு நமஸ்காரம்.
61. ஓம் கோலகா மாதாயை நம: - பூமண்டலத்தின் தாயானவளுக்கு நமஸ்காரம்.
62. ஓம் ப்ராச்ய பாச்சாத்ய கண்டாந்தரநிவாஸ ஜனமோதின்யை நம: - கிழக்கிந்திய, மேற்கத்திய மற்றும் பல்வேறு கண்டங்களில் வாழ்பவர்களை மகிழ்விப்பவளுக்கு நமஸ்காரம்.
63. ஓம் அக்ஷராயை நம: - அழிவற்றப் பொருளானவளுக்கு நமஸ்காரம்.
64. ஓம் அத்வேஷின்யை நம: - வெறுப்பவற்றவளுக்கு நமஸ்காரம்.
65. ஓம் ஸர்வகால தர்மப்ரபோதின்யை நம: - எல்லாக் காலத்திற்கான தர்மத்தைப் போதிப்பவளுக்கு நமஸ்காரம்.
66. ஓம் தைவசம்பத்சுசம்பன்னாயை நம: - தெய்விக் குணநலன்கள் பற்றிய விளக்கங்கள் பொதிந்தவளுக்கு நமஸ்காரம்.
67. ஓம் அசுர பாவாதி வர்ஜிதாயை நம:- புலன்களை அடக்க அருள்பவளுக்கு நமஸ்காரம்.
68. ஓம் அஷ்டாதச மஹா யோக பூஷிதாயை நம: - 18 மஹாயோகங்களால் அலங்கரிக்கப்பட்டவளுக்கு நமஸ்காரம்.
69. ஓம் ப்ரஷ்டதாரிண்யை நம: - வழிமாறிப் போனவர்களையும் கரையேற்றுபவளுக்கு நமஸ்காரம்.
70. ஓம் ஸ்த்ரிசூத்ர ஸமுத்தாத்ரியை நம: - பெண்களையும் நலிந்தோரையும் மேம்படுத்துபவளுக்கு நமஸ்காரம்.
71. ஓம் ஸமபாவ விசோபின்யை நம: - சமத்துவத்தை வெளிப்படுத்துபவளுக்கு நமஸ்காரம்.
72. ஓம் ஈர்ஷ்யா ப்ரஸூத ஜாத்யாதிதுரஹங்கார காதின்யை நம: - தீண்டப்படாதவர், அந்தணர், தாழ்த்தப்பட்டவர் அனைவரையும் உயர்த்துவதில் ஈடுபட்டவளுக்கு நமஸ்காரம்.
73. ஓம் சண்டாள த்விஜசூத்ராதி ஸர்வோத்தரண தத்பராயை நம:- எல்லாப் பிரிவு மக்களையும் மேம்படுத்தும் தன்மை படைத்தவளுக்கு நமஸ்காரம்.
74. ஓம் மாயாபநோதின்யை நம: - மாயையைப் புறந்தள்ளுபவளுக்கு நமஸ்காரம்.
75. ஓம் ஸத்யாயை நம: - சத்தியமே உருவானவளுக்கு நமஸ்காரம்.
76. ஓம் த்வந்த தத்வ பேத விநாசின்யை நம: - பரம்பொருள் வேறு, நான் வேறு எனும் பேதத்தை அகற்றுபவளுக்கு நமஸ்காரம்.
77. ஓம் அபேதபாவ பீயூஷ வர்ஷிண்யை நம: - நானும் இறைபொருளும் வேறல்ல எனும் உயர்வான அமிர்தமாரியைப் பொழிபவளுக்கு நமஸ்காரம்.
78. ஓம் ஞான பாஸின்யை நம: - ஞானத்தை ஒளிரச் செய்பவளுக்கு நமஸ்காரம்.
79. ஓம் த்யாக ரூபாயை நம: - தியாக உருவானவளுக்கு நமஸ்காரம்.
80. ஓம் அனவத்யாயை நம: - குறைவற்றவளுக்கு நமஸ்காரம்.
81. ஓம் விமுக்த பலசாலின்யை நம: - மோக்ஷபலனை நல்குபவளுக்கு நமஸ்காரம்.
82. ஓம் யதாதிகாரி நிஷ்காமகர்ம தியானாதி போதின்யை நம: - மக்களின் மனப்பக்குவத்திற்கு ஏற்ப நிஷ்காம கர்மம், தியானம் முதலியவற்றைப் போதிப்பவளுக்கு நமஸ்காரம்.
83. ஓம் பவமக்ன ப்ரஜா நௌகாயை நம: - சம்சாரக் கடலில் தத்தளிப்பவருக்குப் படகானவளுக்கு நமஸ்காரம்.
84. ஓம் பந்தசேத விசக்ஷணாயை நம: -தளைகளை அறுக்கும் திறன் படைத்தவளுக்கு நமஸ்காரம்.
85. ஓம் பகவத் பாவ ஸம்பூர்ணாயை நம: - இறைத்தன்மையே நிறைந்தவளுக்கு நமஸ்காரம்.
86. ஓம் பவ வாரிதி தாரிண்யை நம: - பிறவிக் கடலைக் கடக்க அருள்பவளுக்கு நமஸ்காரம்.
87. ஓம் ஆத்யாத்மிக மஹாகாச லசத் ஸௌதாமினீஸமாயை நம: - ஆன்மிகம் எனும் பரந்த வானில் மின்னல் போன்றவளுக்கு நமஸ்காரம்.
88. ஓம் நிஷ்கலாயை நம: - கூறுகளற்ற அகண்ட ரூபிணிக்கு நமஸ்காரம்.
89. ஓம் நிர்மலாயை நம: - களங்கமற்றவளுக்கு நமஸ்காரம்.
90. ஓம் சாந்தாயை நம: - சாந்தமானவளுக்கு நமஸ்காரம்.
91. ஓம் ஸர்வதேஜோமய்யை நம: - அனைத்து விதமான தேஜஸையும் கொண்டவளுக்கு நமஸ்காரம்.
92. ஓம் சுபாயை நம: - சுபத்தை அளிப்பவளுக்கு நமஸ்காரம்.
93. ஓம் தமோ விமூட லோகாந்தகார நோதன சந்திரி காயை நம: - தமோ குணத்தால் மோகிக்கப்பட்டவர்களின் மன இருளைப் போக்கும் சந்திர ஒளியானவளுக்கு நமஸ்காரம்.
94. ஓம் ச்ருத்யந்தர்கத தத்வார்த்த போதின்யை நம: - வேதத்தின் நிறைவுப் பகுதியான உபநிஷத்தின் தத்துவார்த்தத்தைப் போதிப்பவளுக்கு நமஸ்காரம்.
95. ஓம் போத பாஸுராயை நம: - ஆன்ம போகத்தால் ஒளிர்பவளுக்கு நமஸ்காரம்.
96. ஓம் போதாம்ருத பயசுக்லாயை நம: - ஞான அம்ருதத்தின் பலனைத் தரும் சரஸ்வதிதேவிக்கு நமஸ்காரம்.
97. ஓம் பார்த்தவத்ஸ தர்மதேனவே நம: - பார்த்தனான கன்றுக்கு அறம் எனும் பாலூட்டிய பசுவிற்கு நமஸ்காரம்.
98. ஓம் தோக்த்ரு க்ருஷ்ணாயை நம: - பக்தர்களாகிய பசுக்களிலிருந்து அறம் எனும் பாலைக் கரக்கும் கிருஷ்ண சொரூபமானவளுக்கு நமஸ்காரம்.
99. ஓம் கோரூபாயை நம: - பசு வடிவில் இருப்பவளுக்கு நமஸ்காரம்.
100. ஓம் காமதேனவே நம: - காமதேனுவாக இருப்பவளுக்கு நமஸ்காரம்.
101. ஓம் ஸுகந்திகாயை நம: - சௌகந்தி மலரைத் தரித்தவளுக்கு நமஸ்காரம்.
102. ஓம் க்லின்ன பார்த்த தமோ ஹந்த்ர்யை நம: - அர்ஜுனனின் அறியாமையை நீக்கியவளுக்கு நமஸ்காரம்.
103. ஓம் க்ஷாத்ரதர்ம ப்ரவர்த்திகாயை நம: - க்ஷத்திரிய தர்மத்தில் ஈடுபடுத்தியவளுக்கு நமஸ்காரம்.
104. ஓம் கர்தவ்ய ச்யுத தீமூடஜன ஸத்பத தர்சிகாயை நம: - கடமை தவறும் அறிவற்றவர்களுக்கு நேர்வழி காட்டுபவளுக்கு நமஸ்காரம்.
105. ஓம் ஸர்வ ஸந்யாஸ ஸம்லக்ஷ்யாயை நம: - எல்லாவற்றையும் துறப்பதையே லட்சியமாகக் கொண்டவளுக்கு நமஸ்காரம்.
106. ஓம் பூர்ண பிரம்ம ப்ரபோதின்யை நம: - பூர்ண பிரம்மத்தைப் போதிப்பவளுக்கு நமஸ்காரம்.
107. ஓம் கலி ஸந்த்ரஸ்த ஸம்மூட லோகத்ராண சணாயை நம: - கலியின் பிடியில் சிக்கிய மக்களைக் காப்பவள் என்று புகழ் பெற்றவளுக்கு நமஸ்காரம்.
108. ஓம் பராயை நம: அனைத்தையும் கடந்த பரம்பொருளுக்கு நமஸ்காரம்.        


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar