SS கணேச ஸ்தோத்திரம்! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> கணேச ஸ்தோத்திரம்!
கணேச ஸ்தோத்திரம்!
கணேச  ஸ்தோத்திரம்!

நாரத புராணத்தில் ஸங்கஷ்டநாசன கணேச ஸ்தோத்திரம் எனும் அற்புதமான ஸ்தோத்திரம் உண்டு. நாரதர் விநாயகரின் 12 திருநாமங்களைப் போற்றித் துதிப்பதாகத் திகழ்கிறது. இந்த ஸ்தோத்திரம். இதன் பிற்பாதியில், இதை படித்து விநாயகரை பூஜிப்பதால் கிடைக்கும். பலன்களை நாரதர் விவரிப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த ஸ்தோத்திரம்.

ப்ரணம்ய ஸிரஸா தேவம் கௌரீபுத்ரம் விநாயகம்
பக்தாவாஸம் ஸ்மரேந்நித்யமாயு காமார்த்தஸித்தயே
ப்ரதமம் வக்ரதுண்டம் ச ஏக தந்தம் த்வ்தீயகம்
த்ருதீயம் க்ருஷ்ணயிங்காக்ஷல் கஜவக்த்ரம் சதுர்த்தகம்

லம்போதரம் பஞ்சமம் ச ஷஷ்டம் விகடமேவ ச
ஸப்தமம் விக்னராஜம் ச தூம்ரவர்ணம் ததாஷ்டகம்
நவமம் பாலசந்த்ரம் ச தஸமம் து விநாயகம்
ஏகாதஸம் கணபதிம் த்வாதஸம் து கஜானனம்
த்வாதஸைதானி நாமானி த்ரிஸந்த்யம் ய: படேந் நர;

ந ச விக்னபயம் தஸ்ய ஸர்வ ஸித்திகரம் ப்ரபோ;

ஆயுள், விருப்பம், பொருள் ஆகியவற்றை அடைவதன் பொருட்டு... கவுரியின் புதல்வனும், பக்தர்களிடம் வசிப்பவருமான விநாயகரை அனுதினமும் தொழுவோம் என்று துவங்கி, ஒன்றாவதாக, இரண்டாவதாக... என்று வரிசைப்படுத்தி பிள்ளையாரின் பன்னிரு பெருமைகளை பெயர்களைச் சிறப்பிக்கிறார் நாரதர்.

அவை: வக்ரதுண்டா, ஏக தந்தர், க்ருஷண பிங்காக்ஷர், கஜவக்த்ரர், லம்போதரர், விகடமேவர், விக்னராஜர், தூம்ரவர்ணர், பாலசந்திரர், விநாயகர், கணாதிபதி, கஜானனர்.

இப்படி 12 பெர்களையும் சொல்லும் நாரதர், அடுத்ததாக இவற்றைப் படிப்பதனால் உண்டாகும் பலனைச் சொல்கிறார்.

இவற்றை சந்தியாகாலங்களில் படிப்பவருக்குத் தடைகள் மற்றும் இடையூறுகள் பயம் ஏற்படாது. சர்வ காரிய ஸித்தி ஏற்படும்.

இந்த ஸ்தோத்திரத்தைப் படித்து பிள்ளையாரை மனமுருகி வழிபட்டு, அவரிடம் படிப்பைக் கோருபவன் படிப்பை அடைவான். பொருளை விரும்புபவன் பொருளை அடைவான். பிள்ளைகளை விரும்புபவர் நல்ல சந்தான பாக்கியத்தை அடைவார்கள். மோட்சத்தை விரும்பும் அன்பார்கள் மோட்சத்தை அடைந்து மகிழ்வார்கள். இந்த கணபதி ஸ்தோத்திரத்தைப் படிப்பதால் 6 மாதங்களுக்குள் கோரிய பலன் கிடைக்கும். ஒரு வருடம் ஜபித்தால் அணிமாதி ஸித்திகள் ஏற்படும். இதில் சந்தேகம் இல்லை என்று விவரிக்கிறார் நாரத மகரிஷி.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar