SS துர்க்கை துதி! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> துர்க்கை துதி!
துர்க்கை துதி!
துர்க்கை துதி!

இசைதந்து இல்வாழ்வின் இடர்நீக்கிக் காப்பவளே,
விசையுடனே மணமாலை விருப்பமொடு அளிப்பவளே,
திசையெல்லாம் திருவிளங்கத் திருவடியால் நடந்தவளே,
அசைவற்றபொருளதையும் ஆட்சிசெய்வாய் துர்க்கையளே!

அன்னை துர்க்கையே வணக்கம்! அகிலாண்ட ஈஸ்வரியே வணக்கம்!
மகிஷாசுரமர்த்தினியே வணக்கம்! மங்கள சண்டிகையே வணக்கம்!
அன்பின் வடிவே வணக்கம்! அகந்தையை அழிப்பாய் வணக்கம்!
கண்ணின் மணியே வணக்கம்! கஷ்டங்கள் தீர்ப்பாய் வணக்கம்!

வறுமையை ஒழிப்பாய் வணக்கம்! சிறுமையைக் களைவாய் வணக்கம்!
ஆக்கம் அளிப்பாய் வணக்கம்! ஊக்கம் அளிப்பாய் வணக்கம்!

மங்கள நாயகியே வணக்கம்! மணமான வாழ்வளிப்பாய் வணக்கம்!
சிந்தையில் உறைபவளே வணக்கம்! சீரான வாழ்வளிப்பாய் வணக்கம்!
வரம்வேண்டி நிற்கிறேன் வணக்கம்! வளமான வாழ்வளிப்பாய் வணக்கம்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar