SS ஏழுமலை வாழும் ஏழுமலையான்! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> ஏழுமலை வாழும் ஏழுமலையான்!
ஏழுமலை வாழும் ஏழுமலையான்!
ஏழுமலை வாழும் ஏழுமலையான்!

ஏழுமலை ஏறிச் சென்று - அந்த
ஏழுமலை யப்பனை சரணடையுங்கள்!
வாழும் நாட்கள் முழுதும் - அந்த
வெங்கடாஜல பதியே கதியென்றிருங்கள்!    (ஏழுமலை)

ஆதி சேஷனின் ஏழு தலைகளே - அற்புத
ஆனந்தமான ஏழு மலைகள்!
சேஷாத்ரி மலையேறும் சேவார்த்திகளே!- எல்லா
ஷேமங்களும் பெற்று வாழ்ந்திடுங்கள்!     (ஏழுமலை)

நீலாத்ரி மலைதனை தாண்டிடுங்கள் - நீங்கள்
நினைப்பது யாவையும் நிறைவேற்றிடுங்கள்!
கருடாத்ரி மலையினைக் கடந்திடுங்கள் - உங்கள்
கனவுகள் அனைத்தையும் நனவாக்கிடுங்கள்     (ஏழுமலை)

அஞ்சனாத்ரி மலைமீது ஏறிடுங்கள் - இனி
அஞ்சவேண்டாம் அவனை நம்பிடுங்கள்!
விருஷபாத்ரி மலையேறி சேவியுங்கள் - வரும்
வருஷமெல்லாம் விசேஷ வருஷங்கள் !    (ஏழுமலை)

நாராயணாத்ரி மலைதனை நாடிடுங்கள் - ஓம்
நமோ நாராயணாயென்று பாடிடுங்கள்!
வெங்கடாத்ரி மலைமீது வேண்டிடுங்கள் - அந்த
வேங்கடவன் விஸ்வரூபம் கண்டிடுங்கள்     (ஏழுமலை)


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar