SS பட்டினத்தாரின் தாய்ப் பதிகம்! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> பட்டினத்தாரின் தாய்ப் பதிகம்!
பட்டினத்தாரின் தாய்ப் பதிகம்!
பட்டினத்தாரின் தாய்ப் பதிகம்!

துறவியான பட்டினத்தார் தன் தாய் இறந்தும் கதறிப் புலம்பி ஒரு பதிகமே இயற்றியுள்ளார். அதைப் படிப்பவரின் மனம் கல் மனமாயிருந்தாலும் மெழுகைவிட கரையும்.

1. ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி?

2. முந்தித் தவம்கிடந்து முந்நூறுநாள் சுமந்தே
அந்திப் பகலாய் சிவனை ஆதரித்து தொந்தி
சரியச் சுமந்துபெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்?

3. வட்டிலிலும், தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டு காப்பாற்றி சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டு தீ மூட்டுவேன்?

4. நொந்து சுமந்துபெற்று, நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும்தாய் தனக்கோ
மெய்யிலே (உடலிலே) தீ முட்டுவேன்?

5. அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருகியுள்ள
தேனே! அமிர்தமே செல்லத் திரவியப்பூ
மானே, எனஅழைத்த வாய்க்கு?

6. அள்ளி இடுவது அரிசியோதாய் தலைமேல்
கொள்ளி தனை வைப்பேனோ? கூசாமல்மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே! என அழைத்த வாய்க்கு?

7. முன்ன இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையிலே
அன்ன இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே!

8. வேகுதே தீயதனில் வெந்துபொடி சாம்பல்
ஆகுதே பாவியென் ஐயகோ! மாசுக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை.

9. வெந்தாளோ சோணகிரி வித்தகா! நின்பதத்தில்
வந்தாளோ, என்னை மறந்தாளோ, சந்தமும்
உன்னையே நோக்கி உகுந்து, வரம்கிடந்துஎன்
தன்னையே ஈன்றெடுத்த தாய்.

10. வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar