SS அபராத க்ஷமாபண பஞ்சகம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> அபராத க்ஷமாபண பஞ்சகம்
அபராத க்ஷமாபண பஞ்சகம்
அபராத க்ஷமாபண பஞ்சகம்

குஞ்சரானன வேல் மூர்த்தி குருஸரஸ்வதியே போற்றி
பஞ்சரத்னாபராத பரிஹார ஸ்துதி ஸங்கீதம்
என் சபரீசன் மீதில் இயம்பவே பெரியார் பாதம்
நெஞ்சமுற்ப் பணிந்தேன் நிறைவுற இயம்புவேனே,

1. பூதகண நாதனென்றோதும் ஹரிஹரபூர்வ
புண்ணியவாரி நிதி சந்திரா! புஷ்களா யுவதி
மணிநிஷ்களானந்த சுகபோ கபரிபூர்ணா மதனா

வேதகுல மாது வழியாதி குலதெய்வமே! விதி
சாஸ்த்ர மூர்த்தே வித்தமொடு செந்நல்நடுமுத்து
ரத்னாலயம் வீற்றிருக்கும் ஆர்த்தி ஹரனே!

நீதி அரசன் மதுராதிபன் முன்பு நிதிஸேவ
நியமா நித்யம் நிஜபக்தர் தம் சித்தத்தில்
நர்த்தமிடும் நின்னடி பணிந்தேன் உந்தன்

ஆதினம் என் அகிலாபாரதம் பொறுத்தென்னை
யாண்டு கொண்டருள இது நல்லஸமயம் ஐயனே
சபரிகிரி மெய்யனே கருணா மிருதானந்த வாரிநிதியே!

2. நடனமிடும் உந்தன் ம்ருது சரணாரவிந்தத்தை நம்பியே
பக்தி செய்ய நானுமொரு அறிவிலா மானிடன்
சபல சித்தனாய் நாடெங்கும் ஒடி மனமும்
கடலோடும் கப்பல்கொடிமரக்காக்கைப்போல் கலக்கமுற்று
ஏங்கலானேன் கண்காட்சி தந்தெனது
பண்டாறிந்து மனக்கவலை தீர்த்தடிமை எந்தன்
உடமையும் தர உன் கருணை வேண்டும் சித்தம்
ஒருமித்து நேசிக்கவும் உறுதி பெறு துரிய
புருஷார்த்தமும் நல்குவீர் உந்தனுக்கு ஆதியான
அடிமை செய்த அகிலாபாரதம் பொறுத்தென்னை
யாண்டு கொண்டருள இது நல்ல ஸமயம் ஐயனே!
சபரிகிரி மெய்யனே கருணா மிருதானந்தவாரி நிதியே!

3. மறுவில்லாத மணி உன் வாசாலாசார மோதும் மந்திரி
வெள்ளைக்கல்பூதம் வாக்குறுதி செய்து அடிமை செபிக்க
மாத்திரம் சொன்ன வசனமோ அறிகிலேனே
வறுமையை தீர்த்து நல்வளம் பெருக்கவே
மனம் இல்லையோ இந்நேரம் மதியற்று உனதுபக்தி
வாழ்வறச்செய்ய மனமில்லாக் கள்ளனன்றோ

கிருபை செய்து எந்தனிடம் உரிமை வைத்தால்
உந்தன் கீர்த்தி குறைவதாமோ கிரிபஞ்சமகிரி
சஞ்சரிக்கும் உன் ம்ருத பாதகிஸலயம் சென்னி சேர்த்து
அறிவில்லாத என் அகிலாபராதம் பொறுத்து எனை
யாண்டுகொண்டருள இது நல்லஸமயம் ஐயனே! சபரிகிரி
மெய்யனே கருணா மிருதானந்த வாரி நிதியே!

4. நாகமணி சேகர வசீகர கிருபாகர நம்புவோர்க்கு
ஒருவன் என்றும் நாடெல்லாம் புகழ்
காடம்பலத்தில் நாரி பெற்றெடுத்த நாதா
கருணை செய்தெனது தேக
ரோகாதி வினை நீங்கிடச் செய்துஉபரி நிதி
பெறுக பக்தியும் புத்தியும் உபரி முக்தியானந்த
நிலையமும் சேர்க்கு முந்தன்
ஸ்ரீகர மரகத மகுட மங்கலம் சூழும் திருமேனி
நீலவடிவில் கண்டெனது திருஷ்டி
இரண்டும் குளிரச் செய்குவீர் உந்தனடிமை
ஆகிய எந்தன் அகிலாபராதம் பொறுத்தென்னை யாண்டு
கொண்டருள இது நல்லஸமயம் ஐயனே! சபரிகிரி
மெய்யனே! கருணாமிருதானந்த வாரி நிதியே!

5. பண்டென்னை விலையாகக் கொண்ட சாஸனமும் உந்தன்
அண்டையில் இருக்கவில்லையோ? பார்த்தடிமை சேர்த்துத்
துயரகற்றி பக்தர்களை பாலனம் செய்யவில்லையோ?
எண்டிசையண்ட பகிரண்ட மண்டலமெங்கும்
எண்ணான்கு உயிர்க்குயிராய் ஏக ஒளியாய் நின்று
தானே சமயமறிந்து உய்விப்பது போலும் எந்தன்

இன்னல்கள் தீர்த்தென்னை ஆண்டு கொண்டருள
உன்னையன்றி வேறுமொரு தெய்வமுண்டோ ஈச
மணதாஸஹ்ருதிவாசபூதேச உன்னிருசரண பஞ்சகம்
அண்டினவன் எந்தன் அகிலாபராதம் பொறுத்தென்னை
யாண்டு கொண்டருள இதுநல்ல ஸமயம்
அய்யனே! சபரிகிரி மெய்யனே!
கருணா மிருதானந்த வாரி நிதியே

பிரார்த்தனை விருத்தம்

1. கலியுகம் தன்னிலே கண் கண்ட கடவுளென்று
காத்திருக்கிறோம் ஐயா
ஏழையான அடியேனுக்கு நின் திருபாததரிசனம்
தந்தருள தாமதம் ஏனோ?
அனாத ரக்ஷகன் என்று அனவரதமும் போற்றிடும்
அடியவர்க்கு நீர் அருள் ஞான
மெய்த்தருவாய் வந்து நல்லாதரவு அளித்து
ஆட்கொண்டருளுவாய்
தவயோக சித்தாந்த சபரி பீடாச்ரமஸ்தான
மெய் ஞான குருவே!

2. பரதேசியான அடியன் அனுதினமும் வேண்டுவது
பாடினால் நின் சரணகீதங்கள் பாட வேண்டும்
உடுத்தால் உன் நீல ஆடை உடுக்க வேண்டும்.
அணிந்தால் நின் துளஸி மாலை அணிய வேண்டும்
சுமந்தால் நான் இருமுடி சுமக்க வேண்டும்
ஏறினால் நின் சபரிகிரி ஏற வேண்டும்!
இருமுடிச் சுமையதும் சுமக்க முடியாமல் நான் கரிமலை ஏறி வருந்து கின்ற சமயம்
தயவுடன் வந்தெனக்கு பாத பலமும் தந்து
திருவடி தந்தருள்வாய்
தவயோக சித்தாந்த சபரி பீடாச்ரம ஸ்தான
மெய்ஞான குருவே!

3. அந்தகாரத்திலே அருள்விளக்கு ஏற்றுவாய்
அடவியில் வழிகாட்டுவாய்
அரவு புலி மிருகங்கள் அலகைபேய் கள்வர்
அணுகாது காத்து வருவாய்
வந்தனை புரிந்து மலரிட்டு வாழத்துவோர்
மரபெல்லாம் ஓங்க வைப்பாய்
மாறாத நோய்க்கு ஒரு மருந்தாகி மாற்றுவாய்
மரண பயமும் போக்குவாய்
இந்தவிதம் நீ புரியும் எண்ணிலா விளையாடல்
எண்ணித் துதிக்க வசமோ
ஏறாத மலையேறி எய்தும் மெய்யடியவரை
ஏற்பதுன் பாரமல்லவா
சந்தன சுகந்தஸுந்தர, சுதந்திர, ஸித்த
ஸங்க ஸத்குரு நாதனே
சதமதனப் பிரகாச கலச முனி விஸ்வாஸ
சபரி மாமலை வாஸனே!

4. அரிய மறை புகழ்கின்ற அன்னதானம் செய்த
அருளாளர் வாழ்க! வாழ்க!
அனுதினமும் உன்கோவில் திசை நோக்கித்
தொழுகின்ற அடியவர்கள் வாழ்க ! வாழ்க !
விரத நியமங்களோடு மெய் மறந்து உனது பெயர்
முழங்குவோர் மகிழ்ந்து வாழ்க !
படியேறி வருவோர்க்கு அற்புத சித்தி காட்டும்
(உன்) திருநாம மகிமை வாழ்க !
சீரான கவிமாலை பாடுவோர் இகபரச்
சுகமெல்லாம் ஓங்கி வாழ்க!
சதமதன ப்ரகாச கலச முனி விச்வாஸ
சபரி மாமலை வாஸனே!

அபங்கம்

ஹே தயாளுவா ஹே க்ருபாளுவா
ஹே தயாளுவா ஸஹ்ய பூத நாயகா

பரமபாவன விச்வ மோஹன
சரண தாயக தேவமாச் ரயே

பம்பாயாஞ்சிதே பந்தளேச்வர
பங்கஜாஸன பாஹிமாம் ஸதா

பூர்ண புஷ்களா ஸேவிதாப் யஹோ
பூர்ண கருணாபாஹிமாம் ப்ரபோ

தேஹிமே தேவ தவ பாதஸேவனம்
பூத நாத தே ஜயது மங்களம்

அபங்கம்

ரத்ன கசித சிம்ஹாஸன
வாரி சோபே ஹரி நந்தன

வாமபாகே புஷ்களா மாயீ
தக்ஷீணாங்கே பூர்ணா தேவீ

ஸாது ஸங்க பரிவார
முனிஜன வந்த்ய பாத

சரண கோஷம் கேட்கும் ஸ்வாமி
சபரி யோக பீட சரீரி

ஸ்வாமி சரணம் சத்குரு நாதா
ஸ்வாமி சரணம் ஐயப்ப தேவா

தீபப் பெருமானை சன்னதியில் எழுந்தருளச் செய்து அந்த தீபத்திலிருந்து கற்பூர ஹாரத்தில் ஸ்வீகரித்து சன்னதியில் கற்பூர ஹாரத்தி செய்ய வேண்டும். அதற்கு ஸகலலோதர ஷண்முக என்று தொடங்கும் 3வது அஷ்டபதியைப் பாடவும்

திவ்ய நாமஸங்கரீத்தன
தீபப்ரதக்ஷிணம் ஸம்பூர்ணம்

நீநாமரூபமுலகு நித்ய ஜெயமங்களம்
பவமான சுதுடு பட்டு விந்தமுலகு (நீ)
ப்ரஹ்லாத நாரதாதி பக்துலு பொகடுசுண்டு (நீ)
ராஜீவ நயன தியாக ராஜாதி வினுத மைன (நீ)

(டோலோத்ஸவ பத்ததி பாடாமல் திவ்ய நாமத்துடன் பஜனை பூர்த்தி செய்தால் நீ நாம ரூப முலகு என்ற மங்களமும் மங்கள ச்லோகங்களும் சொல்லிய பின் ப்ரஸாதம் விநியோகம் செய்ய வேண்டும்)

(கற்பூர ஹாரத்தி)

ஸ்வாமியே ! சரணம் ஐயப்பா !!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar