SS விவேக சூடாமணி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> விவேக சூடாமணி
விவேக சூடாமணி
விவேக சூடாமணி

ஆதிசங்கரர் பத்து உபநிடதங்கள், பகவத் கீதை மற்றும் பிரம்மசூத்திரத்திற்கு விளக்கவுரை எழுதியதோடு சிறியதும் பெரியதுமான பிரகரண கிரந்தங்கள் எனப்படும் பல நூல்களையும் அருளியுள்ளார். அவற்றுள் விவேக சூடாமணி தலையாயது. தலையில் அணியும் ஆபரணங்கள் எல்லாவற்றிலும் சிறந்தது ரத்தினமாகிய சூடாமணி. அதுபோன்று அநாத்ம விவேகத்தைப் புகட்டுவதில் இந்நூல் தலைசிறந்து விளங்குவதால் விவேக சூடாமணி என்று இது பெயர் பெற்றது. ஆன்மிகச் சாதகர்களுக்கு இந்நூல் ஒரு பொக்கிஷம். இந்நூலிலிருந்து தன்முயற்சியின் முக்கியத்துவம், ஆத்மஞானத்தின் பெருமை ஆகிய பகுதிகள் இங்கு தரப்பட்டுள்ளன.

ஸ்வப்ரயத்ன ப்ரதானதா
தன் முயற்சியின் முக்கியத்துவம்

ருணமோசன கர்த்தார: பிது: ஸந்தி ஸுதாதய:

பந்த மோசன கர்த்தா து ஸ்வஸ்மாத் அன்யோ ந கச்சன

தந்தையின் கடனைத் தீர்த்து விடுவிப்பவர்களாக புத்திரன் முதலியவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒருவரின் அறியாமைத் தளையை நீக்கத் தன்னைத் தவிர அவனுக்கு வேறு எவனும் இல்லை.

மஸ்தக ந்யஸ்த பாராதே: து: க்கம் அன்யை:
நிவார்யதே

க்ஷுதாதி க்ருத து:க்கம் து விநா ஸ்வேன ந கேனசித்

தலையில் வைக்கப்பட்ட பளு முதலியவற்றால் ஏற்படும் துன்பமும் பிறரால் தீர்க்கப்படலாம். பசி முதலியவற்றால் ஏற்பட்ட துன்பமோ எனின், தன்னாலன்றி வேறு எவராலும் தீர்க்க இயலாது.

பத்யம் ஔஷத ஸேவா ச் க்ரியதே யேன ரோகிணா

ஆரோக்ய ஸித்தி : த்ருஷ்டாஸஸ்ய நான்யானுஷ்டித கர்மணா

கட்டுப்பாடான உணவு, முறையாக மருந்தை உட்கொள்ளுதல் ஆகியவற்றைப் பின்பற்றும் நோயாளியின் உடல் நலமடைகிறது. பிறரால் இச்செயல்கள் பின்பற்றப்பட்டால் நோயாளியின் உடல் நலம் பெறாது.

வஸ்து ஸ்வரூபம் ஸ்புடபோத சக்ஷுஷா
ஸ்வேனைவ வேத்யம் நநு பண்டிதேன
சந்த்ர ஸ்வரூபம் நிஜ சக்ஷுஷைவ
ஜ்ஞாதவ்யம் அன்யை: அவகம்யதே கிம்

ஒரு பொருளின் தன்மையை அறிவாளி தனது ஞானக் கண்ணாலேயே கண்டறிவார். சந்திரனுடைய வடிவம் தனது கண்களாலேயே காணப்பட வேண்டும். மற்றவனைக் கொண்டு காட்சியைக் காண இயலுமா?

அவித்யா காம கர்மாதி பாச பந்தம் விமோசிதும்
க: சக்னுயாத் விநா ஆத்மானம் கல்ப கோடி சதைரபி

அறிவின்மை, ஆசை, கர்மம் முதலிய வலைகளாலான தளையை நீக்குவதற்குத் தனக்குத்தானே முயற்சி செய்யவேண்டும். அல்லாமல் நூறு கோடி கல்ப காலமானாலும் எவனாலும் அத்தளைகளை நீக்க முடியாது.

ஆத்மஜ்ஞான மஹத்வம்
ஆத்ம ஞானத்தின் பெருமை

ந யோகேன ந ஸாங்க்யேன கர்மணா நோ ந
வித்யயா

ப்ரஹ்மாத்மைகத்வ போதேன மோக்ஷ: ஸித்த்யதி நான்யதா

யோகத்தால் அன்று, ஸாங்கியத்தால் அன்று, கர்மத்தால் அன்று, கல்வியால் அன்று; பிரம்மமும் தானும் ஒன்று என்ற அறிவின் விழிப்பால் மட்டுமே முக்தி சித்திக்கிறது; வேறு வகையில் இல்லை.

வீணாயா, ரூப ஸௌந்தர்யம் தந்த்ரீ வாதன ஸௌஷ்டவம்
ப்ரஜா ரஞ்ஜன மாத்ரம் தன் ந ஸாம்ராஜ்யாய
கல்பதே

வீணையின் வடிவழகும் கம்பிகளின் ஒலித் தெளிவும் மக்களுக்கு மனமகிழ்ச்சியை மட்டுமே அளிக்கும். அது சக்கரவர்த்திப் பதவிக்கு ஒருவனை உரியவனாக்கிவிடாது.

வாக் வைகரீ சப்த ஜரீ சாஸ்த்ர வ்யாக்யான
கௌசலம்
வைதுஷ்யம் விதுஷாம் தத்வத் புக்தயே ந து
முக்தயே

தெளிவான பேச்சு, பிரவாகம் போன்ற சொற்கள், சாஸ்திரங்களுக்கு விரிவுரை கூறும் திறமை, ஆழ்ந்த கல்வி ஆகிய இவை கல்விமான்களுக்கு, முன்னர் கூறியதுபோல் மகிழ்ந்து அனுபவிப்பதற்கு ஆகுமேயன்றி முக்திக்குப் பயன்படமாட்டா.

அவிஜ்ஞாதே பரே தத்வே சாஸ்த்ராதீதிஸ்து
நிஷ்பலா

விஜ்ஞாதே ஸபி பரே தத்வே சாஸ்த்ராதீதிஸ்து
நிஷ்பலா

உயர்ந்த உண்மை நிலை அறியப்படாவிட்டால் பல சாஸ்த்ரங்களைப் படித்தல் வீணே. உயர்ந்த உண்மை நிலை அறியப்பட்டு விட்டால் பல சாஸ்திரங்களைப் படித்தல் அவசியமில்லை.

சப்தஜாலம் மஹாரண்யம் சித்த ப்ரமண காரணம்

அத: ப்ரயத்னாத் ஜ்ஞாதவ்யம் தத்வஜ்ஞை:
தத்வமாத்மன:

சொற்களின் கூட்டம் ஒரு பெரிய காடு போன்றது. மனதை மயக்குவதற்குக் காரணமாகிறது. எனவே உண்மையறிவை நாடுபவர்களால் ஆத்மாவைப் பற்றிய உண்மை ஒன்றே நன்முயற்சியால் அறியப்படுதற்கு உரியது.

அஜ்ஞான ஸர்ப்ப தஷ்டஸ்ய ப்ரஹ்ம
ஜ்ஞானௌஷதம் விநா

கிமு வேதைச்ச சாஸ்த்ரைச்ச கிமு மந்த்ரை கிமௌஷதை:

அஜ்ஞானமாகிற பாம்பினால் கடிப்பட்டவனுக்கு பிரம்ம ஞானமாகிற மருந்து அல்லாமல் வேதங்களாலும் சாஸ்திரங்களாலும் ஆவதென்ன? மந்திரங்களால் ஆவதென்ன? வேறு மருந்துகளால் ஆவதென்ன?


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar