SS குளிர் ஜுரம் பிணிகளைத் தீர்க்கும் பிரத்யேக பாடல்! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> குளிர் ஜுரம் பிணிகளைத் தீர்க்கும் பிரத்யேக பாடல்!
குளிர் ஜுரம் பிணிகளைத் தீர்க்கும் பிரத்யேக பாடல்!
குளிர் ஜுரம் பிணிகளைத் தீர்க்கும் பிரத்யேக பாடல்!

கொடிமாடச் செங்குன்னூர் என்ற தலத்திற்கு திருஞான சம்பந்தர் சென்றிருந்த சமயத்தில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் குளிர்நோயால் பாதிக்கப் பட்டு வருந்துவதைக் கண்டார். அதோடு அவருடன் வந்திருந்த அடியவர்களையும் அந்தக் குளிர்க்காய்ச்சல் தொற்றிக்கொண்டு வாட்டியது.  அத்தலத்து இறைவனைப் போற்றிப் பதிகம் பாடிய ஞானசம்பந்தர், வாட்டும் குளிர்நோயை விரட்டி அருளுமாறு எம்பெருமானை வேண்டினார்.  பதிகத்தினை அவர் பாடி முடித்தபோது, பிணியால் பாதிக்கப்பட்டு இருந்த அனைவரும் காய்ச்சல் நீங்கி நலம் பெற்றனர்.

குளிர்காலத்தில் பரவக்கூடிய தொற்றுநோய்கள், உடலில் உஷ்ணம் குறைந்து பாதிப்பை ஏற்படுத்தும் குளிர்ஜுரம் முதலான பிணிகள் யாவும் நீங்கிடச்  சொல்லவேண்டிய பிரத்யேக பதிகம் இது.

அவ்வினைக்கு இவ்வினை ஆம் என்று
சொல்லும் அஃது அறிவீர்

உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு
ஊனம் அன்றே

கைவினை செய்து எம்பிரான் கழல்
போற்றுதும் நாம் அடியோம்;

செய்வினை வந்து எமைத் தீண்டப்
பெறா; திருநீலகண்டம்.

காவினை இட்டும் குளம் பல தொட்டும்,
கனி மனத்தால்

ஏவினையால் எயில் மூன்று எரித்தீர்
என்று இருபொழுதும்

பூவினைக் கொய்து, மலர்அடி போற்றுதும்,
நாம் அடியோம்.

தீவினை வந்து எமைத்தீண்டப் பெறா;
திருநீலகண்டம்.

முலைத்தடம் மூழ்கிய போகங் களும்
மற்ற எவையும் எல்லாம்

விலைத்தலை ஆவணம் கொண்டு எமை
ஆண்ட விரிசடையீர்

இலைத்தலைச் சூலமும் தண்டும் மழுவும்
இவை உடையீர்

சிலைத்து எமைத் தீவினை தீண்டப்
பெறா; திருநீலகண்டம்.

விண்உலகு ஆள்கின்ற விச்சாதரர்களும்
வேதியரும்

புண்ணியர் என்று இருபோதும் தொழப்
படும் புண்ணியரே.

கண் இமையாதன மூன்று உடையீர்!
உம்கழல் அடைந்தோம்.

திண்ணிய தீவினை தீண்டப் பெறா;
தீருநிலகண்டம்.

மற்ற இணை இல்லா மலை திரண்டு
அன்ன திண்தோள் உடையீர்!

கிற்று எமை ஆட்கொண்டு கோளாறு
ஒழிவதும் தன்மை கொல்லோ?

சொற்றுணை வாழ்க்கை துறந்து, உம்
திருவடியே அடைந்தோம்.

செற்று எமைத் தீவினை தீண்டப் பெறா;
திருநீலகண்டம்.

மறக்கும் மனத்தினை மாற்றி, எம்
ஆவியை வற்புறுத்திப்

பிறப்பு இல் பெருமான், திருந்து
அடிக்கீழ்ப் பிழையாத வண்ணம்.

பறித்த மலர்கொடு வந்து, உமை ஏத்தும்
பணி அடியோம்;

சிறப்பு இலித் தீவினை தீண்டப் பெறா;
திருநீலகண்டம்.

கருவைக் கழித்திட்டு, வாழ்க்கை கடிந்து,
உம்கழல் அடிக்கே,

கருகி மலர்கொடு வந்து உமை ஏத்துதும்;
நாம் அடியோம்;

செருவில் அரக்கனைச் சீரில் அடர்த்து
அருள்செய்தவரே,

திருஇலித் தீவினை தீண்டப் பெறா;
திருநீலகண்டம்.

நாற்றமலர் மிசை நான்முகன் நாரணன்
வாது செய்து,

தோற்றம் உடைய அடியும் முடியும்
தொடர்வு அரியீர்;

தோற்றினும் தோற்றம்; தொழுது
வணங்குதும்; நாம் அடியோம்

சீற்றம் அது ஆம் வினை தீண்டப் பெறா;
திருநீலகண்டம்.

சாக்கியப் பட்டும் சமண் உரு ஆகி உடை
ஒழிந்தும்

பாக்கியம் இன்றி இருதலைப் போகமும்
பற்றும் விட்டார்;

பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர் அடி
போற்று கின்றோம்;

தீக்குழித் தீவினை தீண்டப் பெறா;
திருநீலகண்டம்.

பிறந்த பிறவியில் பேணி எம் செல்வன்
கழல் அடைவான்

இறந்த பிறவி உண்டாகில் இமையவர்
கோன் அடிக்கண்

திறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ்
பத்தும் வல்லார்

நிறைந்த உலகினில் வானவர் கோனொடும்
கூடுவரே!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar