SS சகலரோக நிவாரணம் கிட்டிட சவுந்தர்ய லஹரி துதி: - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சகலரோக நிவாரணம் கிட்டிட சவுந்தர்ய லஹரி துதி:
சகலரோக நிவாரணம் கிட்டிட சவுந்தர்ய லஹரி துதி:
சகலரோக நிவாரணம் கிட்டிட சவுந்தர்ய லஹரி துதி:

அம்பிகையின் அழகினை ஆராதிக்கும் சவுந்தர்ய லஹரியைப் பாடுவதும், கேட்பதும் எல்லாவித நற்பலன்களையும் தரும் என்பது சிவபெருமானே சொன்ன வாக்கு. அதிலும் குறிப்பிட்ட துதியினைச்  சொல்வது, குறிப்பிட்ட பலனைத் தரும் என்பது ஐதிகம். உடல்நலனும் உள்ள நலனும் சீராக இருக்கவும், ஆயுளும் ஆரோக்கியமும் நிலைத்திடவும் சொல்ல வேண்டிய சவுந்தர்ய லஹரி துதிகள் சில இங்கே தரப்பட்டுள்ளன. சமஸ்கிருத துதிகளை சொல்வதைப் போலவே அதன் தமிழ் அர்த்தத்தைப் படிப்பதும் முழுமையான பலனைத் தரும். எனவே துதிகளை சொல்லத் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். தெரியாதவர்கள் அதன் தமிழ் அர்த்தத்தைப் படியுங்கள். நிச்சயம் முழுமையான நற்பலன் கிட்டும். நோய்நொடிகள் குணமாகி உங்கள் ஆரோக்யம் சீராகும். ஆயுள் நீடிக்கும்.

எல்லாப் பிணிகளும் தீரச் சொல்ல வேண்டிய துதி:

த்வதன்ய; பாணிப்யாம் அபயவரதோ
தைவதகண:

த்வமேகா நைவாஸி ப்ரகடித
வராபீத்யபிநயா

பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வஞ்
சாஸமதிகம்

சரண்யே லோகாணம் தவ கி சரணாவேவ
நிபுணௌ

அன்னையே மற்ற எல்லா தெய்வங்களும் தங்கள் கரங்களால் அபய வரத முத்திரைகளைக் காட்டுகிறார்கள். ஆனால், நீயோ ஒரு போதும் அபய வரத முத்திரைகளை அபிநயித்துக் காட்டுவதில்லை. காரணம் நீ கைகளால் அந்த முத்திரைகளைக் காட்டி ஆசி வழங்குவதைவிடவும் மேலான வரத்தினை உனது திருவடித் தாமரைகளை தரிசித்தாலே பெற்றுவிட முடியும் என்பதுதான்.

தேக நலன் சீராக இருக்க:

ஸுதாதாராஸரைச் சரணயுகலாந்தர்
விகலிதை:

ப்ரபஞ்சம் ஸ்ஞ்சஎதீ புனரபி ரஸாம்ணய
மஹஸ:

அவாப்ய ஸ்வாம் பூமிம் புஜகநிப
மத்தயஷ்ட வலயம்

ஸ்வமாத்மானம் க்ருத்வா ஸ்வபிஷி
குலகுண்டே குஹரிணி

சந்திர மண்டலத்தில் இருந்து தோன்றும் சர்ப்பம் போல தன்னை உலகம் முழுவதையும் சேர்த்துச் சுற்றியவாறு, மூலாதாராச் சக்கரத்தில் அம்பிகை யார் கண்ணுக்கும் தெரியாமல் யோக நித்திரை செய்கிறாள். அதேசமயத்தில் அவளது பாத கமலங்களில் இருந்து பெருகிடும் அமுதமானது இந்த உலகின் சகல பாகங்களிலும் பரவுகிறது. உடலில் ரத்தமானது நாளங்கள் வழியே முழுக்கப் பாய்வதுபோல உலகம் முழுக்க அம்பிகையின் திருவடி அமுததாரை பெருகி நிறைகிறது.

ஜகத் ஸூதே தாதா ஹரி ரவதி ருத்ர:
க்ஷபயதே

திரஸ்குர்வன்னேதத் ஸ்வமபி வபுரீசஸ்
திரயதி

ஸதா பூர்வ: ஸர்வம் ததித
மனுக்ருஹ்ணாதி ச சிவஸ்

தவாஜ்ஞா மாலப்ய க்ஷண சலிதயோர்
ப்ரூலதிகயோ:

அம்பிகையே, உலகத்தின் நிறைவில் படைத்தல், காத்தல், அழித்தலை முறையே செய்திடும் நான்முகன், நாரணன், ருத்ரன் ஆகிய மூவரையும் உன் கணவரான பரமேஸ்வரன், தன்னுள் ஒடுங்கும்படி செய்து தானும் மறைகிறார். உன் கொடி போன்ற புருவத்தினை அசைத்து, அவர்களை மீண்டும் தோன்றச் செய்யும்படி நீ காட்டிடும் உத்தரவை மதித்து, மகேசன் அவர்களைத் தோன்றச் செய்து, மறுபடியும் இவ்வுலகினைப் படைத்திடச் சொல்கிறார்.

விஷத்தினால் உண்டாகும் நோய்கள்தீர, அகால மரண பயம் அகல:

சுதா மப்யாச்வத்ய ப்ரதிபய ஜரா ம்ருத்யு
ஹரிணீம்
விபத்யந்தே விச்வே விதி சதமகாத்யா
திவிஷத:
கராலம் யத் ஷ்வேலம் கபலிதவத:
காலகலனா
ந சம்போஸ் தன் மூலம் தவ ஜனனி
தாடங்க மஹிமா

அன்னையே, அமுதத்தை அருந்தியவர்க்கு மரணம் கிடையாது என்கிறார்கள். ஆனால், அதை அருந்தியவர்களான பிரம்மன், இந்திரன் முதலான தேவர்களும் கூட மஹாபிரளய காலத்தில் அழிந்து போகிறார்கள். ஆனால் கொல்லும் விஷமான ஆலகாலத்தை அருந்திய பிறகும் உன் கணவரான சர்வேஸ்வரன் அழிவின்றி நிலைத்து நிற்கிறார் என்றால், அதற்குக் காரணம், கற்புக்கரசியான உனது தாடங்கத்தின் மகிமைதான் அல்லவா?

உடல் நலிவு நோய் நீங்கி ஆரோக்யம் பெற்றிட:

மனஸ்த்வம் வ்யோம த்வம் மருதசி மருத்
ஸாரதிரஸி
த்வம பஸ்த்வம் பூமிஸ்த்வயி பரிணதாயாம்
ந ஹி பரம்

த்வமேவ ஸ்வாத்மானம் பரிணமயிதும்
விச்வ வபுஷா

சிதானந்தாகாரம் சிவயுவதி பாவேன
பிப்ருஷே

அன்னையே மனம், ஆகாயம், வாயு, நெருப்பு, நீர், பூமி என்று பஞ்ச பூதங்களின் தத்துவமாகவும் நீயே இருக்கிறாய். இந்த உலகம் முழுதுமாக விளங்குபவளும் நீதான். பிரம்ம, விஷ்ணு, சிவ தத்துவங்களும் நீதான். இந்த உலகினை பரிபாலித்து அருள்வதற்காக சிவபிரானின் துணைவியாக இருப்பவளும் நீயே!

அம்மை நோயின் கடுமை குறைந்து குணம் கிட்ட:

கவீனாம் சந்தர்பஸ்தபகமகரந்தைக
ரஸிகம்
கடாக்ஷ வ்யா க்ஷேப ப்ரமரகலபௌ
கர்ணயுகலம்

அமுச்சந்தௌ த்ருஷ்ட்வா தவ
நவரஸாஸ்வாத தரலௌ

அஸூயா ஸம்ஸர்க்கா தலிகநயனம் கிஞ்
சிதருணம்

தாயே! உன் காதுகள் கவிஞர்களின் துதிகளாகிய காவிய மலர்களில் உள்ள கவிரசமாகிய தேனைச் சுவைக்கின்றன. உன் கண்களோ நவரசங்களைப் பருகும் வண்டுகள் போல், உன் காதுகளை விட்டு அகலாமல் அவற்றுக்கு நெருக்கமாகவே சுழல்கின்றன. அந்த இரு நயன்ங்களைக் கண்டு உனது மூன்றாவது கண்ணாகிய நெற்றிக்கண் பொறாமை கொண்டு சிவந்து போய்க் காணப்படுகிறது!

கண் நோய், காது வலி நிவாரணம் பெற்றிட:

கதே கர்ணாப்யர்ணம் கருத இவ
பக்ஷ்மாணி தததீ

புராம் பேத்துச் சித்தப்ரசம ரஸ வித்ராவண
பலே

இமே நேத்ரே கோத்ராதரபதி குலோத்தம்ஸ
கலிகே
தவாகர்ணாக்ருஷ்ட ஸ்மரசரவிலாஸம்
கலயத:

பர்வதராஜனாகிய மலையரசனின் மகளான மாணிக்கவல்லியே, உனது கண்கள் காதுவரை நீண்டிருக்கின்றன. இமை ரோமங்கள் அம்பில் செருகி இருக்கும் இறகுகளைப்போல் இருக்கின்றன. அதன் காரணமாக உனது கண்கள், காதுவரை இழுத்து விடப்பட்ட மன்மதனின் பாணம் போல் தோன்றுகின்றன. மன்மதனை எரித்தவரும், முப்புரங்களைத் தகித்தவருமான சிவபெருமானுடைய மனதிலேயே சலனத்தை ஏற்படுத்தும் ஆற்றல் உடையவனாக உள்ளன உனது திருவிழிகள்!

சகல ரோக நிவர்த்தி கிடைத்திட:

அராலம் தே பாலீயுகல
மகராஜன்யதனயே

ந கேஷாமாதத்தே குஸுமசர கோதண்ட
குதுகம்

திரச்சீனோ யத்ர ஸ்ரீஅவணபத முல்லங்க்ய
விலஸன்

அபாங்க வ்யாஸங்கோ திசதி சரஸந்தான
திக்ஷணாம்

இமவான் மகளே! (உன்னுடைய கண்களுக்கும் காதுகளுக்கும் நடுவே உள்ள வளைவான இரு கன்னங்களையும் பார்க்கும் எவரும் அதனை மன்மதன் வில் என்றுதானே நினைப்பார்கள்? அந்தக் கன்னங்களில் அமைந்துள்ள உன் நயனங்களின் கடைக்கண் பார்வை காதுகளைக் கடந்தும் ஒளிர்வதால் உன் விழிகளையே பாணங்களாகக் கொண்டு மன்மதன் பாணங்களைச் செலுத்துவது போல் அல்லவா தோன்றுகிறது.

தூக்கமின்மை நோய் தீர, நன்கு உறக்கம் வர:

ப்ரக்ருத்யா ஆரக்தாயாஸ் தவ ஸுததி
தந்தச்சதருசே

ப்ரவக்ஷ்யே ஸாத்ருச்யம் ஜனயது பலம்
வித்ருமலதா

ந பிம்பம் தத்பிம்ப ப்ரதிபலன ராகா
தருணிதம்

துலா மத்யாரோடும் கதமிவ
விலஜ்ஜேதகலயா

அன்னையே, எழிலான பல்வரிசையினைக் கொண்ட உனது சிவந்த உதடுகளுக்கு இணையாக வேறு எதனையும் சொல்ல இயலாது. ஒருவேளை பவளக் கொடியினில் கனி ஏதும் உண்டாகுமானால், அதனை ஈடாகச் சொல்லலாம். கோவைப் பழமானது உனது சிவந்த அதரங்களைக் கண்டு அவற்றுக்குத் தான் சிறிதும் இணையாக முடியாது என்பதை உணர்ந்து வெட்கப்படுவதாலேயே சிவந்துபோய் காணப்படுகிறது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar