SS குழல் செய்த புண்ணியம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> குழல் செய்த புண்ணியம்
குழல் செய்த புண்ணியம்
குழல் செய்த புண்ணியம்

குழல் செய்த புண்ணியம் நான்செய்ய வில்லையா - அழகு
குருவாயூர் கண்ணனே நீபதில் சொல்லைய்யா (குழல்)

உதட்டோடு உறவாடி இசைதந்திடும் -குழல்
உயர்வான புகழ்பாடி தன்னை மறந்திடும்
குழலாக எனைமாற்றி இசை கூட்டுவாய் - அந்த
இசையோடு உனைபோற்ற வழிகாட்டுவாய் (குழல்)

பசுவோடு கன்றெல்லாம் ஒன்றாகியே - உன்
பதம்நாடி தினம்தேடும் கதை என்னவோ
பாலோடு இனிதான சுவைவெண்ணையும் -முராரி
புகழ்கேட்டு உருகுவதை நான் சொல்லவோ (குழல்)

நீ நினைத்தால் எல்லாமே கணநேரம்தான் -மன
நிம்மதியும் உனைநினைக்க எனைசேரும்தான்
மண்உண்டு மண்காத்த திருமாதவா - அழகு
மலர்பாதம் தனைதந்து எனைகாக்கவா (குழல்)


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar