Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தொண்டு செய்யும் உள்ளம்
 
பக்தி கதைகள்
தொண்டு செய்யும் உள்ளம்

தொண்டு செய்கிற உள்ளத்தால் சிலர் உயர்ந்த நிலையை அடைவர். ஆனால், தொண்டு செய்வதை விட்டு விட்டு, எல்லோருமே, தங்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். ஆஞ்சநேயர் என்கிற அனுமன் இதற்கு விதிவிலக்கு. ராமபிரானுக்குத் தொண்டு செய்தார். ராமபிரானின் நிழலாக இருந்தார். ராம நாமத்தைச் சொல்வதில் பேரானந்தம் பெற்றார். இதனால் தான், ராமபிரானுக்கு சரிசமமாக இன்று போற்றப்படுகிறார்... வணங்கப்படுகிறார். தற்போது இருக்கின்ற எண்ணற்ற ராமாயண காவியங்களில் ஒப்பற்ற காவியமாகவும் பலரும் பின்பற்றத்தக்க பாராயண நுõலாகவும் இருந்து வருவது வால்மீகி ராமாயணம். ராமபிரானின் வாழ்க்கை முழுவதையும் அனுபவித்து ராமாயணம்’ எழுதினார் வால்மீகி. இந்த வால்மீகி ராமாயணத்தில் அனுமனின் சிறப்பைச் சொல்வதற்கென்றே சுந்தரகாண்டம்’ என்ற பகுதி உண்டு. இதைப் படிக்கும் போதோ பாராயணம் செய்யும்போதோ, ராமாயணத்தில் ராமபிரானுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருந்து வருகிறதோ, அதே அளவு முக்கியத்துவம் ராமனின் துõதனாக விளங்கிய அனுமனுக்கும் உண்டு என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இன்றைக்கு சுந்தரகாண்ட பாராயணம் என்பது பல இடங்களில் நடந்து வருவது எதை நமக்கு உணர்த்துகிறது என்றால், அனுமனைச் சரண் புகுந்தால், அவர் நம்மைக் காப்பாற்றுவார் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

ஒரே நாளில் சுந்தரகாண்டம் முழுவதையும் படித்து விடுவதால் ஏற்படும் பெருமையை ஆயிரம் நாக்குகள் கொண்ட ஆதிசேஷனாலும் விவரிக்க முடியாது’ என்று உமா சம்ஹிதை’யில் பரமேஸ்வரன் கூறி இருக்கிறார். நடமாடும் தெய்வமாக இன்றைக்கும் நம்மிடையே விளங்கி வருகிற காஞ்சி மகாபெரியவரைத் தரிசித்த பக்தர் ஒருவர், தான் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்பட்டு வருவதாகவும், எத்தனையோ மருத்துமனைகளுக்குப் போயும் பலனில்லை என்றும் அழ ஆரம்பித்தார். தினமும் சாப்பிடறதுக்கு முன்னால சுந்தர காண்டத்த விடாம பாராயணம் பண்ணு. ஒரு மண்டல காலம் பாராயணம் பண்ணிட்டு வா’ என்று அவரை அனுப்பினார் மகாபெரியவர். பாராயணம் செய்தார் வயிற்று வலி அன்பர். படுத்திக் கொண்டிருந்த வலி போன இடம் தெரியவில்லை. குழந்தைகள், பெண்கள், பெரியோர்... இப்படி எல்லாத் தரப்பினருமே, எல்லா வயதினருமே சுந்தரகாண்டத்தைப் பாராயணம் செய்யலாம். பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த ராமாயணம் தெய்வீக காவியமாக இன்றும் வணங்கப்பட்டு வருகிறதென்றால் அதற்கு ராமபிரான் மற்றும் அனுமன் ஆகிய இருவரின் புரிந்துணர்தலே காரணம். இன்றைக்கும் ராமாயண உபன்யாசம் எங்கெல்லாம் நடக்கிறதோ, அங்கெல்லாம்  ஏதோ ஒரு வடிவில் வந்து அமர்ந்து, ராமபிரானின் பெருமைகளை உச்சி குளிரக் கேட்டுச் செல்வாராம் அனுமன். ராம நாமம் கேட்பதென்றால், நிழல் போன்ற இந்தத் தொண்டனுக்கு அவ்வளவு ஆனந்தம்.

ஆஞ்சநேயருக்கு எப்போதும் எதிலும் வெற்றிதான். ஒழுக்கம், வீரம், மதிநுட்பம், ஞானம், விழிப்புணர்வு, பிரம்மச்சர்யம், இவை எல்லாம் அனுமனிடம் பார்த்து நாம் வியக்கின்ற குணங்கள். பரிபூரணமான பக்தியுடன் அனுமனின் திருப்பாதங்களை நாம் பற்றிக்கொண்டால், தன் அருளை அவர் நம் மீது பொழிவார். பிறகென்ன, அடுத்தடுத்து வெற்றி முகம்தான். இந்தக் காலத்தில் மன அழுத்தம், மனக்குழப்பம், மன சஞ்சலம் போன்றவற்றால் பாதிக்கப்படுவோர் அனுமனை வணங்கினால், நிவாரணம் பெறலாம். வாயு பகவானின் அருளாசியுடன் கேசரி, அஞ்சனை தம்பதியருக்குத் திருமகனாக அவதரித்தவர் அனுமன். குழந்தையாக இருக்கும்போதே அவரது பராக்கிரமம் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. வானத்தில் ஒளிக்கோளம் போல் தெரிகின்ற சூரியனை விளையாட்டுக்குப் பயன்படுத்துகிற ஒரு பந்து என்று நினைத்து அதைப் பிடிப்பதற்காக ஆகாச மண்டலத்தில் பறந்து சென்றவர் அவர்.  அதே வேளையில் சூரிய பகவானைத் தீண்டி கிரகணம் உண்டுபண்ணுவதற்காக ராகு பகவானும் ஆகாசவெளியில் பயணித்துக் கொண்டிருந்தார். யாரோ ஒரு குழந்தை அசுர வேகத்தில் வானவெளியில் பறக்கிறதே... யாராக இருக்கும் என்று குழம்பிய ராகுவும், இன்ன பிற தேவர்களும் இந்திரனிடம் புகார் செய்தார்கள்.

வாயு வேகத்தில் பறந்து வரும் குழந்தையைப் பார்த்த இந்திரன் கோபத்தின் உச்சிக்குப் போய் தன் வஜ்ராயுதத்தால் அனுமனைத் தாக்க... கன்னத்தில் அடிபட்டு உதயகிரி என்கிற பகுதியில் கீழே விழுந்தது குழந்தை. சம்ஸ்கிருதத்தில் ஹனு’ என்றால் கன்னம். மன்’ என்றால், பெரிதான என்று பொருள். ஹனுமன்’ என்றால் பெரிய (பருத்த) கன்னங்களைக் கொண்டவன் என்றுபொருள். குழந்தையை இந்திரன் தாக்கிய செய்தி அறிந்து கோபம் கொண்டான் வாயுதேவன். தன் இயக்கத்தை நிறுத்தினான். காற்று இல்லாமல் உலகம் இயங்குமா? சகல ஜீவராசிகளின் இயக்கமும் நின்றுபோயின. இதைக்கண்டு கவலையான தேவர்கள், பிரம்மனிடம் சென்று விஷயத்தைச் சொன்னார்கள். அன்ன வாகனத்தில் பறந்து வந்த பிரம்மன், குழந்தை மயங்கிக் கிடந்த இடத்தை அடைந்தான். வாயுதேவனைச் சமாதானப்படுத்தி, இயல்பு நிலைக்கு வரச்சொன்னான். அதன்பின் தன் திருக்கரங்களால் குழந்தையைத் தடவ... புன்சிரிப்புடன் குழந்தை சகஜமானது. வாயு பகவான் மகிழ்ந்தான். அப்போது ஏனைய தேவர்களை நோக்கிய பிரம்மன், இந்தக் குழந்தை சிவபெருமானின் அருளையும் ஆசியையும் பெற்றுத் திகழ்கிறது. உலகுக்கே நன்மை புரியக் காத்திருக்கிறது. இந்தக் குழந்தைக்கு நல்வரங்களை அளித்து ஆசி வழங்குங்கள்,’’ என்று கேட்டுக் கொண்டான். பிரம்மனே கேட்டுக் கொண்ட பின் வரங்கள் அருள்வதில் தேவர்களுக்குத் தயக்கம் இருக்குமா என்ன?பாடசாலை சென்று கற்காமலே வேத சாஸ்திரங்கள் அனைத்தையும் அறியுமாறு அனுமனுக்கு அருளினாள் பூமாதேவி.

நீரினால் எந்த விதமான ஆபத்தும் விளையாது என்கிற வரத்தைத் தந்தான் வருண பகவான். இறப்பும் முதுமையும் என்றென்றும் வராது என்று அருளினான் எமதர்மன் (இதனால் தான் அனுமானை சிரஞ்சீவி என்கிறோம்.) அனுமன் கலந்து கொள்ளும் எல்லா போர்களிலும் அவனுக்கே வெற்றி கிடைக்க ஆசிர்வதித்தான் குபேரன். தங்க குண்டலங்களைத் தந்து மகிழ்ந்தார் விஸ்வகர்மா. வஜ்ராயுதம் போன்ற எந்த ஒரு ஆயுதம் கொண்டு எவர் தாக்கினாலும் அனுமனுக்கு ஆபத்து நேராது என்கிற வரத்தை அருளினான் இந்திரன். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை, உளுந்து வடை மாலை, துளசி மாலை ஆகியவற்றை அணிவித்து வணங்கலாம். வெண்ணெய்க்காப்பு சாத்தியும் பிரார்த்தித்துக் கொள்ளலாம். ஸ்ரீஅனுமன் சாலீசா’ போன்ற ஸ்லோகங்களைப் படித்தும், ராம நாமத்தைச் சொல்லியும் வணங்கி ஆஞ்சநேயரின் அருள் பெறுவோம். 


 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.