Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கவலை பறந்தது!
 
பக்தி கதைகள்
கவலை பறந்தது!

குட்டி யானைக்கு தாகம் எடுத்தது. குளத்தை தேடிச் சென்றது. கரையில் பசுமையான மரங்கள் பூத்துக் குலுங்கின. ஒரு மரத்தில் கிளி ஒன்று வந்து அமர்ந்தது. அதன் பச்சை நிறமும், சிவந்த வாயும் யானை குட்டியைக் கவர்ந்தது. “என்னை மட்டும் கடவுள் இப்படி கருப்பாக படைத்து விட்டாரே! இந்த கிளி இவ்வளவு அழகாக இருக்கிறதே!” என்று ஏங்கியது. அப்போது குக்கூ என்ற குரல் கேட்டது. குரல் வந்த திசையில் குயில் ஒன்று பாடியது. கருப்பாக இருந்தாலும் குயில் இனிமையுடன் பாடுகிறதே! என் குரலும் இருக்கிறதே!” என ஒரு தடவை பிளிறியது. சில வண்ணத்துப்பூச்சிகள் பூக்களில் தேன் குடிப்பதைக் கண்டது. ஐயோ! என் தும்பிக்கை இந்த பூவின் மீது பட்டாலே அது உதிருமே! பின் எப்படி தேன் குடிப்பது?” என வருந்தியது. தன்னைத் தவிர மற்ற அனைவரும் சந்தோஷமாக இருப்பதை எண்ணி கண்ணீர் விட்டது. குட்டியைக் காணாத தாய் யானை குளத்திற்கு வந்தது. குட்டியின் நிலை கண்ட தாய் யானை, “கண்ணே! உன் குறையை மட்டும் பார்க்கும் நீ நிறைகளை பார்க்கத் தவறி விட்டாய். கடவுள் நமக்கு பலமான துதிக்கை, வெண்ணிற தந்தம் எல்லாம் தந்திருக்கிறார். யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன் என்று கூட சொல்வார்கள். சொல்லப் போனால், முதற்கடவுள் பிள்ளையார் கூட ஆனைமுகன் தான். இதோ! இந்த மரத்தைக் கூட உன்னால் பிடுங்கி எறிந்து விட முடியும். அனைவருக்கும் நிறை, குறை உண்டு. குறைகளை மறந்து நிறைகளை எடுத்து வாழப் பழக வேண்டும்,” என்றது. தாயின் பேச்சைக் கேட்ட குட்டி யானையின் கவலை பறந்தது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2017 www.dinamalar.com. All rights reserved.