Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஞான யஜ்ஞம்!
 
பக்தி கதைகள்
ஞான யஜ்ஞம்!

பகவான் கிருஷ்ணரிடம், அர்ஜுனன் இந்தக் கேள்வியை எழுப்பினான். பெருந்தோளுடையாய்! கர்ம மார்க்கம், யோக மார்க்கம் இரண்டிலிருந்தும் வழுவியவனாய், மயக்கமுற்றவனாய், மெய்ப்பொருளை உணர்கின்ற ஞான மார்க்கத்திலிருந்து நழுவிவிட்ட ஒருவன், எவ்வித ஆதாரமும் இல்லாமல், சிதறடிக்கப்பட்ட மேகம் போன்று அழிந்துவிடு வானன்றோ? இவ்வாறு கூறிய பிறகு, மீண்டும் பகவானிடத்தில் தனது ச்ரத்தையை நன்கு வெளிப்படுத்துகிறான்.

ஏதந்மே ஸம்ஸயம் க்ருஷ்ண சேத்துமர்ஹஸ்யஸேஷத:
த்வதந்ய ஸம்ஸயஸ்யாஸ்ய சேத்தா ந ஹ்யுபபத்யதே
(ஸ்ரீமத் பகவத்கீதை 6-39)

ஓ... பகவானே! இதுவே என்னுடைய ஐயமாகும். என்னுடைய இந்த ஐயத்தை முழுமையாகப் போக்கக்கூடிய ஆற்றல் படைத்தவர், உம்மைத் தவிர வேறு எவரும் இல்லை. கர்ம மார்க்கத்திலும் செல்லாமல், ஞான மார்க்கத்திலும் தொடர்ந்து செல்வதற்குரிய உந்துதல் இல்லாமல், குழப்பத்திலும் இயலாமையிலும் ஆழ்ந்திருக்கும் ஒருவரது நிலையைப் பற்றிய கேள்வி இது. இந்தக் கேள்விக்குரிய விடையில்தான் ஒருவர் தொடர்ந்து ஞான மார்க்கத்தில் செல்வதும் சொல்லாததும் மறைந்திருக்கிறது. பகவான் ஒருவரே இந்த சந்தேகத்தைப் போக்கக் கூடிய ஆற்றல் படைத்தவர். பகவான் அவரவர் செய்த கர்மங்களுக்குரிய பலன்களை அருள்பவர். நாம் செய்த வினைகளுக்கேற்ப அடுத்தடுத்த பிறவிகளில் நாம் எத்தகைய உடல்களைப் பெறப்போகிறோம். எத்தகைய இன்ப, துன்பங்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலையில் இருப்போம். ஆகிய அனைத்தையும் அவர் ஒருவரே அறிவார்.

எனவே, அர்ஜுனனின் கேள்விக்கு பகவானால் மட்டுமே பதில் கூற முடியும்.  வ்வாறு மூன்று ச்லோகங்களில் அர்ஜுனன் தன்னுடைய சந்தேகத்தை வெளிப்படுத்தினான். பகவான், ஆன்மிக ஸாதகர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையில், மிக அழகாக அர்ஜுனனின் ஐயத்தைப் போக்கி, தெளிவுபடுத்தத் தொடங்குகிறார்.

ஸ்ரீபகவாநுவாச:

பார்த்த நைவேஹ நாமுத்ர விநாஸஸ்தஸ்ய வித்யதே
ந ஹி கல்யாணக்ருத்கஸ்சித் துர்கதிம் தாத கச்சதி (ஸ்ரீமத் பகவத்கீதை 6-40)

பகவான் உரைத்தது:

அர்ஜுனா! நற்செயல்களில் ஈடுபட்ட ஒருவர் இப்பிறவியிலோ அடுத்து வரும் பிறவிகளிலோ ஒருபோதும் கீழான நிலையை அடைவதில்லை. அழிந்து போவதில்லை அப்பனே! முதலில் பகவான் அர்ஜுனனுக்கு ஆறுதல் மொழிகளைக் கூறுகிறார். அர்ஜுனனுடைய கேள்விக்குரிய விடைகள் அடுத்தடுத்த ச்லோகங்களில் வரப்போகின்றன. பகவான் கூறப்போகின்ற விடைகளில் ஸாரம் இதுதான்: கர்ம மார்க்கத்திலிருப்பவர், பூஜைகள், சடங்குகள், முதலியவற்றை ச்ரத்தையுடன் செய்கிறார். ஞான மார்க்கத்திலிருப்பவர். வேதாந்த சாஸ்த்ரங்களை குருமுகமாகக் கேட்டு, உள்வாங்கிக் கொள்கிறார். இவையிரண்டும் தனித்தனியே இருவேறு வித ஸாதனைகள். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஏதோ ஒரு ஸாதனையில்தான் நம்மால் ஆழ்ந்து ஈடுபட முடியும். கர்ம மார்க்கத்தை விட்டு, ஞான மார்க்கத்துக்கு வந்துவிடுகிறோம். ஞான மார்க்கத்தில், வேதாந்த சாஸ்த்ரங்களை குருவின் வாயிலாகக் கேட்கத் தொடங்குகிறோம். வேதாந்த சாஸ்த்ர ச்ரவணம் என்ற இந்த ஸாதனையானது, முக்கிய பலன், அவாந்தர பலன் என்று இரண்டுவிதமான பலன்களை உடையது.

முக்கிய பலன் ஞானத்தைக் கொடுப்பது. அவாந்தர பலன் என்பது புண்ணியம். வேதாந்த சாஸ்த்ரம் நமக்கு நன்கு விளங்கினால், உள்ளத்தில் அது ஞானத்தை உண்டுபண்ணும். விளங்கவில்லையென்றால், புண்ணிய பலனைக் கொடுக்கும். ஞானம் உள்ளத்தில் வேரூன்றினால், பிறவாப் பெருநிலையாகிய மோக்ஷத்தை உணரலாம். இல்லையெனில், வேதாந்த ச்ரவணம் புண்ணியத்தைக் கொடுத்து, வரும் பிறவிகளில் ஸ்வர்க்கலோகத்தைக் கொடுக்கும். ஸ்வாமீ சின்மயானந்தர், பகவத்கீதை சொற்பொழிவுகளை, ஞாந யஜ்ஞம் என்று அழைத்தார். யஜ்ஞம் என்றால் ஹோம குண்டம் முதலியவை இருக்க வேண்டும் என்று எண்ணுவோம். நம்முடைய காதுகளே ஹோம குண்டம் குருநாதர் கூறும் சாஸ்த்ர வாக்கியங்களே ஆஹுதிகள், நம்முடைய உள்ளத்தில் எழுகின்ற ஞானமே அக்னி. கல்யாணக்ருத் என்ற சொல்லுக்கு, புனிதமான செயல்களில் ஈடுபடுவன் என்று பொருள். புனிதமான ஆன்மிக ஸாதனைகளுள் ஈடுபடுபவன் ஒருபோதும் கீழ்மை அடைவதில்லை.

ஸ்ரேயாந் த்ரவ்ய மயாத் யஜ்ஞாஜ் ஞாநயஜ்ஞ: பரந்தப
(ஸ்ரீமத் பகவத்கீதை 4-33)

எதிரிகளை வாட்டுபவனே! திரவியங்களைக் கொண்டு செய்கின்ற யஜ்ஞங்களைக் காட்டிலும் ஞான யஜ்ஞமானது உயர்ந்தது என்று பகவான் ஏற்கெனவே கூறியுள்ளது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.