Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பக்திக்கு ஜாதியில்லை
 
பக்தி கதைகள்
பக்திக்கு ஜாதியில்லை

பாணர் என்ற பாடகர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் மீது மிகுந்த பக்தி கொண்டவர். ஆனால் கோயிலுக்குச் சென்று ரங்கநாதரை தரிசிக்க அவர் பிறந்த குலம் தடையாக இருந்தது. காவிரிக் கரையில் நின்றபடி ரங்கநாதர் கோயிலை வணங்கி பாடிச் செல்வார். ஒருநாள் ரங்கநாதர் கோயில் அர்ச்சகர் லோகசாரங்கி, ரங்கநாதருக்கு பூஜை செய்ய காவிரியில் நீராடிவிட்டு வந்தார். அர்ச்சகர் வரும் பாதையில் நின்று கண்களை மூடி மிக உருக்கமாக பாடிக்கொண்டிருந்தார் பாணர். அர்ச்சகர் வருவதை   அறியவில்லை. உடனே அர்ச்சகர், “பாணா! ஒதுங்கி நில். நான் கோயிலுக்கு அவசரமாக செல்ல வேண்டும் என்றார். ரங்கநாதனிடம் மனம் லயித்திருந்த பாணனுக்கு அர்ச்சகர் கூறிய வார்த்தைகள் கேட்கவில்லை. அதனால் அர்ச்சகர் ஒரு கல்லை எடுத்து பாணர் மீது வீசினார். அது பாணர் நெற்றியில் பட்டு ரத்தம் வழிந்தது.

உணர்வு வந்து கண் திறந்து பார்த்தார். ஐயோ! அர்ச்சகர் வரும் பாதையில் நின்று அபச்சாரம் செய்துவிட்டோமே என்று வருந்தி தள்ளி நின்றார். அர்ச்சகர் கோயிலுக்கு போனார். அங்கே ரங்கநாதரைப் பார்த்ததும் அதிசயித்தார். சிலையின் நெற்றியிலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. இது என்ன? அபச்சாரம்? என்று கதறியபடி சுவாமியின் நெற்றியில் இருந்து வழியும் ரத்தத்தைத் துடைத்தார். அது நிற்கவில்லை. ரங்கநாதா! இது என்ன சோதனை? யாரால் இது விளைந்தது? என்று உருக்கமாகக் கேட்டார். அப்போது லோகசாரங்கி! உமது செயலால் தான் இந்நிலை ஏற்பட்டுள்ளது. காவிரிக்கரையில் என் பக்தன் பாணன் மீது கல் வீசினீரே, அக்கல் அவன் மீது மட்டும் பட்டு ரத்தம் வடியவில்லை. என் நெற்றியிலும் பட்டு ரத்தம் வழிகிறது. நான் பக்தர்களின் காவலன் அல்லவா? என்று அசரீரி ஒலித்தது.

ரங்கநாதா! தவறு செய்துவிட்டேன். என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? என்று கதறினார். ஹே... லோக சாரங்கா! என் பக்தன் பாணனை உம் தோளில் சுமந்துஎன் சன்னதிக்கு அழைத்து வாரும். அப்போதுதான் ரத்தம் நிற்கும் என்றது அசரீரி. உடனே அர்ச்சகர் எல்லோரிடமும் தான் செய்ததையும், பெருமாளின் உத்தரவையும் கூறி, பாணரை அழைத்துவர காவிரிக் கரைக்கு சென்றார். அவரிடம் நடந்த விபரத்தைச் சொல்லி பொறுத்தருளுமாறு வேண்டினார். பாணர் உணர்ச்சி வசப்பட்டார். அவரைத் தோளில் ஏற்றிச் சுமந்து ரங்கநாதர் சன்னதி முன் கொண்டுவந்து இறக்கினார் அர்ச்சகர். அரங்கனின் சன்னதிக்குள் சென்ற பாணர், மனம் உருக அரங்கனின் திருமுடி முதல் திருவடி வரை வர்ணனை செய்து பத்துப் பாடல்கள் பாடினார். அப்படியே அரங்கனுடன் ஐக்கியமாகி விட்டார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2017 www.dinamalar.com. All rights reserved.