மகாமகம் செல்வோர் கவனத்திற்கு!

பிப்ரவரி 12,2016 IST
எழுத்தின் அளவு:

தங்களுடன் ஏதேனும் ஓர் அடையாள அட்டையை கையோடு எடுத்துச் செல்வது அவசியம். முதியோர்கள். பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறுவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவும். ஒரு செய்தியை உண்மையானதா அல்லது வதந்தியா என உறுதிப் படுத்திக் கொண்டு அதற்கேற்ப நிதானமாகச் செயல்படுவது நல்லது. பாதுகாப்பான மற்றும் நம்பத் தகுந்த இடங்களில் கிடைக்கும் உணவுப் பொருட்களையே ஏற்கவும். காவல்துறை வழிகாட்டுதலை தவறாமல் பின்பற்ற வேண்டும். அத்துடன் காவல்துறை அரசு உதவி மையங்களின் அறிவிப்புகளை கவனமாகக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும்.

காவல்துறை வகுத்துள்ள வழித் தடத்தில் மட்டுமே செல்ல வேண்டும். இயன்றவரையிலும் குழுவாகச் செல்வதே மிகவும் நல்லது. தனியாக விடப்பட்ட அடையாளம் தெரியாத கண்ணைக் கவரும் பொருட்களைக் கண்டால் அருகில் உள்ள காவல்துறை உதவி மையங்களுக்கு உடனடியாகத் தெரியப்படுத்தவும்.  தேவையான சுமையை மட்டும் கொண்டு செல்லவும். காலணிகளை அதற்கென நியமிக்கப்பட்ட இடங்களில் விட்டுச் செல்லவும்.  அனைத்து இடங்களிலும் பல மொழிகளில் அமைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு -பலகைகளைப் படித்து அதன் விவரங்களைத் தெரிந்து கொண்டு அதன்படி செயல்படவும். முதியோர்களும், நோயாளிகளும், தாங்கள் உட்கொள்ளும் மருந்து - மாத்திரைகள் -சிகிச்சை குறிப்புகளைக் கண்டிப்பாக கையோடு எடுத்துச் செல்ல வேண்டும். வாகனங்களை, அரசு அனுமதிக்கு உட்பட்ட வாகன நிறுத்துமிடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும். குப்பை அல்லது கழிவுப் பொருட்களை குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போடவும். பிரசாதங்கள் உணவுப் பொருட்கள் வாங்கும் இடங்களில் வரிசையாகச் சென்று பெற்றுக்கொள்ள வேண்டும். முடிந்தவரை நகருக்கு வெளியே தயாராகி வருவது நலம். தேவையான பணத்தை தன்னகத்தே பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் ஏ.டி.எம். இயந்திரங்கள் போதுமான அளவுக்குப் பயன்படாமல் போகலாம்.


வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Follow Dinamalar :