ஆதிமூர்த்தி பெருமாள் கோவிலில் மார்கழி ஏழாம் நாள் வழிபாடு



பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே, பழையபுதுாரில் உள்ள ஆதிமூர்த்தி பெருமாள் கோவிலில் நாளை காலை, திருப்பாவையின் ஏழாவது பாடலோடு, மார்கழி மாத ஏழாம் நாள் வழிபாடு துவங்குகிறது. பெரியநாயக்கன்பாளையத்திலிருந்து சுமார், 3 கி.மீ., தொலைவில் உள்ள பழையபுதுாரில், ஆதிமூர்த்தி பெருமாள் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இக்கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமை, பெருமாள் திருக்கல்யாண உற்சவம், மார்கழி மாதம் முழுவதும் சிறப்பு பஜனைகள் உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கின்றன.

கடந்த, 100 ஆண்டுகளுக்கு முன்பு மைசூர் மகாராஜா, கோவை மண்டலம் வந்த போது, ஆதிமூர்த்தி கோவிலை திறம்பட நிர்வாகம் செய்யவும், செலவுகளை எதிர்கொள்ளவும், நரசிம்மநாயக்கன்பாளையம் கவுசிகா நதி ஓரம் உள்ள நிலத்தை, தானமாக வழங்குவதாக தாமிர பட்டயம் எழுதிக் கொடுத்துள்ளார். இச்சிறப்பு பெற்ற இக்கோவிலில், மார்கழி மாதத்தையொட்டி தினமும் காலை, 5:00 மணிக்கு திருப்பாவை பாடலுடன், பெருமாள் வழிபாடு நடக்கிறது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். நாளை காலை, 5:00 மணிக்கு, கீசு,கீசு என்றெங்கும் ஆனைத்சாத் தன் கலந்து… என்ற திருப்பாவையின் ஏழாவது பாடலை பெருமாள் பக்தர்கள் பாடுகின்றனர். இப்பாடலின் பொருள், கீச்சு கீச்சென்று குருவிகள் எழுப்பும் ஒலியை, இன்னும் நீ கேட்கவில்லையா? மணம் கமழும் பூக்களை சூடி, வளையல்கள் குலுங்க கைகளை முன்னும், பின்னும் மாறி, மாறி அசைத்து இடைச்சியர் தயிர் கடையும் ஓசையும் கேட்கவில்லையா? பெண்களின் தலைவியே! கேசவனை நாங்கள் பாடுவதைக் கேட்டுக் கொண்டு, இன்னும் உறங்குகிறாயா? பேரழகுடையவளே! கதவை திற! என்பதாகும்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்