கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு



அன்னுார் : அன்னுார் கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், மார்கழி மாத சிறப்பு வழிபாடு நடந்தது. நாளை எட்டாம் நாள் வழிபாடு நடக்கிறது.300 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், புரட்டாசி சனிக்கிழமைகளிலும், மார்கழியிலும் நாள்தோறும் அதிகாலையில் நடக்கும் வழிபாடு விசேஷமானது. இங்கு கரிவரதராஜப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அருள்பாலிக்கிறார். கோவில் வளாகத்தில் ஆண்டாள், சக்கரத்தாழ்வார், பக்த ஆஞ்சநேயர், ராமானுஜர் சன்னதிகள் உள்ளன.நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடந்தது. பின்னர் திருப்பாவை வாசிக்கப்பட்டு, அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன.

கோவில் பட்டாச்சார்யர் லட்சுமி நரசிம்மன் கூறுகையில், வழக்கமாக வரதராஜ பெருமாள் வலது கையை ஆசிர்வதிக்கும்படி வைத்திருப்பார். இங்கு கீழே பாதங்களை சுட்டிக்காட்டி, வெங்கடாஜலபதி போல் அமைந்திருப்பது விசேஷமானது, என்றார்.நாளை காலை 5:00 மணிக்கு, கீழ்வானம் வெள்ளென்றெருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண் எனும் பாடலை, பெருமாள் பக்தர்கள் பாடுகின்றனர்.கிருஷ்ணனாலே மிகவும் விரும்பத்தக்க பதுமை போன்றவளே, கீழ்த்திசை ஆகாயமானது வெளுத்தது; எருமைகள் பனிப்புல் மேய்வதற்காக சிறுதோட்டங்களுக்கு செல்கின்றன. மற்றுமுள்ள எல்லா பெண் பிள்ளைகளையும், போக விடாமல் தடுத்து, உன்னை அழைத்து செல்வதற்காக வந்து நின்றோம். எழுந்திரு. கண்ணபிரானின் குணங்களை பாடி, அடி பணிந்தால், அவன் நமது குறைகளை ஆராய்ந்து, ஐயோ என்று இறங்கியருள்வான் என்பதே இதன் பொருள்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்