சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில் மார்கழி தேரோட்டம்



நாகர்கோவில்: சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில் மார்கழி திருவிழாவில் நேற்று நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இங்கு கடந்த 24 ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. 3 ம் நாள் விழாவில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியும், 5 ம் நாள் விழாவில் கருட தரிசனமும் நடைபெற்றது. 9 ம் நாள் விழாவான நேற்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது.இதற்காக அதிகாலை 4:00 மணிக்கு கங்காளநாதர் பிட்சாடனராக வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்தனர். பின்னர் சுவாமி, அம்பாள், அறம் வளர்த்த நாயகி, விநாயகர் மேளதாளம் முழங்க தேருக்கு எழுந்தருளினர். தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரதவீதிகளிலும் தேர் வலம் வந்த போது ஏராளமான பக்தர்கள் குழுமியிருந்தனர். இரவு 11:00 மணிக்கு தந்தையை காண வந்து மக்கள் விடைபெறும் சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடைபெற்றது.10 ம் நாள் விழாவான இன்று அதிகாலை 4:00 மணிக்கு ஆருத்ரா தரிசனம், மாலை 4:00 மணிக்கு நடராஜமூர்த்தி வீதிஉலா, இரவு 9:00 மணிக்கு ஆராட்டு ஆகியவை நடக்கிறது.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்