வேங்கடாசலபதி கோவிலில் நாளை மார்கழி 20ம் நாள் வழிபாடு



மேட்டுப்பாளையம்:ஆலாங்கொம்பு வேங்கடாசலபதி கோவிலில் நாளை மார்கழி, 20ம் நாள் வழிபாடு நடக்கிறது. இதில், முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே, துயிலெழாய்..., என்ற திருப்பாவை பாடலை பக்தர்கள் பாட உள்ளனர். மேட்டுப்பாளையம் - சிறுமுகை ரோட்டில் ஆலாங்கொம்பில், வேங்கடாசலபதி கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் ஆஞ்சநேயர், அகஸ்தியர், கருடாழ்வார் ஆகிய சன்னதிகள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் பல்லையம் பூஜை சிறப்பாக நடைபெறும். சிவராத்திரி அன்று நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பவானி ஆற்றுக்கு சென்று தீர்த்தங்களை எடுத்து வந்து வேங்கடாசலபதி சுவாமிக்கு அபிேஷகம் செய்வது வழக்கம்.

கார்த்திகை மாதம் தீபம் விழா, அனுமன் ஜெயந்தி விழா, புரட்டாசி சனிக்கிழமைகளில் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெறும். புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை அலங்கார, அபிேஷக பூஜையும், அன்னதானமும் நடைபெறும். மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடப்படும். நேற்று காலை, 6:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, சுப்ரபாதம், திருப்பவை ஆகியவை பாடப்பட்டது. நாளை காலை, 6:00 மணிக்கு, மார்கழி, 20ம் நாள் வழிபாடாக,முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே, துயிலெழாய்... என்று தொடங்கும் பாடலை பக்தர்கள் பாட உள்ளனர்.

இதன் பொருள் : முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு முன்னமே போய், அவர்களுக்கு வரக்கூடிய நடுக்கத்தைப் போக்குகின்ற மிடுக்கனே, நித்திரை நீங்கி எழுந்திருப்பாய். நேர்மை உடையவனே, வல்லமை உடையவனே, பகைத்தவர்க்குத் துக்கத்தை தருகின்ற குற்றமற்றவனே துயில் எழாய்.

பொற் கலசங்களைப் போன்ற மென்மையான தனங்களையும், செந்நிறமான வாயையும், சிறிய இடையையும் உடைய திருமகள் போன்றவளே, நப்பின்னைப் பிராட்டியே, உறக்கம் நீங்கி எழுந்திருப்பாயாக.

நோன்புக்கு வேண்டிய திருவால வட்டத்தையும், கண்ணாடியையும், உனது கணவனையும் எங்களுக்குக் கொடுத்து இப்போதே எங்களை நீராடச் செய்வாயாக, என்பதே இதன் பொருள்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்