மார்கழியின் சிறப்பம்சம்!



மார்கழித் திங்கள் தேவர்களுக்கு வைகறைப் பொழுது. இந்த மாதம் முழுவதும் நாம் செய்யும் தெய்வ வழிபாடுகள். பண்மடங்கு பலனைப் பெற்றுத் தரும்.  அதிகாலை எழுந்து நீராடுவதும், வாசல் தெளித்து தினம் ஒரு கோலம் போட்டு, சாணப் பிள்ளையார் படித்து வைத்து, பூசணிப் பூ வைத்து வழிபடுவதும்  மார்கழியின் ஸ்பெஷல். முற்காலத்தில் எல்லோரு வீட்டிலும் பூசணிப் பூ வைப்பது இல்லை. எந்த வீட்டில் பெண் அல்லது பிள்ளை கல்யாணத்துக்காக காத்திரு க்கிறார்களோ, அவர்கள் வீட்டின் முன் மட்டும் பூசணிப்பூ வைப்பார்களாம். அவர்களைப் போன்றே பெண் அல்லது மாப்பிள்ளை தேடும் வீட்டார் இதைப் புரிந்து  கொள்வர். தைமாதம் பேசி முடிப்பார்களாம்.

மார்கழியின் மற்றொரு சிறப்பம்சம் திருப்பாவை. திருவெம்பாவை பாடல்கள் பாடி வழிபடுவது. திருப்பாவையை அருளியது ஆண்டாள். திருவெம்பாவை  மாணிக்கவாசகரால் அருளப்பட்டது. இவை இரண்டுமே பாவை நூல்கள். இன்னொரு சிறப்பம்சமும் உண்டு. இந்த நூல்களின் முதல் பாடல்களில், ஆண்டாள் தனது  திருப்பாவையில் மா என்ற எழுத்தைக் கொண்டு மார்கழித் திங்கள்.... எனத் துவங்குகிறாள். இது மாணிக்க வாசகரை நினைவுப்படுத்துகிறது. அவரோ ஆ என்ற  எழுத்தை முன்வைத்து ஆதியும் அந்தமும்... என்று தொடங்குகிறார். இது ஆண்டாளைச் சிறப்பிக்கிறது எனச் சிலாகிப்பார்கள் ஆராய்ச்சி அறிஞர்கள்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்