கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் நாளை மார்கழி 28ம் நாள் வழிபாடு



சூலுார்:சூலுார் அடுத்த அப்பநாயக்கன்பட்டி, ஸ்ரீ கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், நாளை காலை, 5:00 மணிக்கு, 28வது திருப்பாவை பாடலான, கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம் எனத்துவங்கும் பாடலை பாடி, பக்தர்கள் பெருமாளை சேவிக்கின்றனர்.

சூலுார் அடுத்த அப்பநாயக்கன்பட்டியில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும், ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள் கோவில், இருநுாறு ஆண்டுகள் பழமையானது. இங்கு, விஷ்வக்சேனர், ஆழ்வார்கள், ஆண்டாள், ஆஞ்சநேயர் மற்றும் சந்தான கோபால கிருஷ்ணருக்கு, தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளன.குழந்தை பேறு வேண்டி, இங்குள்ள சந்தான கோபால கிருஷ்ணரை வழிபட, ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு திருமஞ்சனம், பஜனைகள் நடக்கின்றன. வைகுண்ட ஏகாதசியன்று, சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பக்தி சிரத்தையுடன் பங்கேற்கின்றனர்.இக்கோவிலுக்கு, அருகில் உள்ள பாமா ருக்மணி சமேத வேணுகோபால கிருஷ்ணர் கோவிலில், திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை பாசுரங்களை பாடி வழிபட்டபின், கரிவரதராஜ பெருமாள் கோவிலில், மார்கழி பூஜைகள் துவங்குகின்றன. பஜனை கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியன்று உரியடி, திருவீதியுலா, பஜனை நடக்கிறது. இங்கு, நேற்று காலை, 5:00 மணிக்கு, 27வது திருப்பாவை பாடல் பாடப்பட்டு பூஜைகள் நடந்தன. நாளை காலை, 5:00 மணிக்கு, 28வது பாடலான, கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம் எனும் பாடலை பாடி, பக்தர்கள் பெருமாளை வழிபடுகின்றனர். பசுக்களின் பின்னே சென்று காட்டினை அடைந்து, அங்கே உண்போம். ஆயர்குலத்தில் உன்னை பெறுவதற்கு, நாங்கள் எத்தகைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். குறைவொன்றும் இல்லா கோவிந்தா! உனக்கும் எங்களுக்கும் இடையே உள்ள உறவை, யாராலும் ஒழிக்க முடியாது. அறியாத பிள்ளைகளாகிய நாங்கள், அன்பினால் உன்னை சிறிய பெயர்களால் அழைத்ததற்காக கோபம் கொள்ளாதே. இறைவ னே எங்களுக்கு அருள் புரிவாயாக! என்பதே பாடலின் பொருளாகும்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்