ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் மார்கழி சிறப்பு பூஜை

டிசம்பர் 15,2018



ஸ்ரீவில்லிபுத்துார்: நாளை (டிச.16 ) மார்கழி மாதபிறப்பை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் மதியம் 2:25 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.இதை முன்னிட்டு கோயிலில் சுக்கிராவார்குறடு மண்டபத்தில் எழுந்தருளும் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு திருப்பள்ளி எழுச்சி மற்றும் திருப்பல்லாண்டுடன் சிறப்பு பூஜைகள் செய்யப்படு கிறது. அப்போது திருப்பாவை பட்டு அணிந்து பக்தர்களுக்கு ஆண்டாள் காட்சியளிக்கி றார். இதையடுத்து தீர்த்தகோஷ்டி, சேவாகாலம் நடக்கிறது.மறுநாள் (டிச.17 )முதல் அதிகாலை 4:30 மணிக்கு நடைதிறக்கபட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

சிவன்கோயில்: ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் நாளை (டிச.16 ) முதல் அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4:30 மணிக்கு அபிேஷகம், 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடக்கிறது. இதையடுத்து தினமும் அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறக்கபட்டு, மதியம் 11 00 மணிக்கு நடைசாத்தபடுகிறது. மாலை 4:30 மணிக்கு நடைதிறக்கபட்டு இரவு 8:30 மணிக்கு நடை சாத்தபடுகிறது.ஆருத்ரா தரிசனம்டிச.23 அன்று அதிகாலை 3:00 மணிக்கு நடராஜருக்கு அபிேஷகம் நடக்க, காலை 5:00 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் பட்டர்கள், அலுவலர்கள் செய்துள்ளனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்