Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியகோவில் கும்பாபிஷேகம் ... சங்கடஹர சதுர்த்தி பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தருமபுரம் ஆதீன 27வது குருமகா சன்னிதானம் ஞானபீடாரோஹண விழா
எழுத்தின் அளவு:
தருமபுரம் ஆதீன 27வது குருமகா சன்னிதானம் ஞானபீடாரோஹண விழா

பதிவு செய்த நாள்

15 டிச
2019
06:12

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் 26வது குருமகா சன்னிதானம் குருபூஜை மற்றும் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் ஞான  பீடா ரோஹண விழா நேற்று நடைபெற்றது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள பழமை வாய்ந்த திருக்கயிலாய பரம்பரைத் தருமபுரம் ஆதீனம் 26வது குருமகா சன்னிதானமா ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞான சம்பந்த  பரமாச்சாரிய சுவாமிகள் ஆதீனத்தில் 1971ம் ஆண்டு பட்டம் ஏற்று 48ஆண்டுகள் அருட்செங்கோலாச்சி செய்துவந்தார். கடந்த 2017ம் ஆண்டு திருச்சி, திருவையாறு தேவஸ்தானங்களி ன் கட்டளை  விசாரணை மற்றும் சென்னை சமயப்பிராசார நிலைய கூடுதல் பொறுப்புவகித்த ஸ்ரீமத் குமாரசாமி தம்பிரான் சுவாமிகளை சின்னபண்டார சந்நிதியாக 26வது குருமகா சன் னிதானம் ஞானாசாரிய  அபிஷேகம் செய்துவைத்து அவருக்கு ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் என திருநாமம் சூட்டி சின்னபண்டார சந்நிதியாக நியமித்திருந்தார். 26வது கு ருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக  தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வயதுமூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 4ம் தேதி முக்தியடைந்தார். அவரது திரு மேனி தருமபுரம் மேலவீதியில் உள்ள குருமூர்த்த  வளாகத்தில் சமாதி வைக்கப்பட்டது. குருமூர்தத்திற்கு சின்னபண்டார சந்நிதி தொடர்ந்து தினந்தோறும் பூஜைகள் செய்துவந்தார். நே ற்று பத்தாம் நாள் காலை 8 மணிக்கு 26வது குருமகா  சன்னிதானம் சமாது வைக்கப்பட்ட குருமூர்த்தத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனைக ளுடன் குருபூஜையை சின்னபண்டார சந்நிதி செய்துவைத்தார்.


தொடர்ந்து அவர் ஞானபுரீஸ்வரர், தர்மபுரீஸ்வரர்,  துர்க்கை அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு மடத்தில் சொக்கநாதர் பூஜைசெய்து வழிபாடு மே ற்கொண்டனர். தொடர்ந்து மதியம் 12:05 மணியளவில் ஞானபீடத்தில் ஸ்ரீலஸ்ரீ  மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் 27வது குருமகா சன்னிதானமாக பதவியேற் கும் ஞானபீடாரோஹணம் நடந்தது. அதனை முன்னிட்டு 27வது குருமகா சன்னிதானத்தை  ஞானபீடத்தில் அமர்த்தி சிறப்பு பூஜை மற்றும் ஆராதனைகளை ஆதீன மரபுபடி திருப்பனந் தாள் காசிமடத்து இளவரசு ஸ்ரீலஸ்ரீ திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள் செய்துவைத்தார். தொடர்ந்து  27 வது குருமகா சன்னிதானம் தங்க எழுத்தாணியால் ஓலைசுவடியில் கையெ ழுத்திடும் நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து குருமகா சன்னிதானம் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.  இந்நிகழ்வில் மதுரை ஆதீன குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருண கிரிநாத பரமாச்சாரிய சுவாமிகள்,கோவை கவுமாரமட குமரகுருபரர் சுவாமிகள், காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர  சுவாமிகள், சிதம்பரம் மவுனமடம் சுவாமிகள், மயிலம் ஆதீன ம் சிவஞானபாலைய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை விசாரணை ஸ்ரீமத் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் மற்றும்  தருமபுரம் ஆதீனத்தின் 27கோயில்கள் மற்றும் தி ருவாவடுதுறை ஆதீனம் 30 கோயில்களில் இருந்து பிரசாதங்களும், காஞ்சி சங்கரமடம், சிதம்பரம் நடராஜர்கோயிலில் இருந்து 27வது குருமகா  சன்னிதானத்திற்கு பிரசாதங்கள் வழங்க ப்பட்டது. பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், மேகாலயா முன்னாள் கவர்னர் சண்முகநாதன், எம்.பி.ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.  ஜெகவீரபாண்டியன் உட்பட பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் 27வது குருமகா சன்னிதானத்திடம் அருளாசி பெற்றனர். இரவு 8 மணிக்கு பட்டினப்பிரவேசம், ஞானகொலுக்காட்சியும் நடைபெற்றது.  இதில் திரளா ன பக்தர்கள் கலந்துகொண்டனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை ... மேலும்
 
temple news
பாலக்காடு : கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், 30 யானைகள் அணிவகுத்து நின்று ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு நடந்த ஜெயந்தன் பூஜை விழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar