பதிவு செய்த நாள்
06
ஜன
2020
03:01
* ஜனவரி 3, மார்கழி 18: வாயிலார் நாயனார் குருபூஜை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பட்டாபிராமர் திருக்கோலம், ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் பவனி, மன்னார்குடி ராஜகோபாலசுவாமி, ஸ்ரீரங்கம் பெருமாள் பகல்பத்து உற்ஸவ சேவை, ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் திரிபுர சம்ஹார லீலை
* ஜனவரி 4, மார்கழி 19: ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் கோவர்த்தன லீலை, ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவைகுண்டம், திருவரகுணமங்கை கோயில்களில் திருமொழி திருநாள் தொடக்கம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி முரளிக்கண்ணன் திருக்கோலம், ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் சிவபூஜை செய்தல், திருநெல்வேலி நெல்லையப்பர் ரிஷப வாகனம்
* ஜனவரி 5, மார்கழி 20: ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் முத்துக்குறி கண்டருளல், ஸ்ரீரங்கம் பெருமாள் நாச்சியார் திருக்கோலம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி மோகன அவதாரம், ஆவுடையார் கோவில் மாணிக்கவாசகர் ஊர்த்துவ தாண்டவம், குற்றாலம் சிவன் பஞ்சமூர்த்திகளுடன் பவனி
* ஜனவரி 6, மார்கழி 21: வைகுண்ட ஏகாதசி, கார்த்திகை விரதம், பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு விழா, ஸ்ரீரங்கம் பெருமாள் முத்தங்கி சேவை, ஆவுடையார் கோவில் மாணிக்கவாசகர் பிட்டுக்கு மண் சுமந்த கோலம், திருவண்ணாமலை, திருவையாறு கோயில்களில் அயன உற்ஸவம் ஆரம்பம்
* ஜனவரி 7, மார்கழி 22: ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் சித்தர் திருக்கோலம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, கும்பகோணம் சாரங்கபாணி ராப்பத்து உற்ஸவ சேவை, குரங்கணி முத்துமாலையம்மன் பவனி, திருப்பதி ஏழுமலையான் நவநிதி மகாதீர்த்தம், நாச்சியார் கோவில் பெருமாள் தெப்பம்
* ஜனவரி 8, மார்கழி 23: பிரதோஷம், ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் தேர், சிதம்பரம் சிவன் பிச்சாடனர் திருக்கோலம், காஞ்சிபுரம், மதுரை பெருமாள் கோயில்களில் திருமொழி திருநாள் உற்ஸவம், ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆண்டாள் எண்ணெய்க்காப்பு உற்ஸவம் ஆரம்பம், கும்பகோணம் சாரங்கபாணி சூரிய பிரபை
* ஜனவரி 9, மார்கழி 24: ஆருத்ரா அபிஷேகம், சிதம்பரம் நடராஜர், சிவகாமி தேர், ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் பஞ்சபிரகார உற்ஸவம், சங்கரன்கோவில் சிவன் தேர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கள்ளர் திருக்கோலம்