Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அனலை அகற்றிய அருகம்புல் கிருஷ்ண பூஜையில் சிவ தரிசனம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இரண்டே வார்த்தைகளில் வேதங்களின் சாரம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2020
03:01

நம் இந்து மதத்திற்கு மூல புருஷராக விளங்கும் வியாச பகவானுக்கு ஆண்டு தோறும் சாதுர் மாஸ்ய விரதத்தின் முதலில் சிறப்பு வழிபாடு, வியாச பூஜை நடைபெறுவதை  அனைவரும் அறிவோம். வியாச பூஜை என்பது சாந்திரமானப்படி ஆஷாட பவுர்ணமி அன்று வருவது. இதையே குரு பவுர்ணமி என்றும் சொல்வர். எல்லோருக்கும் இந்த பவுர்ணமி உயர்ந்ததே.  எனினும் சன்னியாசிகளுக்கு மிகவும் முக்கியமானது. வேத வியாசரை நாம் ஏன் கொண்டாடுகிறோம்? இந்து மதம் மிகமிகப் பழமையானது. நம் மதத்திற்கு மூலம் வேதம். வேதத்தை அடிப்படையாகக் கொண்ட நம் மதத்திற்கு வைதிகமதம் என்று பெயர். வேதங்கள் இறைவனால் அருளப்பட்டவை. வியாசர் இவ்வேதங்களை துவாபரயுக முடிவில் நான்காகப் பிரித்துக் கேட்டு, ஸ்வரத்தோடு அத்தியாயனம் செய்தார். இவை உலகில்  தொடர்ந்து வந்து கொண்டிருக்க வேண்டுமென்று ஜைமினி, வைசம்பாயனர், ஸுமந்து, பைலர் ஆகிய நான்கு முனிவர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் வேதத்தின் தாத்பர்யத்தைப் பதினெண் புராணங்களாக்கி சூத முனிவருக்கு உபதேசித்து அனைவ ரும் பயன் அடையச் செய்தார். தவிர வேதத்தின் தத்துவங்களை உள்ளடக்கி சுருக்கமாக பிரம்ம சூத்திரம் எழுதினார். ஆதிசங்கரர் முதற்கொண்டு பலரும் இதற்கு பாஷ்யம்  (விளக்கம்) எழுதியுள்ளனர்.

மகரிஷிகளில் வியாசருக்கு இணையாக இன்னொருவரைச் சொல்ல முடியாது. வேத ங்கள், இதிகாசங்கள். புராணங்கள் எல்லாவற்றையும் காப்பாற்றி, அடுத்து வரும்  தலைமுறைகளுக்குக் கொடுத்தவர் வியாசர். அதனால்தான் அவரை "வேத வியாசர்  என்றும் "வியாச பகவான் என்றும் உலகம் போற்றுகிறது. நமது சகல தர்மங்களுக்கும்  அவரே பிதாமகர். அதுமட்டுமல்ல, வியாச பகவானுக்கு மிகவும் பரந்த மனம். அவருடைய இதயம்  விசாலமானது. அன்பு நிறைந்தது. அதனால்தான் "வியாசே விசால புத்தே  என்று அவரை வர்ணிப்பார்கள். மகாபாரதத்தையும், ஸ்ரீமத் பாகவதத்தையும் பதினெட்டுப்  புராணங்களையும் வேத வியாசர் எழுதியது மனித குலத்திற்காகத்தான். ஒரு சமயம் வேத வியாசரிடம் சென்றார்கள் சில பக்தர்கள். ""சுவாமி! நீங்கள் எழுதிய  எல்லாவற்றையும் எங்களால் படிக்க முடியவில்லை. எனவே இவற்றின் சாரத்தை எங்களுக்கு உபதேசிக்க வேண்டும்!” என்று கேட்டார்கள்.  வேத வியாசபகவான் சொன்னார், ""அன்பர்களே! நான் எழுதிய எல்லா நூல்களின் சாரம்  இரண்டே வார்த்தைகளில் அடங்கிவிட்டன. அவை "பரபீடனம் பாபம்; பரோபகாரம்  புண்யம் எனப்படும். அதாவது "பிறருக்குத் தீமை செய்வது பாவம். பிறருக்கு உதவி செய்வதே புண்ணியம். இதுதான் அத்தனை நூல்களின் சாரம்.” நம் மதத்திற்கு மூல புருஷராக விளங்கி நமக்கு நல்லனவெல்லாம் வழங்கிய வியõசபகவானை நாமும் மனதார நினைத்துப் போற்றுவோம். அந்த குரு அருளால் நமக்கு எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar