Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வராகி அம்மன் கோயிலில் வருடாபிஷேக ... மடப்புரம் காளி கோயில் சிற்பங்கள் சேதம்: பக்தர்கள் வேதனை மடப்புரம் காளி கோயில் சிற்பங்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
8வது உலக அதிசயமாகுமா தஞ்சை பெரியகோவில்?
எழுத்தின் அளவு:
8வது உலக அதிசயமாகுமா தஞ்சை பெரியகோவில்?

பதிவு செய்த நாள்

14 பிப்
2020
10:02

தஞ்சாவூர்: உலக அதிசய பட்டியலில், தஞ்சை பெரியகோவிலை இடம் பெற செய்யும் முயற்சிக்கு, ஒருங்கிணைப்புக் குழு அமைத்து, பணிகள் நடைபெற்று வருகின்றன. மன்னர் ராஜராஜ சோழன், தன், 25வது ஆட்சியாண்டில், கி.பி., 1003ல், தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டத் துவங்கி, 1010ல், கட்டுமானத்தை நிறைவு செய்தார்.தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில், முன்பு, ராஜராஜேஸ்வரர் கோவில் என்றே அழைக்கப்பட்டது. மராட்டியர் ஆட்சிக்கு பின், பிரகதீஸ்வரர் கோவில் என்றழைக்கப்படுகிறது.

கருங்கற்களால், 216 அடி உயரத்துக்கு கட்டப்பட்ட இந்த கோவில் கோபுரத்தில், கலச வடிவிலான மேற்கூரை, 80 டன்னில், ஒற்றை கல்லால் செய்யப்பட்டது. தமிழர் கட்டடக்கலைக்கு எடுத்துகாட்டாக விளக்குகிறது. கடந்த, 1987ம் ஆண்டு, யுனெஸ்கோ என்ற ஐ.நா., சபையின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால், உலகப் பாரம்பரியச் சின்னமாக, தஞ்சை பெரிய கோவில் அறிவிக்கப்பட்டது. இக்கோவிலை காண, உலகம் முழுவதில் இருந்தும், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், உலக அதிசய பட்டியலில், எட்டாவது இடத்தில், இக்கோவிலை இடம் பெற செய்ய, தஞ்சையைச் சேர்ந்த இன்ஜினியர்கள், டாக்டர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், மாணவர்கள் என, அனைத்து தரப்பினரும் இணைந்து, ஒருங்கிணைப்பு குழுவை துவங்கி, அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், சர்வதேச அளவில் உள்ள தமிழர்களிடையே, கையெழுத்து இயக்கம் நடத்தவும், இக்குழு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, தொல்லியல்துறையின் கட்டுமான வல்லுனரும், ஹிந்து அறநிலையத் துறையின் கட்டு மான உறுப்பினருமான ராஜேந்திரன் கூறியதாவது: பெரியகோவிலை, உலக அதிசய பட்டியலில் இடம் பெற வைக்கும் முயற்சியை, கும்பாபிஷேக தினத்தில் இருந்து துவங்கியுள்ளோம். இக்கோவில் கட்டுமானம் முதல், சிற்பங்கள் வரை, அனைத்தும் அதிசயமானது. உலக அதிசயத்தில், தஞ்சை கோவில் இடம்பெற, தமிழகம் மட்டு மின்றி, சர்வதேச அளவில், தமிழர்கள் ஒருங்கிணைத்து, ஆன்லைன் ஓட்டெடுப்பு நடத்த உள்ளோம். அதன்பின், உலக அதிசய குழுவை, கோவிலுக்கு அழைத்து வந்து பார்வையிட செய்வோம்.உலக அதிசய பட்டியலில், தஞ்சை பெரிய கோவில் இடம் பெரும் வரை, எங்கள் பணி ஓயாது. இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar