மார்ச் 25, பங்குனி 12: தெலுங்கு புத்தாண்டு, திருநெல்வேலி டவுன் கரியமாணிக்கப் பெருமாள் கோயிலில் ஐந்து கருடசேவை, திருப்புவனம் கோதண்டராமர் பவனி, மன்னார்குடி ராஜகோபால சுவாமி வைரமுடி சேவை, கருடவாகனம், பெரிய பெருமாள் திருநட்சத்திரம்
மார்ச் 26, பங்குனி 13: சந்திர தரிசனம், மதுரை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் உற்ஸவம் ஆரம்பம், மன்னார்குடி ராஜகோபால சுவாமி பவனி, திருப்புவனம் கோதண்டராமர் பவனி, சுவாமி மலை முருகன் வைரவேல் தரிசனம், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை,
மார்ச் 27, பங்குனி 14: சவுபாக்கிய கவுரி விரதம், மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கல்யாணம், மதுரை பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் சிம்ம வாகனம், திருப்புவனம் கோதண்டராமர் பவனி, கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை, திருவிடை மருதுார் பிரகத்குசாம்பிகை பவனி