Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம்: சிறப்பான மாதம் துலாம்: பெண்களால் நன்மை துலாம்: பெண்களால் நன்மை
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
கன்னி: பணப்புழக்கம்
எழுத்தின் அளவு:
கன்னி: பணப்புழக்கம்

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2020
09:06

முக்கிய கிரங்களில் சூரியன், சுக்கிரன் மாதம் முழுவதும் நன்மை தருவார்கள். புதன் ஜூன் 20 வரையும் ஜூலை 3க்கு பிறகும், செவ்வாய் ஜூன் 17 வரையும் நன்மை தருவார்கள்.
சூரியன் சாதகமாக காணப்படுபவதால் பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக முடிக்கலாம்.  பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கலாம். குருபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 5ம் இடத்தில் இருக்கிறார். குடும்பத்தில் குதுாகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அவர் ஜூலை 8ல் அதிசார நிவர்த்தி அடைந்து 4ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இந்த இடம் அவ்வளவு சிறப்பானது என்று சொல்ல முடியாது. குருபகவான் மன உளைச்சலையும், உறவினர் வகையில் வீண் பகையை உருவாக்குவார்.

பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்களின் வசம் ஒப்படையுங்கள். பெண்களால் நன்மை கிடைக்கும். பொன், பொருள் சேரும். சகோதரிகள் ஆதரவுடன் இருப்பர். ஜூன் 21 –  ஜூலை 3 வரை எதிலும் பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும்.
பெண்களுக்கு குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் மேம்படும். மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சிலருக்கு புதிய பதவி கிடைக்கும். சுய தொழில் புரியும்  பெண்களுக்கு வங்கிக்கடன் எளிதாக கிடைக்கும். ஆடம்பரப் பொருட்கள் தாராளமாக கிடைக்கும். தொழிலில் லாபம் குறையாது. உடல்நிலை சீராக இருக்கும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.

சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பணப்புழக்கம் கூடும். புதிய முயற்சி அனுகூலத்தைக் கொடுக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்கலாம்.
* வியாபாரிகளுக்கு நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவர். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் ஆதாயம் காண்பர்.
* தரகு,கமிஷன் சார்ந்த தொழிலில் எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கும்.
* அரசு பணியாளர்களுக்கு வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பளஉயர்வு, பதவிஉயர்வுக்கு தடையேதும் இல்லை.
* தனியார் துறையினருக்கு கோரிக்கைகள் நிறைவேறும். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். சகஊழியர்கள்  ஆதரவுடன் செயல்படுவர். வேலையின்றி இருக்கும் படித்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புண்டு.
* ஐ.டி., துறையினர் திருப்தியுடன் பணியாற்றுவர். மேலதிகாரிளின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்.
* மருத்துவர்களுக்கு நோயாளிகளின் மத்தியில் நல்ல பெயரும், மதிப்பும் கிடைக்கும்.
* வக்கீல்கள் வேலையில் நிலவிய குழப்பத்தில் இருந்து விடுபடுவர். வழக்கு, விவகாரங்களில் முடிவு சாதகமாக இருக்கும்.
* ஆசிரியர்களுக்கு குருபகவான் சிறப்பாக இருப்பதால் பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
* போலீஸ், ராணுவத்தினர் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை ஜூன் 18க்குள் கேட்டு பெறவும்.
* பொதுநல சேவகர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். மக்கள் மத்தியில் நற்பெயர் காண்பர்.
* கலைஞர்கள் திருப்தியுடன் செயல்படுவர்.  வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது.
* விவசாயிகள் வருமானம் அதிகரிக்கும். நடைமுறைச் செலவு குறையும். பாசிப்பயறு, நெல், சோளம், தக்காளி, பழ வகைகள் மூலம் வருமானம் உயரும். சொத்து வாங்க நினைப்பவர்கள் ஜூன் 18க்குள் பயன்படுத்திக் கொள்ளவும்.
* பண்ணை தொழில் கால்நடை செல்வம் பெருகும். பால்பண்ணை மூலமும் நல்ல வருவாய் கிடைக்கும்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு புதன் சாதமான இடத்தில் இருப்பதால் கூடுதல் நன்மையை  எதிர்பார்க்கலாம்.

சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்கள் ஜூன் 21ல் இருந்து ஜூலை 3 வரை சக தொழிலதிபர்களின் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். தரம் தாழ்ந்தவர்கள் சேர்க்கையால் பணம் விரயமாகலாம். எனவே எச்சரிக்கையுடன் பழகவும்.
* தனியார் துறையினர் ஜூன் 21 –  ஜூலை 3 வரை  வேலையில் கூடுதல் அக்கறையுடன் இருக்கவும். வேலையில் பொறுமை, நிதானம் தேவை.
* அரசியல்வாதிகள் ஜூன் 17க்கு பிறகு  தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். கவனம் தேவை.

நல்ல நாள் ஜூன் 15,21,22,23,24,25,28,29 ஜூலை 2,3,9,10,11,12,13
கவன நாள்:  ஜூன் 16,17,18, ஜூலை 14,15 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3,5  நிறம்: வெள்ளை, சிவப்பு

பரிகாரம்:
* வெள்ளியன்று ராகு கால துர்கை வழிபாடு
* தினமும் நீராடியதும் சூரிய நமஸ்காரம்
* சனிக்கிழமைகளில் அனுமனுக்கு விரதம்

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar