Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் ... வழிபாட்டு தலங்களுக்குள் முக கவசம் : அரசு உத்தரவு வழிபாட்டு தலங்களுக்குள் முக கவசம் : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்கள் கூட்டத்தால் குலுங்கிய அத்திவரதர் வைபவம்: ஓராண்டு நிறைவு
எழுத்தின் அளவு:
பக்தர்கள் கூட்டத்தால் குலுங்கிய அத்திவரதர் வைபவம்: ஓராண்டு நிறைவு

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2020
10:07

அத்திவரதர் வைபவம்காரணமாக, கடந்தாண்டு, பக்தர்கள் கூட்டத்தால் குலுங்கிய காஞ்சிபுரம், கொரோனா தொற்று ஊரடங்கால், இந்தாண்டு வெறிச்சோடி காணப்படுகிறது.நாட்டின் பழமை வாய்ந்த, புராதன நகரங்களில் ஒன்றான காஞ்சிபுரம், கடந்தாண்டு இதே நாளில், விழாக்கோலம் பூண்டது. சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள, வரதராஜ பெருமாள் கோவிலில், ஜூலை, 1ம் தேதி, அத்திவரதர் வைபவம் துவங்கி, 48 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கோவிலின் அனந்தசரஸ் குளத்தில் வீற்றிருந்த அத்திவரதர், 40 ஆண்டுகளுக்கு பின் வெளியே வந்ததால், நாட்டுக்கும், தங்களுக்கும் மகிழ்ச்சி கிடைக்கும் என, அவரை தரிசிக்க, வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.பக்தர்கள் வசதிக்காகவும், நிர்வாக காரணத்திற்காகவும் வழங்கப்பட்ட சிறப்பு தரிசன அனுமதி சீட்டை வைத்து, பக்தர்கள், அத்திவரதரை தரிசித்தனர்.வைபவம் துவங்கப்பட்ட, அடுத்தடுத்த நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், காலை, 5:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை வெளியூர் பக்தர்களுக்கும், மாலை, 5:00 மணிக்கு மேல் உள்ளூர் பக்தர்களுக்கும், சிறப்பு தரிசனத்திற்கு, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு
செய்தது.

எனினும், இந்த தரிசன முறையில் எழுந்த குளறுபடியால், கடும் நெரிசல் ஏற்பட்டு, சிலர் இறந்தனர்; பலர் காயமடைந்தனர். கூட்டம் அதிகரித்ததால், 7,000 போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஜூலை, 31 வரை, சயன கோலத்தில் வீற்றிருந்த அத்திவரதர், ஆகஸ்ட், 1ம் தேதிக்கு பின், நின்ற கோலத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து, 17ம் தேதி, அனந்தசரஸ் குளத்தில், மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டார். அத்திவரதர் வைபவம் நினைவாக, மாவட்டத்தின், 13 ஒன்றியங்களில், 204 இடங்களில், 40 ஆயிரம் அத்தி மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், வைபவம் நினைவாக, கலெக்டர் அலுவலக வளாகத்தில், நினைவு மண்டபம் மற்றும் அத்தி மரம் நடப்பட்டது. இவை அனைத்தும், புகைப்படம், வீடியோ மூலம் ஆவணம் செய்யப்பட்டு உள்ளது.விழா குறித்து அறநிலையத் துறையினர் கூறுகையில், அத்தி வரதர் வைபவத்தை, 1.4 கோடி பக்தர்கள் கண்டு ரசித்தனர். அவர்கள் உண்டியல்களில் செலுத்திய காணிக்கை மூலம், 8 கோடி ரூபாய் கிடைத்தது என்றனர். கடந்தாண்டு இதே நாளில், பக்தர்களால் குலுங்கிய காஞ்சிபுரத்தில், தற்போது பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக, வரதராஜ பெருமாள் கோவில் மட்டுமின்றி, பல இடங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன.- நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோயில் ஸ்ரீராமநவமி ஆஸ்தான விழாவில் நேற்று புதன்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருச்சூர் பூரம் திருவிழா நாளை நடைபெற உள்ளது.கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் ஸ்ரீராம நவமியை ... மேலும்
 
temple news
அயோத்தி; தெய்வீக மற்றும் அற்புதமான ராமர் கோவிலில் ராம் லல்லா பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு இது முதல் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் சாமியார்புதூர் ஸ்ரீஷீரடி சாய்பாபா கோயிலில் ராம நவமி விழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar