Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெரியாழ்வார் திருநட்சத்திரம் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திருமணயோகம் வந்தாச்சு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2020
05:07

காஞ்சிபுரம் அநேகதங்காவதர் கோயிலில் விநாயகர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் உள்ளது. இத்தலத்தில் தான் விநாயகர் வல்லபையை திருமணம் புரிந்தார். இங்கு தரிசிப்போருக்கு திருமண யோகம் உண்டாகும்.    
ஒருமுறை பிரம்மாவின் புத்திரரான மரீஷி மகரிஷி குளத்தில் நீராடச் சென்றார். அங்கிருந்த தாமரை மலரில் ஒரு பெண் குழந்தையை இருப்பதைக் கண்டார். ‘வல்லபை’ எனப் பெயரிட்டு வளர்த்தார். சிவபக்தையான அப்பெண்ணை கேசி என்னும் அசுரன் கடத்திச் சென்றான். அவள் தன்னை காத்தருளும்படி சிவனிடம் முறையிட்டாள் வல்லபை. அப்பெண்ணை மீட்க முதல் கடவுளான விநாயகரை அனுப்பினார் சிவன்.  
அசுரவதம் நடத்தும் முன் வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து விநாயகர் வழிபட்டார். அதன்பின் அசுரனை அழித்து வல்லபையை காப்பாற்றினார். சிவன், பார்வதி இருவரும் விநாயகருக்கும், வல்லபைக்கும் திருமணத்தை இத்தலத்தில் நடத்தி வைத்தனர்.    
மூலவர் சிவன் பெரிய லிங்க வடிவில் கிழக்கு நோக்கி உள்ளார். காஞ்சி காமாட்சியே இவருக்குரிய அம்மனாக இருப்பதால் அம்மன் சன்னதி இங்கில்லை. விநாயகர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம், ‘அநேகதங்காவத ஈஸ்வரர்’  என அழைக்கப்படுகிறார். விநாயகருக்கு ‘அநேகதங்காவதர்’ என்று பெயருண்டு. இத்தலத்தை, ‘கச்சி அநேகதங்காவதமே!’ என்று சுந்தரர் தேவாரப் பதிகத்தில் பாடியுள்ளார்.
விநாயகர் வல்லபையை மணம் முடித்த தலம் என்றாலும் இங்கு விநாயகர் மட்டுமே காட்சியளிக்கிறார். அவரது உடம்பில் வல்லபை ஐக்கியமானதாகச் சொல்வர். திருமணத்தடை போக்கும் இவருக்கு வளர்பிறை சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி நாட்களில் பக்தர்கள்  அருகம்புல் மாலை சாத்தி வழிபடுகின்றனர். திருமணம் முடிந்தபின் சுவாமிக்கு அபிேஷகம் செய்து வஸ்திரம் சாத்துகின்றனர். குபேரன் வழிபட்ட தலம் என்பதால் இங்கு வருவோருக்கு நல்ல வேலை, பதவி உயர்வு கிடைக்கும்.
கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்கை அருள்பாலிக்கின்றனர். குருபலம் பெற தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமையில் வில்வமாலை, கொண்டைக்கடலை மாலையும், ராகுதோஷம் அகல துர்கைக்கு வெள்ளிக்கிழமையில் எலுமிச்சை, செவ்வரளி மாலையும் சாத்துகின்றனர். பிரதோஷத்தன்று மாலையில் நடக்கும் நந்தீஸ்வரர் அபிேஷகத்தில் பங்கேற்றால் உடல்நலமும், நீண்ட ஆயுளும் கிடைக்கும்.  
செல்வது எப்படி: காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ.,
விசேஷ நாட்கள்: விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி
நேரம்: காலை 6:00 – 8:00 மணி
தொடர்புக்கு 044 – 2722 2084
அருகிலுள்ள தலம்: காஞ்சி காமாட்சியம்மன் கோயில்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar