Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ... தேவி ஏழை மாரியம்மன் கோவிலில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோடி நன்மை தரும் ஆடிப்பெருக்கு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2020
08:08

 தமிழ் மாதங்களில் ஒன்றான ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆடிப்பெருக்கு. நம் முன்னோர்கள் காலத்தில் மாபெரும் திருவிழாவாக கொண்டாப்பட்டு வந்த ஆடிப்பெருக்கு இப்பொழுது வெறும் சம்பிரதாயமாக மாறி கொண்டு வருகிறது.ஆடி பட்டம் தேடி விதை என்று ஒரு பழமொழி உள்ளது. ஆடி மாதத்தில் அனைத்து ஆறுகளிலும் நீர் பெருக்கெடுத்து ஓடும். அப்போது விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய தண்ணீர் தாராளமாக கிடைக்கும்.எனவே ஆடி மாதத்தில், பயிரிட்டால் தை மாதம் அறுவடை செய்யலாம். அதைத்தான் நம் முன்னோர்கள் பழமொழியில் கூறியுள்ளார்கள்.


பல ஆண்டுகளுக்கு பிறகு நமது ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடும் இது ஒரு மகிழ்ச்சியான தருணம்.ஆடிப்பெருக்கு பண்டிகை ஆடி மாதம், 18ம் தேதி ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடும்போது மக்கள் குடும்பத்துடன் ஆற்றுக்கு சென்று குளித்துவிட்டு கடவுளை வணங்குவது ஆடிப்பெருக்காக நம் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடிப்பெருக்கு தமிழர்களின் முக்கியமான திருவிழாக்களில் ஒன்று.திருமண வாழ்வுஆடிப்பெருக்கும் திருமண வாழ்வும் தமிழ் சமூகத்தில் பெரும்பாலும் புதிதாய் திருமணமான தம்பதிகளை பிரித்து வைத்திருப்பார்கள். ஆனால் அதேநேரம், ஆடிப்பெருக்கு அன்று தாலி பிரித்து கட்டுதல் என்ற ஒரு சடங்கும், பின்பற்ற பட்டு வருகிறது. புதிதாக திருமணம் முடித்த தம்பதியர், புத்தாடை உடுத்தி தாலிக்கயிறை மாற்றி மீண்டும் தாலி கட்டுவர். இதனால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் பிரியாமல் மகிழ்ச்சியாய் வாழலாம் என்பது காலங்காலமாக உள்ள ஐதீகம்.செல்வமும் பெருக்கு இந்த நாளில், ஸ்ரீ மகாலட்சுமி தேவி பூரண மகிழ்ச்சியுடன் காட்சியளிப்பார். எனவே, அந்த நேரத்தில், ஸ்ரீ லட்சுமி தேவியை வணங்கும்போது கேட்கும் வரங்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குறிப்பாக, ஆடிப்பெருக்கன்று லட்சுமி தேவியை வழிபட்டால் செல்வம், குழந்தை பாக்கியம், தைரியம் என அனைத்தும் கிடைக்கும். அதேபோல ஆடிப்பெருக்கு அன்று குபேரனை வழிபடுவது எவ்வளவு பெரிய நஷ்டத்திலிருந்தும் மீண்டு வர வழிவகுக்கும்.பலன்கள் ஆடிப்பெருக்கன்று இயற்கையையும், கடவுளையும் வழிபடுவது ஆற்றில் எவ்வாறு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறதோ, அதேபோல உங்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும், செல்வத்தையும் அதிகரிக்க செய்யும். அதுமட்டுமின்றி ஆடிப்பெருக்கு என்பது வீட்டிற்குள் அடைந்து கிடக்க கிடைக்கும் விடுமுறை அல்ல, உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியை பகிர கிடைத்த நாளாகும்.ஆனால், தற்போதை சூழலில், குடும்ப அளவில், மகிழ்ச்சியுடன், கொண்டாடலாமே! அடுத்த ஆடிப்பெருக்கில், கொரோனா முற்றிலும் ஒழிந்து, ஆடி பண்டிகையை பெரு மகிழ்ச்சியுடன் கொண்டாட, இறைவனை பிரார்த்தனை செய்வோம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar