Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பகிர்ந்து கொடுங்கள் நட்பு பாராட்டுவோம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எல்லோரும் கொண்டாடுவோம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2020
06:11

மனிதர்கள் மிருக குணத்துடன் வாழ்ந்த காலத்தில், அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக இறைவனால் அனுப்பப்படும் துாதுவர்களாக நபிமார்கள் விளங்கினர். இவர்களில் இருபத்து மூன்றாவதாக பூமிக்கு வந்த ஹஜ்ரத் ஈஸா கி.பி. 33ம் ஆண்டு ஏப். 3ல் விண்ணகத்திற்கு உயர்த்தப்பட்டார்கள். அதன் பிறகு 500 ஆண்டுகளாக எந்த நபியும் வரவில்லை. இதன் காரணமாக மக்கள் மிருகங்களாக மாறினர். அவர்களது வாழ்க்கை முறை தரம் தாழ்ந்து போனது. குறிப்பாக அரபு நாட்டினரின் வாழ்வில்  குடிப்பழக்கம், பெண்சிசு கொலை, சமூக விரோத செயல்கள் ஆக்கிரமித்தன. இத்தகைய பாவகரமான மக்களை சீர்திருத்த அல்லாஹ்வால் பூமிக்கு அனுப்பப்பட்ட மாமணியே நபிகள் நாயகம்.
 நாயகம் கி.பி. 570 ரபியுல் அவ்வல் மாதம் 12ம் தேதி மெக்கா நகரில் அவதரித்தார்.  இவரது தந்தை ஹஜ்ரத் அப்துல்லாஹ். தாய் ஹஜ்ரத் அமீனா. நாயகத்தின் முழுப்பெயர் ஹஜ்ரத் முஹம்மத் முஸ்தபா அஹ்மத் முஸ்தபா ரஸூலே கரீம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்.  நாயகம் பிறக்கும் முன்னதாக தந்தையை இழந்தார்.  தாயார் அவரது ஆறாம் வயதில் காலமானார். இதனால் பாட்டனார் ஹஜ்ரத் அப்துல் முத்தலிப்பின் பாதுகாப்பில் வளர்ந்தார். பிறகு அவரும் காலமாகவே, சிறிய தந்தை ஹஜ்ரத் அபுதாலிப் பராமரிப்பில் வளர்ந்தார். இளமையில் செல்வாக்குடனும், நற்குணத்துடனும் திகழ்ந்தார்.
மக்கள் அவரை ‘அல்அமீன்’ (நம்பிக்கையாளர்) என்றும், ‘அஸ்ஸாதிக்’ (உண்மையாளர்) என போற்றினர்.
23ம் வயதில் கதீஜா அம்மையாரை திருமணம் செய்தார். 40ம் வயதில் இவரை தனது துாதராக அல்லாஹ் அறிவித்தான். நாயகத்திற்கு 11 துணைவியார்கள் இருந்தனர். இவர்கள் மூலம் ஏழு குழந்தைகள் பிறந்தனர்.
நாயகம் இறைவனின் துாதராக அறிவிக்கப்பட்டதும், ‘‘நமது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே! நான் அவனுடயை துாதனாக இருக்கிறேன்’’ என நல்வாழ்வுக்கான வழிமுறைகளைக் காட்டினார். இதைக் கேட்ட மெக்காவாசிகள் அவரை துன்புறுத்தினர். 53 வயது வரை மக்களின் கொடுமையை அனுபவித்தார். இதன் காரணமாக மெக்காவில் இருந்து 450 கி.மீ., துாரத்திலுள்ள மதீனாவுக்கு  குடிபெயர்ந்தார். அங்கு அவரை ஆதரிப்போரின் எண்ணிக்கை பெருகியது. இதன் பின் போர் புரிந்து மெக்கா நகர மக்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளச் செய்தார். நாயகம் மிகுந்த பணிவுடையவர். பிறரது துன்பத்தை நீக்குவதில் அக்கறையுள்ளவர்.  63 வயது வரை வாழ்ந்த இவர்  கி.பி. 632 ரபியுல் அவ்வல் மாதம் 12ல் இவ்வுலகை துறந்தார். பிறந்ததும், இறந்ததும் ஒரே நாளில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாளையே மிலாடி நபி என்ற பெயரில் கொண்டாடுகிறோம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar