Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கார்த்திகை பலன்: கடகம் கார்த்திகை பலன்: கன்னி கார்த்திகை பலன்: கன்னி
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
கார்த்திகை பலன்: சிம்மம்
எழுத்தின் அளவு:
கார்த்திகை பலன்: சிம்மம்

பதிவு செய்த நாள்

15 நவ
2020
08:11


மகம்

இந்த மாதத்தில் பணிச்சுமை குறையக் காண்பீர்கள். ராசிநாதன் சூரியனின் சஞ்சாரம் தன்னம்பிக்கை அளிக்கும். நட்சத்திர அதிபதி கேதுவின் உச்ச பலமும் அவரோடு இணைந்திருக்கும் ராசி அதிபதி சூரியனும் சுக சவுகரியங்களை உண்டாக்குவதில் துணையிருப்பர். எத்தனை எதிர்ப்பு வந்தாலும் தான் செய்வது சரிதான் என்ற உறுதியுடன் செயல்படுவீர்கள். அடுத்தவர் விமர்சனத்தைப் பற்றிக் கவலைப்படாமல் சரியான பாதையில் பயணித்து வருவீர்கள். பேச்சில் தத்துவ சிந்தனை வெளிப்படும். நவ.25ல் இருந்து வீண் செலவு குறைவதால் சேமிப்பு உயரும். குடும்பத்தில் சலசலப்பு தோன்றி மறையும். அடுத்தவர்களோடு குடும்ப விவகாரங்களை விவாதிப்பதைத் தவிர்ப்பது நல்லது. உறவினர் வழியில் கலகம் தோன்றும். நெருங்கிய உறவினர் ஒருவர் பண உதவி கேட்டு மறுக்கும் சூழலுக்கு ஆளாகலாம். வாகனங்களை புதிதாக மாற்ற வங்கி உதவி கிட்டும். வீடு கட்டும் முயற்சியில் தடைகள் நீங்கும். பிள்ளைகள் பிடிவாத குணத்துடன் செயல்படுவர். காது, மூக்கு, தொண்டையில் பிரச்னை ஏற்படும். குடும்பப் பெரியவர்களோடு கருத்து வேறுபாடு தோன்றி மறையும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை இக்கட்டான சூழலில் துணை நிற்கும். பணியாளர்கள் அலுவலகத்தில் அடுத்தவர்களின் துணையோடு பணிகளை எளிதாக்கிக் கொள்வர். சுயதொழில் செய்வோர் லாபகரமான சூழலை உணர்வர். மாணவர்கள் வகுப்பில் முன்னிலை வகிப்பர். கவலையை மறந்திருக்கும் மாதம் இது.
பரிகாரம் : அரசமரத்தடி நாகரை வழிபட கவலை தீரும்.
சந்திராஷ்டமம் : நவ. 24

பூரம் :
    ராசிநாதன் சூரியனின் அமர்வு உங்களுக்கு சுகமான சூழலைத் தரும். தொடர் பணிகளுக்கு இடையேயும் அவ்வப்போது ஓய்வைக் காண்பீர்கள். நட்சத்திர அதிபதி சுக்கிரன் ஆட்சி பெறுவதால் பொழுதுபோக்கு அம்சங்களில் நாட்டம் செல்லும். அண்டை அயலாரோடு இணைந்து பொது விஷயங்களைப் பேசி மகிழ்ச்சி காண்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் குடிபுகும். பேச்சில் விவேகம் வெளிப்படும். தகவல் தொடர்பு சாதனங்கள் முக்கியமான நேரத்தில் செயலிழந்து சற்று சிரமத்தைத் தரலாம். ஜலதோஷம் காரணமாக காது, மூக்கு, தொண்டை பகுதிகளில் உண்டாகும் பிரச்னை உடல்நிலையை சற்று சோதிக்கும்.  வீட்டு உபயோகப் பொருட்கள் சேரும். உறவினர் ஒருவருக்கு உதவி செய்யும் சூழல் உருவாகும். வண்டி வாகனங்களை இயக்கும்போது கவனம் தேவை. பிள்ளைகளின் ஆலோசனை உங்கள் பணிகளை சுலபமாக்கும். பர்னிச்சர் சாமான்களை புதிதாக மாற்ற நேரம் சாதகமாக அமையும். தம்பதியருக்குள் இணக்கம் கூடும். ஆலயத் திருப்பணி, அன்னதானம் போன்ற ஆன்மிகப் பணிக்காக அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். பணிக்குச் செல்வோர் கீழ்நிலைப் பணியாளர் மற்றும் மேலதிகாரி ஆகிய இருவருக்கும் இடையே மாட்டிக் கொண்டு சிரமத்தைக் காண்பர். சுயதொழில் செய்வோர் வசீகர பேச்சால் வெற்றி காண்பர். மாணவர்கள் கணிதப் பாடத்தில் சிறப்பான வளர்ச்சி காண்பர் சுகம் தரும் மாதம் இது.
பரிகாரம் : லட்சுமி குபேர பூஜை வழிபாடு நன்மை தரும்.
சந்திராஷ்டமம் : நவ. 25

உத்திரம் 1ம் பாதம்
    ராசிநாதனும், நட்சத்திர நாதனும் ஆகிய சூரியனின் சாதகமான அமர்வு செயலில் வேகத்தைத் தரும். தடைபட்ட செயல்கள் விரைவாக நடைபெறத் துவங்கும். எதை எவரைக் கொண்டு செய்ய இயலும் என்பதை அறிந்திருப்பீர்கள். கலக்கம் ஏதுமின்றி தைரியத்துடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருள் வரவு சீராக இருக்கும். குடும்பத்தினரின் விருப்பத்தினை நிறைவேற்றுவதில் மகிழ்ச்சி கொள்வீர்கள். பக்கத்து வீட்டினர் உதவி கேட்டு உங்களை நாடி வருவர். உறவினர் குடும்ப விசேஷங்களில் முக்கியமான சந்திப்பு நிகழும். அதன்மூலம் உங்கள் குடும்பத்தில் சுபநிகழ்வுக்கான ஏற்பாட்டினை செய்ய நேரம் சாதகமாக அமையும். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்துவீர்கள். மருத்துவ செலவு உண்டாகும் வாய்ப்புள்ளதால் உடல்நிலையில் கவனம் தேவை. நவம்பர் மாத இறுதியில் வெளியூர் பிரயாணம் செல்ல நேரிடும். தொலைதுாரப் பயணத்தில் பொருளிழப்பிற்கு வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கை தேவை. நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட பொருள் ஒன்றை இந்த மாதம் வாங்குவீர்கள். வேலைக்குச் செல்வோர் கூடுதல் பணிச்சுமையை சாதாரணமாக எடுத்துக் கொள்வர். சுயதொழில் செய்வோர் தங்கள் பணியாளர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பது அவசியம். மாணவர்கள் எழுத்துத்திறனை உயர்த்திக் கொள்ள நிறைய மாதிரி தேர்வுகளை எழுதிப் பார்ப்பது நல்லது. குடும்பப் பெரியவர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றலாம். வளர்ச்சி தரும் மாதம் இது.
பரிகாரம் : மகாசக்தி மாரியம்மனை வழிபட்டு வாருங்கள்.
சந்திராஷ்டமம் : நவ. 26

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar