Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கார்த்திகை பலன்: துலாம் கார்த்திகை பலன்: தனுசு கார்த்திகை பலன்: தனுசு
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
கார்த்திகை பலன்: விருச்சிகம்
எழுத்தின் அளவு:
கார்த்திகை பலன்: விருச்சிகம்

பதிவு செய்த நாள்

15 நவ
2020
08:11


விசாகம் 4ம் பாதம்: இந்த மாதத்தில் ஜென்ம ராசியில் அமரும் சூரியன் உற்சாகத்துடன் செயல்பட வைப்பார். அடுத்தவர்கள் செய்யத் தயங்கும் செயலையும் அநாயாசமாக செய்து முடிப்பீர்கள். செயல்களில் வேகத்தோடு, விவேகத்தையும் வெளிப்படுத்தி வெற்றி காண்பீர்கள். யாரை, எப்படி வேலை வாங்க வேண்டும் என்ற கலையை அறிந்திருப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தினரோடு ஆன்மிகப் பயணம் செல்லும் வாய்ப்புண்டு. சந்தோஷம் தரும் செலவுகள் கூடும். உணவில் சுவையை விட உடல்நலத்திற்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். சுற்றியுள்ளோருக்கு உதவி செய்வதை கவுரவமாகக் கருதுவீர்கள். எனினும் நல்ல உடல் வலிமையுடன் இருப்பவர்களுக்கு உதவுவதை விட இயலாதவர்களுக்கு உதவுவது நல்லது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் அலைச்சலை மிச்சப்படுத்தும் வகையில் பயனுள்ளதாக அமையும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்வீர்கள். உறவினரால் வீண் பிரச்னை உருவாகலாம். வண்டி வாகனங்களில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆலோசனைகளைக் கண்டு பிரமிப்பீர்கள். ஆன்மிகம் சார்ந்த சந்தேகங்கள் அவ்வப்போது மனதைக் குழப்பும். காது, மூக்கு, தொண்டைப்பகுதிகளில் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். வேலைக்குச் செல்வோர் கீழ்நிலைப் பணியாளர்களின் துணையுடன் வெற்றி காண்பர். சுயதொழில் செய்வோர்  தொழிலை அபிவிருத்தி செய்யும் முயற்சியில் வெற்றி காண்பர். மாணவர்கள் கல்வி வளர்ச்சி காண்பர். பெற்றோரின் மனநிலையில் கவனம் செலுத்துவது அவசியம்.   உறுதியான செயல்பாடுகளால் வெற்றி காணும் மாதம் இது.
பரிகாரம் : நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.
சந்திராஷ்டமம் : டிச. 1, 2

அனுஷம்: ஜென்ம ராசியில் இணைந்திருக்கும் கோள்களின் தாக்கம் தன்னம்பிக்கையுடன் செயல்பட வைக்கும். நட்சத்திர அதிபதி சனியால் உண்டாகும் மன உறுதியும், ராசி அதிபதி செவ்வாயால் உண்டாகும் அசாத்தியமான தைரியமும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும். அடுத்தவரைப் பற்றிக் கவலைப்படாமல் சரியென்று பட்டதை செய்வீர்கள். அதே நேரத்தில் அடுத்தவருக்கு உதவி செய்யும் போது தகுதியானவருக்கு உதவுகிறோமா என்பதை அறிவது அவசியம். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் கலந்திருக்கும். பணவரவு தொடர்வதால் சேமிப்பு உயரும். பால்ய நணபர் ஒருவரை இந்த மாதத்தில் சந்திப்பீர்கள். அண்டை வீட்டாருடன் கருத்து வேறுபாடு உருவாகலாம். தகவல் தொடர்பு சாதனங்கள் அவ்வப்போது பழுதடைந்து சோதனையைத் தரும். உறவினருக்கு உதவி செய்ய நேரிடும். வீட்டில் பர்னிச்சர் சாமான்கள் சேரும். வாகனங்களை இயக்கும்போது கூடுதல் கவனம் தேவை. முடிந்த வரை இரவு நேரப் பிரயாணத்தைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் செயல்களில் புதிய வேகத்தினைக் காண்பீர்கள். கொலஸ்ட்ரால் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம். தம்பதியருக்குள் இணக்கம் கூடும். நண்பர்களுக்கு உதவப்போய் அதிக செலவுகளுக்கு ஆளாவீர்கள். பணியாளர்கள் போட்டி பொறாமை காரணமாக வீண்பிரச்னையை சந்திப்பர். சுயதொழில் செய்வோர் தங்கள் துறையில் சாதனை படைப்பர். மாணவர்கள் ஞாபக மறதியால் அவதிப்படுவர். பெற்றோரின் ஆலோசனை வெற்றியைத் தரும். உற்சாகமான மாதம் இது.
பரிகாரம் : கருடாழ்வார் வழிபாடு நன்மை தரும்.
சந்திராஷ்டமம் : டிச. 2

கேட்டை: ராசிநாதன் செவ்வாயின் சாதகமான சஞ்சாரம் நினைத்ததை செய்துமுடிக்கும் வலிமையைத் தரும். மனதின் மூலையில் குடியிருக்கும் இனம் புரியாத பயத்தை ஒதுக்கிவிட்டு செயல்படுவீர்கள். இந்த மாதத்தில் ஜென்ம ராசியில் உங்கள் நட்சத்திர அதிபதியும் புத்திகாரகனுமான புதனும் இணைவதால் நவ. 25 முதல் சிறப்பாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அடிக்கடி உறவினர்கள்,  நண்பர்கள் வீட்டு சுபநிகழ்வுகளில் பங்கேற்க நேரிடும். பணவரவு சிறப்பாக இருக்கும். மாதத்தின் பிற்பகுதியில் சொத்து சேர்க்கைக்கான வாய்ப்புண்டு. வங்கி சார்ந்த கடனுதவி கிடைக்கும்.  தகவல் தொடர்பு கருவிகள் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த உதவும். தொழில்முறையில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணிச்சுமையைக் குறைப்பீர்கள். அண்டை வீட்டாருடன் இணைந்து பொதுப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முற்படுவீர்கள். சொந்த பந்தங்களுடன் உறவு மேம்படும். டிசம்பர் மாதத்தில் செய்யும் பிரயாணத்தின்போது பொருளிழப்பு நேரலாம். கவனம் தேவை. பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வைப்பீர்கள். ஒரு சிலருக்கு கடன் பிரச்னை கடுமையான மன உளைச்சலை உண்டாக்கும். ஒரு சிலர் கொடுத்த கடன் திரும்ப வருமா வராதா என கவலைப்படுவர். தம்பதியருக்குள் இணக்கம் கூடும். பணியாளர்கள் தங்கள் உழைப்பிற்குரிய பலனை இந்த மாதத்தில் அடைவர். சுயதொழில் செய்வோர் தங்கள் தனித்திறமையின் மூலம் நல்ல லாபம் காண்பர். மாணவர்கள் செய்முறைத் தேர்வுகளில் முழுமையாக வெற்றி பெறுவர். பெற்றோரின் மனநிலை, உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம். ஆதாயம் தரும் மாதம் இது.
பரிகாரம் : துளசிச்செடிக்கு நீரூற்றி வணங்கி வரவும்.
சந்திராஷ்டமம் : டிச. 3

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar