Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: ஆங்கில புத்தாண்டு பலன் 2021 ரிஷபம்: ஆங்கில புத்தாண்டு பலன் 2021
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2021
மேஷம்: ஆங்கில புத்தாண்டு பலன் 2021
எழுத்தின் அளவு:
மேஷம்: ஆங்கில புத்தாண்டு பலன் 2021

பதிவு செய்த நாள்

01 ஜன
2021
04:01


அசுவனி : பொறுப்பு அதிகரிக்கும். உழைப்பால் உயர்வீர்கள். பணிச்சுமையால் குடும்பத்தினருடன் செலவழிக்கும் நேரம் குறையும். வருமான உயர்வால் சேமிப்பு கூடும். தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யும் போது எச்சரிக்கை தேவை. தங்கம், வெள்ளி நகை சேரும். மாணவர்களின் பொது அறிவு வளரும். பித்த ரோகத்தால் அவதிப்பட நேரிடலாம். பெண்கள் தங்கள் செயல்திறன் மூலம் உறவினர் மத்தியில் நன்மதிப்பை பெறுவர். பணியாளர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுடன் இடமாற்றம் கிடைக்கும். சுயதொழில் செய்வோர் அதிக அலைச்சலைக் கண்டாலும் லாபம் உயரும். முன்னேற்றம் தரும் ஆண்டாக அமையும்.

பரணி : பக்குவமாகச் செயல்பட்டு செயலில் வெற்றி காண்பீர்கள். வாழ்க்கைத் தரம் உயரும். மற்றவர் பாராட்டைப் பெறுவீ்ர்கள். நீண்ட நாளாக நிலுவையில் உள்ள தொகை வந்து சேரும். சேமிப்பு உயரும். வெள்ளிப் பொருட்கள் சேரும். உடன்பிறந்தோர் உதவி செய்வர். பிள்ளைகளின் செயல்களில் கவனம் தேவை. மாணவர்கள் முன்னிலை வகிப்பர். பெண்களுக்கு பொறுப்பு கூடும். சாப்பாட்டில் கட்டுப்பாடு அவசியம். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை வெற்றி தரும். பணியாளர்களுக்கு பணிச்சுமை உயர்ந்தாலும் பதவி உயர்வு கிடைக்கும். வளர்ச்சி தரும் ஆண்டாக அமையும்.

கார்த்திகை 1ம் பாதம் : பொறுமையுடன் செயல்படுவது நல்லது. தொழிலில் எதிர்பார்த்த லாபம் வரும். தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யலாம். குடும்பப் பிரச்னைகள் முடிவிற்கு வரும். உறவினரால் தொல்லை உண்டு. மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பர். உஷ்ண உபாதை உண்டாகலாம். பிள்ளைகளின் செயல்பாடு பெருமை தரும். வாழ்க்கைத்துணையின் மனநிலையில் கவனம் தேவை. ஆன்மிக செலவு கூடும். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். பணியாளர்கள் சக பணியாளர்களை அனுசரிப்பது நல்லது. சுயதொழிலில் நிதானமுடன் செயல்பட்டால் லாபம் கிடைக்கும். நன்மை தரும் ஆண்டு இது.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar