Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம்: ஆங்கில புத்தாண்டு பலன் 2021 கன்னி: ஆங்கில புத்தாண்டு பலன் 2021 கன்னி: ஆங்கில புத்தாண்டு பலன் 2021
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2021
சிம்மம்: ஆங்கில புத்தாண்டு பலன் 2021
எழுத்தின் அளவு:
சிம்மம்: ஆங்கில புத்தாண்டு பலன் 2021

பதிவு செய்த நாள்

01 ஜன
2021
04:01

மகம் : வாழ்க்கைத்தரம் மேம்படும். மறைமுக எதிரிகளை அடையாளம் காண்பீர்கள். நிலுவையில் உள்ள வழக்கு முடிவிற்கு வரும். அதே நேரம் பங்காளிகள் வழியில் சொத்துப் பிரச்னை தலையெடுக்கலாம். வங்கியில் கடனுதவி தடையின்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் தேவை. மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது நல்லது. பெண்களுக்கு பொறுப்பு உயரும். பரம்பரையாகத் தொடரும் வியாதிக்கு ஆளாவீர்கள். பணியாளர்கள் அலுவலகத்தில் கவுரவம் காண்பர். சுயதொழில் செய்வோர் நவீன உத்திகளால் ஆதாயம் காண்பர். வெற்றியைத் தரும் ஆண்டு இது.

பூரம் : புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். கடன் பிரச்னை முடிவிற்கு வரும். நிதி நிலை உயரும். ஆடம்பர செலவு கூடும்.  உங்கள் பேச்சுக்கு மதிப்பு உயரும். சுபநிகழ்ச்சிகளில் முன்நின்று செயல்படுவீர்கள். பிள்ளைகளின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் சேர போராட வேண்டியிருக்கும். ஆவலுடன் எதிர்பார்க்கும் நிகழ்வுகள் ஆண்டின் மத்தியில் நடக்கும். உடல்நலனில் கவனம் தேவை. வெளிநாட்டு தொடர்புடைய தொழில்கள் வெற்றி பெறும். பணியாளர்கள் அலுவலகத்தில் கவுரவம் காண்பர். ஜவுளி, நகை வியாபாரிகள் ஏற்றம் பெறுவர். வளர்ச்சி தரும் ஆண்டு இது.

உத்திரம் 1ம் பாதம் : ஓய்வின்றி செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வீண் விவகாரம் தலையெடுக்கலாம். விரக்தி எண்ணம் அவ்வப்போது கோபமாக வெளிப்படும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. பகல் நேரத்தில் செய்யும் பணிகள் சிறப்பான வெற்றியைப் பெறும். பணவரவு கூடும். வாகனம் வாங்குவீர்கள். மாணவர்கள் சகமாணவர்களுடன் ஆலோசித்து படிப்பது நல்லது. பெண்கள் பிறந்த, புகுந்த வீட்டிற்கு இடையே சிக்கி தவிப்பர். உடல்நலனில் கவனம் தேவை. அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். தொழிலில் தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள். மதிப்பை உயர்த்தும் ஆண்டு இது.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar