Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம்: ஆங்கில புத்தாண்டு பலன் 2021 தனுசு : ஆங்கில புத்தாண்டு பலன் 2021 தனுசு : ஆங்கில புத்தாண்டு பலன் 2021
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2021
விருச்சிகம்: ஆங்கில புத்தாண்டு பலன் 2021
எழுத்தின் அளவு:
விருச்சிகம்: ஆங்கில புத்தாண்டு பலன் 2021

பதிவு செய்த நாள்

01 ஜன
2021
04:01


விசாகம் 4ம் பாதம் : சிறப்பான ஆண்டு. பொருளாதார வளர்ச்சி சுமார் என்றாலும் தைரியம் குறையாது. விடாமுயற்சியால் வெற்றி காண்பீர்கள். பிள்ளைகள் வழியில் சுபச்செலவு உண்டாகும். ஆபரணங்களை பாதுகாப்பதில் கவனம் தேவை. பணி விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்தோர் ஒன்று சேர்வர். பெற்றோரின் உடல்நிலையில் கவனம் தேவை. மாணவர்கள் தரத்தேர்ச்சி காண்பர். குழப்ப நிலையில் வாழ்க்கைத் துணையின் ஆலோசனை பயனளிக்கும். உணவு பழக்கத்தில் கவனம் தேவை. பணியாளர்கள் பணிச்சுமையுடன், வீண் பழியும் சுமக்கலாம். தொழிலில் பணியாளர்களின் ஆதரவால் உயர்வீர்கள். வளர்ச்சி தரும் ஆண்டு இது.

அனுஷம் : வளமான வாழ்வு அமையும். மனதில் அவ்வப்போது சந்தேகம் தோன்றினாலும் அதை வெளிப்படுத்தாமல் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பணவரவில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டாலும் சேமிப்பு உயரும். வீண் செலவு குறையும். பிள்ளைகளின் நடவடிக்கையில் கவனம் தேவை. விலகிய சொந்தம் விரும்பி வரும். மாணவர்கள் ஆசிரியரின் ஆதரவைப் பெற போராட நேரிடும். பெண்கள் குடும்ப பிரச்னைக்கு தீர்வு காண்பர். உடல்நலம் காக்க உடற்பயிற்சி தேவை. பணியாளர்கள் பதவி உயர்வுடன் பணிச்சுமையை சந்திப்பர். கூட்டுத் தொழில் லாபகரமாக செல்லும். உயர்வு பெறும் ஆண்டு இது.

கேட்டை :  சுறுசுறுப்புடன் செயல்பட்டு வெற்றி காண்பீ்ர்கள். புதிய மனிதர்களின் சந்திப்பு திருப்பு முனையைத் தரும். சொத்து வாங்கும் முயற்சி தள்ளிப் போகும். திடீர் செலவுகளால் சேமிப்பு தடைபடும். வாகன பயணத்தில் கவனம் தேவை. குடும்ப பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு மறையும். பிள்ளைகளின் செயல்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக அமையும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் முக்கிய பொறுப்புகளை சுமக்க நேரிடும். பணியாளர்கள் நேரம் காலம் பாராது உழைக்க வேண்டியிருக்கும். உயர்வு காணும் வருடம் இது.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar